பக்கம் எண் :

22மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 18

என்பது திருக்குறள். “கல்விதான் ஒருவனுக்குக் கெடாத விழுமிய செல்வம். மற்றச் செல்வம் எல்லாம் மாடு (செல்வம்) அல்ல” என்பது இக்குறளின் கருத்து. இதில் செல்வம் மாடு என்று கூறப்பட்டது காண்க.

மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
ஓடி எய்த்துப் பயனிலை ஊமர்காள்

என்றும்

வைத்த மாடு மடந்தை நல்லார்களும்
ஒத்தொவ் வாத உற்றார்களும் என்செய்வார்

என்றும் அப்பர்சுவாமிகள் திருச்சேறைக் குறுந்தொகைச் செய்யுளில் கூறுகிறார். இவற்றில் மாடு என்னும் சொல் செல்வம் என்னும் அர்த்தமுள்ளது காண்க. மேலும்,

மாடுதானது இல்லெனில் மானிடர்
பாடுதான் செல்வா ரில்லை

என்றும் அப்பர்சுவாமிகள் திருக்கொண்டீச்சரப் பதிகத்தில் கூறுகிறார்.

மாலே! படிச்சோதி! மாற்றேல் இனி; உனது
பாலேபோல் சீரில் பழுத்தொழிந்தேன் - மேலால்,
பிறப்புஇன்மை பெற்று, அடிக்கீழ்க் குற்றேவல் அன்று;
மறுப்புஇன்மை யான்வேண்டும் மாடு.

என்பது சடகோபர் அருளிய பெரிய திருவந்தாதி (செய்யுள் 58). இதில் மாடு என்பது பெருஞ்செல்வம் என்னும் பொருள்படுதல் காண்க.

ஆடூஉவு மகடூவு மாடு மிறியார்
காடுதேர் முயற்சியர்

என்பது பெருங்கதைச் செய்யுள்1. வேடர்கள் ஆண்களும் பெண்களும் மாடு (பொன்) மதிப்பை அறியாதவர்களாய்க் காட்டில் அலைந்து வேட்டையாடி வாழ்கின்றனர் என்பது இதன் கருத்து. இதிலும் செல்வம் மாடு என்று கூறப்பட்டது காண்க.

மாட்டுக்குப் பதிலாகப் பொன் நாணயம் வழங்கப்பட்டபோது, இத்தனை மாட்டுக்கு இவ்வளவு எடையுள்ள பொன் என்று மதிப்பிட்டு, குறிப்பிட்ட எடையுள்ள பொன் நாணயம் பண்டைக் காலத்தில் .