சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| எல்லை | வரம்பு ; அளவு ; அவதி ; வரையறை ; தறுவாய் ; முடிவு ; ஐந்தாம் வேற்றுமைப் பொருள் ; சூரியன் ; பகல்வேளை ; நாள் ; இடம் ; கூப்பிடு தொலைவு . |
| எல்லைக்கட்டு | கட்டுப்பாடு ; வரம்பு . |
| எல்லைக்கல் | எல்லையறிய நாட்டி வைக்கும் கல் . |
| எல்லைக்காவல் | எல்லையறிய நாட்டி வைக்கும் கல் . |
| எல்லைக்காவல் | ஊர்ப்புற எல்லைக்காவல் . |
| எல்லைக்குறிப்பு | எல்லை அடையாளம் ; வழி அளவைக் காட்டுங் குறி . |
| எல்லைகட்டுதல் | தீர்த்தல் ; வரம்பு வைத்தல் ; முடிவுசெய்தல் ; வரையறுத்தல் ; கட்டுப் படுத்துதல் |
| எல்லைகடத்தல் | வரம்புமீறுதல் , அளவிறத்தல் ; நியாயம் மீறுதல் . |
| எல்லைகுறித்தல் | எல்லைகட்டுதல் ; வரம்பேற் படுத்துதல் . |
| எல்லைச்சதிரி | பெருஞ்சமர்த்தன் . |
| எல்லைத்தரிசு | ஊர் ஓரங்களிலுள்ள கரம்பு நிலம் . |
| எல்லைத்தீ | ஊழித்தீ , வடவைத்தீ . |
| எல்லைப்படுத்துதல் | எல்லை கட்டுதல் ; முடிவு படுத்துதல் . |
| எல்லைப்பத்திரம் | எல்லை வழக்குத் தீர்த்து எழுதும் பத்திரம் . |
| எல்லைப்பிடாரி | ஊர்ப்புற எல்லைக் காவல் பெண் தெய்வம் . |
| எல்லைமால் | நான்கு எல்லை . |
| எல்லைமானம் | எல்லை ; அளவு . |
| எல்லையின்மை | அளவின்மை . |
| எல்லையோடுதல் | எல்லையயைச் சுற்றிவருதல் . |
| எல்லைவிருத்தி | ஊரெல்லையைக் காக்கும் பணி . |
| எல்லோ | ஒரு வியப்பிரக்கச் சொல் . |
| எல்லோமும் | காண்க : எலலேமும் . |
| எருதுகட்டு | சல்லிக்கட்டு . |
| எருதுமறித்தல் | பசுவுடனே காளை சேர்த்தல் , எருது பொலிதல் . |
| எருந்தி | இப்பி , கிளிஞ்சில் . |
| எருந்து | உரல் ; காண்க : எருந்தி . |
| எருமணம் | செங்குவளை ; சாணி நாற்றம் . |
| எருமன்றம் | எருக்குவித்து வைக்கும் இடம் ; இடையர் சேரியிலுள்ள அம்பலம் . |
| எருமுட்டை | காய்ந்த சாணம் , வறட்டி . |
| எருமை | எருமைமாடு , காரான் ; எருமைமறம் ; யமன் . |
| எருமைக்கடா | ஆண் எருமை . |
| எருமைக்கடாரி | பெண் எருமை . |
| எருமைக்கப்பல் | புகையிலைவகை . |
| எருமைக் கற்றாழை | ஒருவகைக் கற்றாழை . |
| எருமைக் காஞ்சொறி | ஒருவகைக் காஞ்சொறிப்பூடு . |
| எருமைக்கொற்றான் | ஒருவகைக் கொற்றான் கொடி . |
| எருமைச்சுறா | ஒரு மீன்வகை . |
| எருமைத் தக்காளி | சீமைத் தக்காளி , பெருந் தக்காளி . |
| எருமைநாக்கள்ளி | கள்ளிவகை . |
| எருமைநாக்கி | ஒரு மீன்வகை ; சனகிப் பூடு . |
| எருமைநாக்கு | ஒரு மீன்வகை |
| எருமைப்போத்து | எருமைக்கடா . |
| எருமைமறம் | பகைவர் படையைத் தனியனாய் நின்று வீரனொருன் தாக்குகை , வீரன் ஒருவன் தன் படை முதுகிடவும் பகைவர் படையைத் தான் அஞ்சாது எதிர்த்து நிற்கும் புறத்துறை . |
| எருமைமுல்லை | ஒருவகை முல்லை . |
| எருமைமுன்னை | முன்னைமரவகை . |
| எருமையின்றிசை | யமன் திக்கு , தெற்கு . |
| எருவண்டு | எருவிலிருந்து உண்டாகும் ஒருவகை வண்டு . |
| எருவறட்டி | காண்க : எருமுட்டை . |
| எருவாரம் | எரு உரம் இட்டதற்காகக் கொடுக்கும் தவசப் பங்கு . |
| எருவை | பருந்து ; கழுகு ; கொறுக்கச்சி ; பஞ்சாய்க் கோரை ; கோரைக்கிழங்கு ; செம்பு ; அரத்தம் ; கழுதை . |
| எல் | ஒளி ; சூரியன் ; வெயில் ; பகல் ; இரவு ; நாள் ; பெருமை ; இகழ்ச்சி , இகழ்மொழி . |
| எல்கை | எல்லை . |
| எல்ல | எல்லா , ஏல , ஏடி , தோழி முன்னிலைப் பெயர் . |
| எல்லம் | இஞ்சி . |
| எல்லரி | கைம்மணி ; ஒருவகைப் பறை , சல்லி என்னும் வாத்தியம் . |
| எல்லவரும் | காண்க : எல்லாரும் . |
| எல்லவன் | சூரியன் ; சந்திரன் . |
| எல்லா | விளிப்பெயர் ; முன்னிலைப் பெயர் . |
| எல்லாம் | முழுதும் . |
| எல்லார் | தேவர் . |
| எல்லாரும் | யாவரும் . |
| எல்லி | சூரியன் ; பகல் ; இரவு ; இருள் . |
| எல்லிநாதன் | கதிரவன் ; சந்திரன் . |
| எல்லிநாயகன் | கதிரவன் ; சந்திரன் . |
| எல்லிப்பகை | கதிரவன் ; சந்திரன் . |
| எல்லிமன் | கதிரவன் ; சந்திரன் . |
| எல்லிமனை | சூரியன் மனைவி , தாமரை . |
| எல்லியறிவன் | இரவுப்பொழுதை அறியும் கோழிச்சேவல் . |
| எல்லிருள் | விடியற்காலத்திருள் ; இரவின் இருள் . |
| எல்லினான் | எல்லோன் , கதிரவன் . |
| எல்ல¦ரும் | நீவிர் யாவிரும் , எல்லார் நீங்களும் , நீங்களெல்லாம் . |
| எல்லுதல் | ஒளி மழுங்குதல் . |
| எல்லே | தோழியை விளிக்கும் சொல் , ஒரு வியப்பு இரக்கச் சொல் ; வெளிப்படையாக ; வெளியே . |
| எல்லேமும் | எல்லார் நாங்களும் , நாமெல்லாரும் . |
| எல்லேலெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
|
|
|