ஊன்றிச்சொல்லுதல் முதல் - ஊனொட்டி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஊன்றித்தாங்குதல் கோலை ஊன்றித் தோணியைத் தள்ளுதல் .
ஊன்றி நடத்தல் உறுதியாய் நடத்தல் ; கோலை ஊன்றி நடத்தல் .
ஊன்றிப்படித்தல் கருத்துப் பதியுமாறு மனத்தை ஒருவழிப்படுத்திப் படித்தல் ; நிறுத்திப் படித்தல் .
ஊன்றிப்பார்த்தல் கருத்தாய்ப் பார்த்தல் ; உற்றுநோக்குதல் ; ஆராய்ந்து பார்த்தல் .
ஊன்றிப்பெய்தல் விடாமல் ஓங்கிப் பெய்தல் .
ஊன்று சார்பு .
ஊன்று (வி) வேரூன்று ; நிறுத்து ; நடு ; தாங்கு ; அழுத்து ; நிலைபெறு ; இறுகப் பிடி .
ஊன்றுகட்டு ஊன்றும்படி கட்டிய விறகுகட்டு .
ஊன்றுகால் உதைகால் , நடுகால் ; தாங்கும் முட்டுக்கால் .
ஊன்றுகோல் பற்றுக்கோடு ; கைத்தடி .
ஊன்றுதல் நிலைபெறுதல் ; சென்று தங்குதல் ; நடுதல் ; நிலைநிறுத்துதல் ; பற்றுதல் ; தீண்டுதல் ; தாங்குதல் ; முடிவுசெய்தல் ; அமுக்குதல் ; தள்ளுதல் ; உறுத்துதல் ; குத்துதல் ;
ஊனக்கண் தசையால் ஆன கண் ; கட்பொறி ; குருட்டு விழி ; உயிரைப்பற்றிய அறிவு ; குறையுணர்வு .
ஊனகத்தண்டு கருவண்டு ; அடைகுறடு .
ஊனகாரகன் இழிதொழில் செய்விப்போன் .
ஊனம் குறைவு ; குற்றம் ; தீமை ; பிணம் ; அழிவு ; பழி ; இறைச்சி கொத்தும் குறடு .
ஊனமர்குறடு இறைச்சி கொத்தும் பட்டடை மரம் .
ஊனவன் மாந்தன் .
ஊனன் குறையுள்ளோன் ; உடல் குறைபாடு உடையவன் .
ஊனாயம் விரகு , தந்திரம் .
ஊனி மாமிச உடலிலுள்ளவன் ; அமுக்கிரா .
ஊனுருக்கி இருமல்நோய் , சயரோகம் .
ஊனேறி கருப்பம் .
ஊனொட்டி உடும்பிறைச்சி .
ஊன்றிச்சொல்லுதல் தெளிவாய்ப் பேசுதல் , உறுதியாய்ச் சொல்லுதல் .