சொல்
|
அருஞ்சொற்பொருள் |
எட்டன் | எட்டமன் ; மூடன் , அறிவிலான் . |
எட்டன்மட்டம் | தாளவகை . |
எட்டாக்கை | தொலைவான இடம் . |
எட்டாரச்சக்கரம் | மிறைக்கவி , எட்டு ஆரமுள்ள சக்கரத்துள்ளே எழுத்தெல்லாம் அமையப் பாடும் சித்திரகவி . |
எட்டாரைச்சக்கரம் | மிறைக்கவி , எட்டு ஆரமுள்ள சக்கரத்துள்ளே எழுத்தெல்லாம் அமையப் பாடும் சித்திரகவி . |
எட்டி | காஞ்சிரைமரம் ; வணிகர் பெறும் பட்டம் ; வணிக மாதர் பெறும் பட்டம் ; வணிகச் சாதி . |
எட்டிகம் | ஒரு குருவிவகை ; சீந்திற்கொடி . |
எட்டிநோக்குதல் | அண்ணாந்து பார்த்தல் ; தாவிப் பார்த்தல் . |
எட்டிப்புரவு | வாணிகத்தாற் சிறந்தோர்க்கு அரசன் கொடுக்கும் நிலம் . |
எட்டிப்பூ | எட்டிப்பட்டம் பெற்ற வணிகர்க்கு அரசர் கொடுக்கும் பொற்பூ . |
எட்டிவிரியன் | ஒரு பாம்புவகை . |
எட்டிற்பத்தில் | இடையிடையே . |
எட்டினர் | நட்பினர் , சிநேகிதர் . |
எட்டு | எட்டு என்னும் எண் ; ஆசை ; இறந்தவர்களுக்குச் செய்யும் எட்டாம் நாள் சடங்கு . |
எட்டு | (வி) எட்டுஎன் ஏவல் ; தொடு ; அடை ; விலகு . |
எட்டுக்கண் விட்டெறிதல் | எங்குந் தன் ஆணை செல்லுதல் . |
எட்டுக்காற்பூச்சி | சிலந்திப்பூச்சி . |
எட்டுக்கொண்டார் | அட்டமூர்த்தி , சிவபெருமான் . |
எட்டுச்சித்தி | அட்டசித்திகள் , எண் வகைப் பேறுகள் ; அணிமா , மகிமா , கரிமா , லகிமா , பிராத்தி , பிராகாமியம் , ஈசத்துவம் , வசித்துவம் . |
எட்டுணை | எள்ளளவு . |
எட்டுத்திக்கு | எண் திசை : கிழக்கு முதலிய நான்கு பெருந்திசையும் , தென்கிழக்கு முதலிய நான்கு கோணத்திசையும் . |
எட்டுதத்திசை | எண் திசை : கிழக்கு முதலிய நான்கு பெருந்திசையும் , தென்கிழக்கு முதலிய நான்கு கோணத்திசையும் . |
எட்டுத்தொகை | சங்க காலத்தில் தொகுக்கப் பட்ட எட்டு நூல்கள் ; நற்றிணை , குறுந்தொகை , ஐங்குறுநூறு , பதிற்றுப்பத்து , பரிபாடல் , கலித்தொகை , அகநானூறு , புறநானூறு என்பன . |
எட்டுதல் | கிட்டுதல் , நெருங்குதல் , அகப்படுதல் ; புலப்படுதல் ; தாவிப் பாய்தல் ; விலகுதல் ; நீளம் போதியதாதல் . |
எட்டுமூர்த்தி | அட்டமூர்த்தி ; நிலம் , தீ , நீர் , காற்று , வானம் , சூரியன் , சந்திரன் , இயமானன் என்னும் எண்வகை வடிவுகளில் பரந்து விளங்கும் இறைவன் . |
எட்டுவரி விரியன் | காண்க : எட்டிவிரியன் |
எடாதவெடுப்பு | செய்ய இயலாத செயல் , அரிய செயல் ; தகாத செயல் . |
எடார் | வெளிநிலம் , மைதானம் , பெரும்பரப்பு நிலம் . |
எடு | (வி) தூக்கு ; ஒன்றிலிருந்தெடு ; தொடங்கு ; அங்கீகரி ; ஆராய்ந்தெடு ; இசையெடு தெரிந்துகொள் ; சும ; வாந்தியெடு . |
எடுக்கல் | தூக்கல் ; அளவிட்டறிதல் . |
எடுகூலி | சுமைகூலி , சுமை கொண்டு போதற்குத் தரும் கூலி . |
எடுகூறு | பாகப்பிரிவு , பங்குப்பிரிவு . |
எடுத்தடிமடக்கு | ஒருவர் சொன்னதைக் கொண்டே மறுத்துரைத்தல் ; முன்சென்று தடுக்கை ; இடையில் தடுத்துப் பேசுகை ; அஞ்சவேண்டியதற்கு அஞ்சாமை . |
எடுத்தடிவைத்தல் | மெள்ள அடிபெயர்த்து வைத்தல் , தளர்நடையாய் நடத்தல் . |
எச்சிற்றேமல் | எச்சில் தழும்பு , படர்தாமரை என்னும் நோய் . |
எச்சு | உயர்வு ; மிகுதி ; உயர்ந்த ஓசை ; குறைவு ; இசையில் நீண்ட ஓசை ; ஓரு வாத்தியக் கருவி . |
எசகுபிசகு | முறைகேடு , தவறான வழி . |
எசப்புச் செலவு | தரகு கொடுத்தற்குப் பிடிக்குஞ் செலவு . |
எசம் | நரம்பு , நாடி . |
எசமாட்டி | தலைவி , குடும்பத் தலைவி . |
எசமான் | தலைவன் ; கணவன் ; வேள்வித் தலைவன் . |
எசமானன் | தலைவன் ; கணவன் ; வேள்வித் தலைவன் . |
எசமானி | காண்க : எசமாட்டி . |
எசமானிக்கை | தலைமை . |
எசர் | உலைநீர் . |
எசர்கட்டுதல் | உலைநீர் வைத்தல் . |
எசு | எசுர் , நான்மறைகளுள் ஒன்று , இரண்டாம் மறை . |
எசுர்வேதம் | எசுர் , நான்மறைகளுள் ஒன்று , இரண்டாம் மறை . |
எஞ்சணி | சொல்லலங்கார வகையுள் ஒன்று , சொல் வெளிப்படாமல் எஞ்சி நிற்பது ; எஞ்சி நிற்கும் சொல் . |
எஞ்சலார் | புதியவர் . |
எஞ்சலித்தல் | குறைவு செய்தல் . |
எஞ்சாமை | குறையாமை , ஒழியாமை , முழுமை . |
எஞ்சிநிற்றல் | குறைந்த நிற்றல் , தொக்கு நிற்றல் , ஒழிந்து நிற்றல் . |
எஞ்சியசொல்லி னெய்தக் கூறல் | நூல் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று , சொன்னவற்றால் சொல்லாதவற்றையும் உய்த்தறியுமாறு கூறுகை . |
எஞ்சுதல் | குறைதல் ; கெடுதல் ; இறத்தல் , சாதல் , ஒழிதல் ; மிஞ்சுதல் ; தொக்கு நிற்றல் ; கடத்தல் ; செய்யாதொழிதல் ; தனக்குப்பின் உரிமையாக வைத்தல் . |
எஞ்ஞம் | எக்கியம் , ஓமம் , வேள்வி . |
எஞ்ஞான்றும் | எகக்காலமும் , எப்பொழுதும் , எப்போதும் . |
எட்கசி | எள்ளால் செய்யப்பட்ட உணவு , எள்ளுருண்டை . |
எட்கசிவு | எள்ளால் செய்யப்பட்ட உணவு , எள்ளுருண்டை . |
எட்கிடை | எள்ளுக்கிடத்தற்கு வேண்டிய இடம் , எள்ளளவு . |
எட்கை | தென்னை . |
எட்கோது | எள்ளுக்காய்த் தோல் . |
எட்சத்து | நல்லெண்ணெய் . |
எட்சிணி | காண்க : யட்சினி . |
எட்சி | எழுச்சி , உதயம் . |
எட்சித்தோஷம் | குழந்தை நோய்வகை . |
எட்ட | தொலைவாக , தூரமாக . |
எட்டக்கட்டுதல் | நெருங்கி வாராதிருத்தல் . |
எட்டக்கரம் | அட்டாட்சர மந்திரம் , எட்டு எழுத்துடைய ஒரு மந்திரம் ; 'ஓம் நமசிவாய நம' எனச் சைவரும் , 'ஒம் நமோ நாராயணாய நம ' என வைணவரும் கொள்ளும் மந்திரம் . |
எட்டடிப்பறவை | காண்க : எண்காற்புள் |
எட்டடிவிரியன் | ஒரு விரியன்பாம்புவகை . |
எட்டம் | நீளம் ; தொலைவு ; அடைதற்கு எளிதாந் தன்மை . |
எட்டம்பற்றுதல் | கிடைத்தல் . |
எட்டமன் | எட்டையபுரம் சமீன்தார்களின் பட்டப்பெயர் . |
எட்டர் | மங்கலப் பாடகர் ; மூடர் . |
![]() |
![]() |
![]() |