பக்கம் எண் :

மறைந்துபோன தமிழ் நூல்கள்47

கலைமதி வாய்மைக் கலுழ்பா வழிவருங் கற்பமைந்த
தலைமைய ரேழ்பெருந் தோங்க மும்பெற்ற நநதசச
மலையன மாமதில் வச்சிர நாடன்ன வாணுதறன்
முலையிணை தோய்ந்ததெல் லாங்கன வேயென்று முன்னுவனே.      1

நாட்டம் புதைக்கின்ற தென்னீ மடந்தை நவகண்டமே
லீட்டம் புகழ்வின்னன் மேவா ரெனவிங்ஙன் யான்வருந்த
வாட்டம் பயின்றாங் ககிலின் குழம்பணிந் தாகமெங்கும்
வேட்டந் தெரிகின்ற கொங்கைக ளென்னை மிகைசெய்தவே.      2

நகுதா மரைமலர் சூழ்வாவி சூழ்வச்ர நாடர்தங்கள்
வகுதா புரியன்ன வாணுத லீர்மற்ற வார்தழையு
மிகுநாண் மலர்களுங் கொண்மின்கள் கொள்ளாவிடின்மதுவந்
தொகுகாம னைங்கணை யாலெம தாவி துவக்குண்ணுமே.       3

செம்முக மானதர் செங்குங்கு மப்புயர் சீர்சிறந்த
மைம்மலி வாசப் பொழில்வாய் மதியன்ன வாணுதலீர்
மும்மத மாரி பொழியப் பொழிமுகில் போல்முழங்கிக்
கைம்மலை தான் வரக் கண்டதுண் டோநும் கடிபுனத்தே.      4

இயவன ராசன் கலுபதி தாமுத லெண்ண வந்தோர்
அயன்மிகு தானைய ரஞ்சுவன் னத்தவ ரஞ்சலென்னாக்
கயவர்கள் வாழ்பதி போலத் தினைப்புனங் காய்கொய்துபோம்
பயன்விளை வாம்படி பூத்தது வேங்கை பணிமொழியே.      5

பிறையார் நறுநுதற் பேதைதன் காரணத் தாற்பெரும
மறைநா ளிரவில் வருவது நீயொழி வச்சிரநாட்
டிறையா கியகலு பாமுத லானவர் யானைகணின்
றறைவாரும் விஞ்சத் தடவிகள் சூழு மணிவரையே.      6

வானது நாணக் கொடையா லுவகை வளர்த்தருளும்
சோனகர் வாழுஞ் செழும்பொழில் சூழ்ந்தது பாரனையா
டானணி வாணுதல் கண்டும் பகலே தனித்தனியே
மானமி லாதிரை தேரும் பறவைக டாமகிழ்ந்தே.      7

வில்லார் நுதலியு நீயுமின் றேசென்று மேவுதிர்சூ
தெல்லா முணர்ந்தவ ரேழ்பெருந் தாங்கத் தியவனர்க
ளல்லா வென வந்து சதிதியுந்தார வகைதொழுஞ்சீர்
நல்லார் பயிலும் பழனங்கள் சூழ்தரு நாட்டகமே.      8