உறுவது முதல் - உனினம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
உன்மத்தம் மயக்கம் ; வெறி , பைத்தியம் ; காமன் கணைகளுள் ஒன்றன் செயல் ; ஊமத்தை .
உன்மத்தன் பித்தன் , வெறியன் ; மயக்கமுடையோன் .
உன்மத்தை காண்க : ஊமத்தை .
உன்மதம் மதிமயக்கம் ; மிக்க காமம் .
உன்மனி உடலிலே உள்ள ஒரு யோகத்தானம் .
உன்மனை உடலிலே உள்ள ஒரு யோகத்தானம் .
உன்மாதம் மயக்கம் ; வெறி .
உன்மானம் நிறுக்கை ; பொருள்களை நிறுத்தப் பார்த்து அளவிடல் .
உன்முகம் முன்னோக்குதல் ; மேல்நோக்கிய முகம் , மேல்நோக்கம் ; அண்ணாந்து பார்க்கை ; ஒன்றிற் கருத்தாயிருக்கை ; அனுகூலமாய் இருத்தல் .
உன்முகன் கருத்தாயிருப்பவன் .
உன்முகி கருத்தாயிருப்பவன் .
உன்மேதை கொழுப்பு , புலால் .
உன்மை தசை பிடுங்குங் குறடு .
உன்னதம் உயர்ச்சி ; மேன்மை .
உன்னநிலை போர்க்குமுன் உன்னமரத்தால் நிமித்தம் அறியும் புறத்துறை .
உன்னம் நினைவு , கருத்து ; தியானம் ; மனம் ; நிமித்தம் குறிக்கும் ஒரு மரம் ; அன்னம் ; நீர்வாழ் பறவை ; தசை பிடுங்குங் குறடு ; அபிநயக்கைவகை .
உன்னயம் உயர்த்துகை ; உயர்வு : குதிரை சாத்திர நூல்களுள் ஒன்று .
உன்னல் நினைத்தல் ; ஆராய்வாக நினைத்தல் ; சிந்தித்தல் ; விரைந்தெழும்புதல் ; மனம் .
உன்னலர் பகைவர் .
உன்னாயங்கொடி ஒரு கொடிவகை .
உன்னி குதிரை ; அழிஞ்சில் ; செடிவகை ; தியானத்திற்குரிய பொருள் .
உன்னித்தில் உயர்தல் ; தியானித்தல் .
உன்னிப்பு கவனிப்பு ; ஊகிப்பு ; அறிவுக்கூர்மை ; குறிப்பு ; உயரம் ; முயற்சி ; மதிப்பு .
உன்னியம் ஒற்றுமை ; உரிமை , சொந்தம் .
உன்னியர் சுற்றத்தார் , உறவினர் .
உன்னு விரைந்தெழும்புகை ; இழுக்கை .
உன்னுதல் நினைத்தல் ; பேச வாயெடுத்தல் ; எழும்புதல் ; முன்னங்கால் விரலையூன்றி நிமிர்தல் .
உனகன் இழிந்தவன் .
உனினம் சிறுபூளை .
உறுவது வரற்பாலது ; இலாபம் ; ஒப்பது ; தருவது .
உறுவதுகூறல் எண்வகை விடையுள் ஒன்று , ஒன்றைச் செய்வாயா என்று வினாவியவனிடத்து நேர்வது கூறுமுகத்தால் மறுப்பதைத் தெரிவிக்கும் விடை .
உறுவதுதெரிதல் பின்வருவன அறிதல் என்னும் வணிகர் குணம் .
உறுவரர் தேவர் .
உறுவல் உறுவேன் என்னும் பொருள்படும் ஒரு தன்மை வினைமுற்று ; துன்பம் .
உறுவலி மிக்க வலிமை ; மிக்க வலிமையுடையவன் .
உறுவன் அடைந்தோன் ; மிக்கோன் ; எதிர்த்து நிற்போன் ; பெரியோன் ; முனிவன் ; அருகன் ; 'உறுவேன்' எனனும் பொருள்படும் ஒரு தன்மை வினைமுற்று .
உறுவித்தல் பொருத்துதல் ; நுகர்தல் .
உறை பெருமை ; நீளம் ; உயரம் ; பொருள் ; மருந்து ; உணவு ; வெண்கலம் ; பெய்யுறை ; ஆயுதவுறை ; நீர்த்துளி ; மழை ; காரம் ; போர்வை ; உறுப்பு ; இருப்பிடம் ; பாலிடுபிரை ; ஓர் இலக்கக் குறிப்பு ; வாழ்நாள் ; துன்பம் ; கிணற்றின் அடியில் வைக்கும் மரவளையம் ; பொன் ; பாம்பின் நச்சுப்பை .
உறைக்கப் பார்த்தல் உற்றுநோக்குதல் .
உறைக்கிணறு சுடுமண் உறையிட்ட கிணறு .
உறைகாலம் மழைக்காலம் ; வாழ்நாள் .
உறைகுத்துதல் பாலுக்குப் பிரைமோர் இடுதல் .
உறைகோடுதல் பருவமழை பெய்யாது ஒழிதல் , பெய்யவேண்டும் காலத்து மழை பெய்யாமை .
உறைச்சாலை மருந்தகம் , மருந்துச் சாலை .
உறைத்தல் துளித்தல் ; பெய்தல் ; உதிர்தல் ; நீர் சொரிதல் ; உறுதியடைதல் ; தாக்கிப் பயன்விளைத்தல் ; மோதுதல் ; மிகுதல் ; அதட்டுதல் ; அமுக்குதல் ; ஒத்தல் ; காரமாயிருத்தல் ; உறுத்தல் ; எரிதல் ; அழுந்தல் .
உறைதல் தோய்தல் ; தங்குதல் ; வாழ்தல் ; ஒழுகுதல் ; இறுகுதல் ; செறிதல் ; உறுதியாதல் .
உறைநாழி வெட்டியான் மானியம் .
உறைப்பன் வலியன் , திண்ணியன் .
உறைப்பு காரம் ; எரிவு ; சுவைக் கூர்மை ; அழுத்தம் ; வாய்ப்பு ; கொடுமை ; வேதனை ; மழைபெய்தல் ; தாக்குதல் ; மிகுதி ; பதிவு ; உறுதி .
உறைபதி உறைவிடம் , இருப்பிடம் .
உறைபோதல் உறையிட முடியாதொழிதல் ; எண்ண முடியாது போதல் .
உறைமோர் பாலில் இடும் பிரைமோர் .
உறையல் பிணக்கு , மாறுபாடு .
உறையுள் உறைகை ; தங்குமிடம் ; வீடு ; நாடு ; துயிலிடம் ; மக்கட்படுக்கை ; ஊழி ; உறை காலம் ; ஆயுள் ; வாழ்நாள் .
உறைவி உறைபவள்
உறைவிடம் இருப்பிடம் , வாழுமிடம் ; பொருள்கள் இருக்கும் இடம் , களஞ்சியம் .
உறைவு தங்குகை ; சிறு குகை ; உறைதல் ; இருப்பிடம் .
உன்மணி உயர்ந்த மணி .
உன்மத்தகம் ஊமத்தை .
உன்மத்தகி குறிஞ்சாக்கொடி .