| கேலிக்கூத்துக்கு ஆளாகக் கூடாது. (வேகமாக நடக்கிறான்.) |
காபாலி: | பார்த்தாயா, தேவசோமா! என்னுடைய கபால பாத்திரம் அகப்பட்டுவிட்டது. என்னைக் கண்டவுடன் அந்தப் பயல் அச்சங்கொண்டு வேகமாக நடந்து தப்பித்துக் கொள்ளப் பார்ப்பதிலிருந்து பாத்திரத்தைத் திருடி னவன் அவன் தான் என்பது உறுதியாகிறது. (ஓடிச் சென்ற பிக்குவை வழி மறிக்கிறான்.) திருட்டுப் பயலே! எங்கே போவாய்? |
பௌ. பிக்கு: | இல்லை. காபாலிக சகோதர! இப்படி எல்லாம் பேசுவது சரியல்ல. (தனக்குள்) எவ்வளவு அழகுள்ள நங்கை இவள்! |
காபாலி: | ஓய்! பிக்ஷு. உன் கையில் இருப்பதைக் காட்டு. உன் சீவாப் போர்வையில் பொதிந்து வைத்திருப்பதை நான் பார்க்க வேண்டும். |
பௌ. பிக்கு: | பார்க்க அதில் என்ன இருக்கிறது? அது ஒரு மண்டை. என்னுடைய பிக்ஷைப் பாத்திரம். |
காபாலி: | அதைத்தான் நான் பார்க்கவேண்டுமென்கிறேன். |
பௌ. பிக்கு: | இல்லை. சகோதரா! அப்படிச் சொல்லாதே அதை நாங்கள் மூடி மறைத்துக் கொண்டு போக வேண்டும். உனக்கும் இது தெரிந்ததுதானே. |
காபாலி: | ஆம்: பொருள்களை இப்படி மறைத்துக் கொண்டு போவதற்காகத்தான் புத்தர், நீண்ட சீவரம் தரித்துக் கொள்ளச் சொன்னார். |
பௌ. பிக்கு: | ஆமாம். உண்மை தான். நீர் சொல்லுவது சத்தியம். |
காபாலி: | அது சம்விரதிசத்தியம்12 நான்பரமார்த்த சத்தியத்தை12 அறிய வேண்டும். |
பௌ. பிக்கு: | நன்று, நன்று. உன்னுடைய கேலிப் பேச்சு போதும். பிக்ஷைநேரம் கடந்து விடுகிறது. நான் போக வேண்டும். (அப்பால் நடக்கிறான்) |