பக்கம் எண் :

நேமிநாதம் - நந்திக் கலம்பகம் - பிறநூல்கள்149

பஞ்ச வர்ணமல்ல பஞ்ச பூதமுமல்ல
நெஞ்சில் நினைவுமல்ல நினைவிற் கனவுமல்ல
அஞ்சு முகமல்ல ஆறாதா ரமுமல்ல
வஞ்சி மரகத வல்லி கொண்டாட     (ஆடின)

ஆடிய பாதா!

இராகம் : சக்கரவாகம்      தாளம் : சாபு

பல்லவி

ஆடிய பாதாஇருவர் பாடிய பாதா     (ஆடிய)

அநுபல்லவி

நீடிய வேதாதில்லை நிர்த்த வினோதா     (ஆடிய)

சரணம்

இருமுனி வரும்ஒரு நிருபனும் அருகினில்
உருகி உருகிமனம் அரகர எனவே     (ஆடிய)

அந்தர துந்துமி யுந்துடி யுந்தவில்
திந்திமி திமிதிமி திந்திமி யெனவே     (ஆடிய)

கும்ப நகிலுமையாள் சம்ப்ரமத் தொடுகாண
உம்பர் தொழவருசி தம்பர மதனில்     (ஆடிய)

ஆட்டுக் காலைத் தாரும்

இராகம் : சுவர்ணாங்கி       தாளம் : ரூபகம்

பல்லவி

ஆட்டுக் காலைத்தாரும் என்சாமிவா தாட்டுக் காலைத்தாரும்     (ஆட்டுக்)

அநுபல்லவி

ஆட்டுக் காலைத் தாரும் அம்பல வாணரே
காட்டுப் புலியும் பாம்பும் காத்துக்கொண் டிருக்கின்ற     (ஆட்டுக்)