பக்கம் எண் :

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு219

இவர் எழுதியுள்ள பத்தினி தெய்யோ,தென் இந்திய பௌத்த வரலாறு முதலிய நூல்களுக்கு இலங்கை அரசாங்கமும், இலங்கை சாகித்திய மண்டலமும் யூனெஸ்கோ (Unesco) தாபனமும் பரிசுகள் வழங்கியுள்ளன.

இப்போது சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தாராகிய நாம் இவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கிக் கௌரவப்படுத்தி மகிழ்கிறோம்.

பேராசிரியர் தருமரதனதேரோ அவர்கள்எழுதியுள்ள நூல்களாவன:

1. தமிழ் - சிங்கள மா அகராதி (முதல் பாகம்), 1948.

2. இரகுவமிச கதாமிருத அரும்பதவுரை, 1949.

3. மணிமேகலைச் சம்பு (மணிமேகலை என்னும் தமிழ்க் காவியத்தின் சிங்கள மொழிபெயர்ப்பு), 1950.

4. பத்தினி தெய்யோ (சிலப்பதிகாரக் காவியத்தின் சிங்கள மொழி பெயர்ப்பு) 1958. (இலங்கை அரசாங்கத்தின் ரூபாய் 1500 பரிசு பெற்றது).

5. சிங்கள மொழிமேல் தமிழ் மொழி செலுத்திய ஆதிக்கம் (Tamil Influence on Sinhalese Language - சிங்கள பாஷையில் எழுதப்பட்ட ஆராய்ச்சி நூல்), 1961.

6. தென் இந்தியாவில் பௌத்தமத வரலாறு (சிங்களத்தில் எழுதப்பட்ட நூல். 1964-ல் இந் நூலுக்கு ஸ்ரீ லங்கா சாகித்திய மண்டலம் ஒரு பரிசையும், யூனெஸ்கோ நிலையம் ஒரு பரிசையும் வழங்கியுள்ளன).

7. தமிழ் இலக்கணம் (சிங்கள மொழியில் எழுதப்பட்டது), 1965.

8. மகாவமிசம் (தமிழ் மொழிபெயர்ப்பு. - இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி பாலி பாஷையிலிருந்து மொழிபெயர்க்கப் பட்டது), 1960 (அச்சில்).

9. ஆர்திக வித்யா பிரவேசம் (சிங்களப் பொருளியல் நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு. இலங்கை அரசாங்க மொழிப் பகுதியின் வேண்டுகோளின்படி எழுதப்பட்டது).

10. சீவகசிந்தாமணி என்னும் பெருங்காப்பியத்தின் சிங்கள மொழிபெயர்ப்பு (அச்சில்)