உரவு முதல் - உருக்குத்துதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
உரிமைசெய்தல் கடமை செலுத்தல் ; இறுதிக் கடன் செய்தல் , சாவுச்சடங்கு செய்தல் ; அடிமைத் தொழில் செய்தல் .
உரிமைப்பள்ளி அந்தப்புரம் .
உரிமைப்பாடு உரித்து ; உரிய கடமை .
உரிமைப்பிள்ளை தத்தெடுத்த குழந்தை .
உரிமைப்பெண் திருமணம் செய்வதற்கு உரிமையான பெண் , முறைப்பெண் .
உரிமைபாராட்டுதல் பாத்தியதை கொண்டாடல் .
உரிமைமண் சவக்குழியில் உரிமைக்காரர் போடும் மண் .
உரிமைமாணகர் காண்க : உரிமைப்பள்ளி .
உரிமையாட்சி முன்னோரால் வந்த பொருளைச் சுதந்தரமாகப் பெறுகை .
உரிமையிடம் வீட்டில் மனைவி உறையுமிடம் .
உரிமையில் காண்க : உரிமைப்பள்ளி .
உரிமைவழி உரிமை காரணமாய் வருவது ; சம்பந்த முறை .
உரியசை நேர்பு நிரைபு அசைகள் .
உரியவன் இனத்தான் ; கணவன் ; உரிமையுள்ளவன் ; அதிகாரி .
உரியள் மனைவி , உரிமையானவள் .
உரியன் காண்க : உரியவன் .
உரியாள் காண்க : உரியள் .
உரியியற்சொல் இயற்சொல்லாய் வரும் உரிச்சொல் .
உரியோன் உரியவன் ; கணவன் ; நண்பன் .
உரிவை தோல் ; பட்டை ; மரவுரி ; உரிக்கை .
உரு வடிவழகு ; தெய்வத் திருமேனி ; நிறம் ; அச்சம் ; அட்டை ; பலமுறை சொல்லுகை ; பருமை ; தோணி ; உடல் ; எலுமிச்சை ; இசைப்பாடல் ; நோய் ; உருவமுள்ளது ; உளியாற் செய்த சிற்ப வேலை ; தாலி முதலியவற்றில் கோக்கும் உரு ; தன்மை ; அகலம் .
உருக்கம் அன்பு ; இரக்கம் ; மனநெகிழ்ச்சி ; உருகுகை .
உருக்கல் இறந்த வீரனது உருச் செதுக்கிய கல் , நடுகல் ; கோயில் கட்டியவருடைய உரு .
உருக்கன் உடம்பை வாட்டும் நோய் .
உருக்காங்கல் உருகிப்போன செங்கல் .
உருக்காட்டி கண்ணாடி .
உருக்காட்டுதல் தோன்றுதல் ; உருவெளியாகத் தோன்றுதல் .
உருக்கிவார்த்தல் உருக்கின உலோகங்களைக் கருவில் வார்த்தல் .
உருக்கு எஃகு ; உருக்கின பொருள் .
உருக்கு (வி) உருக்கு என்னும் ஏவல் ; தீயிற்கரை ; வாட்டு ; வருத்து ; அழி .
உருக்குத்தட்டார் பொற்கொல்லர் .
உருக்குத்துதல் உருவம் அமைய வார்ப்படம் செய்தல் ; அம்மை குத்துதல் .
உரற்கட்டை உரல் ; உரலமைப்பதற்குரிய மரக்கட்டை .
உரற்கல் வெற்றிலை பாக்கு இடிக்கும் சிறிய உரல் .
உரற்களம் அறிஞரவை ; அறிஞர் கூடிப் பேசுமிடம் ; நெல் முதலிய தவசங்களை உரலிலிட்டுக் குற்றுமிடம் .
உரற்குழி உரலில் குற்றும் குழி ; குற்றுதற்குத் தரையில் அமைத்த குழி .
உரற்குற்றி காண்க : உரற்கட்டை .
உரற்பணை அரிசி தீட்டல் , மாவிடித்தல் காலங்களில் வெளியில் சிந்தாதபடி உரலின்மேல் வைக்கும் கூடு , உரலின்மேல் வைக்கும் வாய்க்கூடு ,
உரற்பெட்டி அரிசி தீட்டல் , மாவிடித்தல் காலங்களில் வெளியில் சிந்தாதபடி உரலின்மேல் வைக்கும் கூடு , உரலின்மேல் வைக்கும் வாய்க்கூடு ,
உரற்றுதல் பேரொலி செய்தல் , முழங்குதல் .
உரறுதல் முழங்குதல் , ஒலித்தல் , சினங்கொள்ளல் .
உரன் திண்மை ; பற்றுக்கோடு ; வெற்றி ; வலி ; ஊக்கம் , உள்ள மிகுதி ; மார்பு ; அறிவு .
உரனர் உரனுடையோர் , மனவலியுடையோர் .
உராஞ்சுதல் ஒன்றோடொன்று நெருங்கி அழுத்துதல் , உரிஞ்சுதல் , தேய்த்தல் .
உராய்ஞ்சல் உராய்ஞ்சுதல் , உரைதல் .
உராய்தல் காண்க : உராஞ்சுதல் .
உரால் உலாவுதல் ; ஓடுதல் ; விரைந்து செல்லல் .
உராவுதல் பரவுதல் , இடம்விட்டுப் பெயர்தல் ; செல்லுதல் ; வலியடைதல் ; பரத்தல் .
உரி தோல் ; மரப்பட்டை ; உரிச்சொல் ; அரை நாழி ; கொத்துமல்லி ; நாயுருவி .
உரி (வி) உரிதலைச் செய் என்னும் ஏவல் ; களை ; கழற்று .
உரிச்சீர் மூவசைச் சீர் .
உரிச்சொல் நால்வகைச் சொற்களுள் ஒன்று ; காண்க : திரிசொல் ; பெயர் வினைகளைச் சிறப்பிக்கும் அடைமொழி ; குறைச்சொல் வேர்ச்சொல் ; சொற்பொருள் விளக்கும் நிகண்டு நூல் .
உரிசை சுவை ; தீஞ்சுவை .
உரிஞ்சல் தேய்த்தல் , உராய்கை .
உரிஞ்சுதல் உராய்தல் ,தேய்த்தல் , பூசுதல் , இழுத்தல் , வற்றச் செய்தல் .
உரித்தல் ஒரு பொருளில் ஒட்டியிருக்கும் போர்வையைப் பிரித்தெடுத்தல் ; தோல் , பட்டை முதலியவற்றைக் கழற்றுதல் ; களைதல் ,
உரித்தாளி உரித்தானவன் ; சொத்துக்குரியவன் .
உரித்திரம் மஞ்சள் ; மரமஞ்சள் .
உரித்து உரியது , உரிமை , உற்ற நட்பு .
உரித்துவைத்தல் வெளிப்படுத்தி வைத்தல் ; நேரொப்பாதல் .
உரிதல் தோல் முதலியவை கழலுதல் ; ஆடை களைதல் ; பறித்தல் .
உரிப்பொருட்டலைவன் கிளவித்தலைவன் , அகப்பாடலில் கூற்று நிகழ்த்துவோன் .
உரிப்பொருள் ஐந்திணைகளுக்குமுரியனவான புணர்தல் , பிரிதல் , இருத்தல் , ஊடல் , இரங்கல் ஆகியவையும் அவற்றின் நிமித்தங்களும் .
உரிமை உரிய தன்மை ; ஒருவனுடைய பொருளை அவனுக்குப்பின் அடைதற்காகுந் தன்மை ; மனைவி ; நட்புப்பற்றிய சுதந்தரம் ; அடிமை ; கடமை ; பாத்தியதை ; பிரியம் ; சொத்து .
உரிமைக்கஞ்சி சாகுந்தறுவாயில் வார்க்குங்கஞ்சி ; ஒருவர் இறந்த அன்று அவருடைய சுற்றதாருக்குப் படைக்கும் உணவு .
உரிமைக்கட்டு இனக்கட்டுப்பாடு ; திருமணத்திற்கு உரிய இனமுறை உறவு .
உரிமைக்கடன் உரிமைபற்றிச் செய்யும்கடமை ; பிணத்திற்குரியவர்கள் செய்யுங்கடமை .
உரிமைக்காணி தாய பாகமாக வந்த நிலம் .
உரிமைக்காரன் சொத்துக்குரியவன் ; பொறுப்பு ஏற்றற்குரியவன் .
உரிமைச்சுற்றம் அடிமைக் கூட்டம் .
உரிமைசெப்புதல் மணம் பேசுதல் .
உரவு வலிமை ; மனவலிமை ; மிகுகை ; நஞ்சு .
உரவுதல் உலாவுதல் ; வலியடைதல் .
உரவுநீர் கடல் ; ஆறு .
உரவோன் வலிமையுடையவன் ; மூத்தோன் ; சாவில்லான் ; ஊக்கமுடையோன் .