பக்கம் எண் :

178மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 18

9. பழமொழிகள்

நாலாயிரப் பிரபந்த வியாக்கியானத்தில் சில பழ மொழிகளும் கூறப்படுகின்றன. அவை:

பூப்போலே வந்து புலியானி கோளோ.

(‘பூப்போலே’ என்றிருப்பது பூனைபோலே என்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.)

மறக்குடி அறஞ்செய்யக் கெடும்
கரும்பு தின்னக் கூலி கொடுப்போரைப் போலே.
ஆனைக்குப்பு ஆடுவோரைப்போலே அநாதரித்திருந்தான்.
(ஆனைக்குப்பு ஆடுதல் - சதுரங்கம் ஆடுதல்)
சண்டாளன் ஒத்துப்போகாது.
அம்மியைக் கட்டிக்கொண்டு ஆற்றில் இழிவாரைப்போலே.
அம்புக்குச் செல்லாத விடத்தை ஆசனத்தாலே திருத்துவோம்.
மூலையிற் கிடந்ததை முற்றத்திலே யிட்டோம்.
எருது கொடுத்தார்க்கும் ஏழே கடுக்காய்.
ஊமை கண்ட கனாவாய் விடமாட்டாதது போல.
மிடறு தின்றால் சொறிய ஒண்ணாததுபோலே
கண்ணாலப் பெண்டாட்டிக்கு உள்ள அவகாலமில்லை.
துடுப்பிருக்கக் கை வேகவேணுமோ.
கள்ளரச்சம் காடு கொள்ளாது.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

10. தமிழ் நாட்டின் வடவெல்லை

திருப்பாணாழ்வார் அருளிய “அமலன் ஆதிப்பிரான்” என்னும் பாசுரத்தில் திருப்பதி மலையை “வடவேங்கட மாமலை” என்று கூறினார். இதற்கு வியாக்கியானம் கூறுவது வருமாறு:

“வடவேங்கிடம் - தமிழ் தேசத்துக்கு எல்லை நிலம்.”

பெரியவாச்சான் பிள்ளை உரை

“ திருமலை என்னாதே வடவேங்கடம் என்றது. தமிழர் தமிழுக் கெல்லை நிலம் அதுவாகச் சொல்லுகையாலே”.