பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 57 |
| 55 | ஒருதலை யாக, உருவஞ் சிறிய குறுமுனி தனியா யுறுமலை மற்றோர் தலையாச் சமமாய் நின்றதேல், மலைகளில் மலையமோ அலதுபொன் வரையோ பெரிது? சந்து செவிவழித் தந்த கங்கையும், | | 60 | பின்னொரு வாயசங் கவிழ்த்த பொன்னியும்; வருந்திய தேவரோ டருந்தவர் வேண்ட, அமிழ்திலுஞ் சிறந்த தமிழ்மொழி பிறந்த மலையம்நின் றிழிந்து, விலையுயர் முத்தும் வேழவெண் மருப்பும் வீசிக் காழகிற் | | 65 | சந்தனா டவியுஞ் சாடி வந்துயர் குங்கும முறித்துச் சங்கின மலறுந் தடம்பணை தவழ்ந்து, மடமயில் நடம்பயில் வளம்பொழில் கடந்து குளம்பல நிரப்பி, இருகரை வாரமுந் திருமக ளுறையுளாப் | | 70 | பண்ணுமிப் புண்ணிய தாமிர வர்ணியும், எண்ணிடி லேயுமென் றிசைக்கவும் படுமோ? இந்நதி வலம்வர விருந்தநம் தொன்னகர் பொன்னகர் தன்னிலும் பாலிவுறல் கண்டனை தொடுகட லோவெனத் துணுக்குறும் அடையலர் | | 75 | கலக்கத் தெல்லையும் கட்செவிக் சுடிகையும் புலப்பட வகன்றாழ் புதுவக ழுடுத்த மஞ்சுகண் துஞ்சுநம் இஞ்சி யுரிஞ்சி உதயனு முடல்சிவந் தனனே! அதன்புறம் நாட்டிய பதாகையில் தீட்டிய மீனம், |
குறுமுனி - அகத்திய முனிவர். மலயம் - மலயமலை, பொன்வரை - இமய மலை. 55 முதல்58 வரையில் உள்ள அடிகள் புராணக் கதையைக் குறிக்கின்றன. அதனைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.) சந்நு - ஒரு முனிவர் பெயர். இவர் காது வழியாகக் கங்கை வெளிப்பட்டது. (அதனைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.) காழ் அகில் - வைரம் பொருந்திய அகில் மரம். சாடி - மோதி, குங்குமம் - குங்கும மரம். பணை - வயல். வாரம் - ஓரம். ஏயும்-ஒக்கும். அடையலர் - பகைவர். கட்செவி - பாம்பு. சுடிகை - உச்சிக் கொண்டை. மஞ்சு - மேகம். இஞ்சி - மதில். உரிஞ்சி-உராய்ந்து, உதயன் - சூரியன். பதாகை - கொடி. |