| நேமிநாதம் - நந்திக் கலம்பகம் - பிறநூல்கள் | 35 |
5. உலோபகுணமின்மையின் பயன் உருளாத விழுநிதிய மொன்பதுக்குந் தலைவராய் இருளாத பெருங்குலத்துக் கிறைவாய்த் தோன்றுதலுந் தெருளாத களிறூர்ந்து தேசுமிக் கூறுதலும் பொருளாக முன்வரைந்த புண்ணியத்தின் பயனாகும். 13 வெறுமனையிற் பிறத்தலும் வேண்டியது பெறாமையும் சிறுமனையிற் சிதலெரிப்பச் செய்தொழிலற் றிருப்பதுவு மறுதொழிலுங் கிடையாதே யலமாந்தெய் துழல்வ துவு முறுபொருளை வரையாத உலோபத்தின் பயனாகும். 14 6. ஊனுண்ணாததன் பயன் வெறிகமழ் தண் ணாற்றம் விளங்கியநற் குடி பிறப்பும் பொறியமை நல் யாக்கையும் புத்திரர்பெற் றுவப்பதுவு மறிவினால் விளங்குதலும் அறனைமிகக் கூறுதலும் பிறிதினூணுண்ணாத பெருவிரதப் பயனாகும். 15 மக்கட்பே றிலராயும் பெறினும் பெற்றிழந்திடலும் துக்கச்செய் தொழுநோயுந் தோன்றியபல் சிரங்குகளுங் கைக்கோட்டுக் கழலைகளும் கழுவறாச் சீயுடம்பு மக்காலத் தரு ளின்றி யறைந்த நுண் பயனாகும். 16 7. தேனுண்ணாததன் பயன் ஊனமிலா வுறுப்பமைவு முறுதூய்மை யுடைமையுங் கானிலந்தோய் வின்மையுங் கண்ணிமைப் பிலாமையும் வானகத்து வச்சிரராய் மகிழ்ந்துவீற் றிருப்பதுவுந் தேனுண்ணா நல்விரதந் தேர்ந்ததன் பயனாகும். 17 மான்றோலினிடப்பட்ட மானிடர்தம் மகவாகிப் பேன் றூங்கும் மயிரினராய்ப் பேய்போலச் சுழல்வதுவும் யீன்றவளே கான்றுமிழ்ந் திழித்துரைக்கும் நிலைமையும் தேனுவந்து முன்னுண்ட தீவினையின் பயனாகும். 18 8. கட் குடியாததன் பயன் ஒள்ளியார் ஓதுவதும் ஓதினது மறவாமற் றெள்ளியறங் கேட்பதுவுங் கேட்டவற்றை யுரைப்பதுவுங் கொள்ளற்பா டுடைமையும் கூறாச்சொல் லின்மையுங் கள்ளுண்ணா நல்விரதங் காத்ததன் பயனாகும். 19 |