பக்கம் எண் :

96மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 18

நாட்டில் கிரேக்க மொழியில் பைபிள் என்னும் பொருட்பெயராக மாறிற்று; சேரநாட்டுத் துறைமுகப் பட்டினமாகிய முசிறி என்னும் பெயர் மரிசி என்று பொருட்பெயராக மாறிற்று; சேரநாட்டுச் சூர்ணித் துரையின் பெயர் வடமொழியில் சௌர்முறையும் (கௌர்றேயம்) என்று முத்தின் பெயராக மாறிற்று; ஆந்திர தேசத்துக்கு அப்பால் உள்ள கலிங்க தேசத்தின் பெயர், தெற்கே தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் கலிங்கம் என்னும் பொருட்பெயராக மாறிற்று என்பதைக் கூர்ந்து சிந்திக்க வேண்டும்.

இந்தச் சொற்கள் சரித்திர உண்மைகளை அடக்கிக் கொண் டிருப்பது வியப்பாக இல்லையா? சொல் ஆராய்ச்சி - இனிய ஆராய்ச்சி என்பது விளங்கவில்லையா?

அடிக் குறிப்புகள்

1. புறநானூறு 392.

2. புறம் - 383, 393.

3. பெருங்கதை - உஞ்சைக் காண்டம் - நங்கை நீராடியது 204-212..