பக்கம் எண் :

நேமிநாதம் - நந்திக் கலம்பகம் - பிறநூல்கள்97

“ மாயைதனை உதறி, வல்வினையச் சுட்டு,மலம்
சாய அமுக்கி,அருள் தானெடுத்து - நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல்
தானெந்தையார் பாதம் தான்.”

அடிக்குறிப்புகள்

1. திருவாசகம், திரச்சாழல், 14.

2. திருப்புத்தூர்ப் புராணம், கௌரி தாண்டவச் சுருக்கம், 9.

3. திருப்புத்தூர்ப் புராணம், கௌரி தாண்டவச் சுருக்கம், 10.

4. திருப்புத்தூர், கௌரி தாண்., 11.12.13.14.

5. இவ்வாறு புராணங்கள் கூறுவதில் முக்கியச் செய்தியொன்று தொக்கு நிற்கிறது. அதென்னவெனில், இத்தாண்டவங்கள் தமிழ் நாட்டு எல்லைக்குள்ளேயே செய்யப்பட்டன என்பதே. சிவபெருமானின் தாண்டவ உருவம் தமிழ் நாட்டிலே தோன்றியது என்பதற்கு இதுரு ஒரு தக்க சான்றாகும்.

வடநாட்டுக் கோவில்களிலே நடராசர் திருவுருவம் இல்லை. ஆனால் இக்காலத்தில் அங்கேயும் நடராசர் உருவத்தைச் சில இடங்களில் வைக்க முற்பட்டுள்ளனர்.

6. பஞ்சாதிகார விளக்கம், 27.