சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| எழுமுனிவர் | இருடிகள் எழுவர் ; அகத்தியன் , புலத்தியன் , அங்கிரசு , கௌதமன் , வசிட்டன் , காசிபன் , மார்க்கண்டன் , எனப் பிங்கல நிகண்டு கூறும் ; வடமொழி நூல்களுள் அத்திரி , பிருகு , குச்சன் , வசிட்டன் , கௌதமன் , காசிபன் , அங்கிரசு என்றும் மரீசி , அத்திரி , அங்கிரசு , புலத்தியன் , புலகன் , சிரது , வசிட்டன் என்றும் வெவ்வேறாக உரைப்பர் . |
| எழுமை | உயர்ச்சி ; ஏழ்வகை ; ஏழுவகைப் பிறப்பு ; ஏழுமுறை பிறக்கும் பிறப்பு . |
| எழுவகை அளவை | நிறுத்தளத்தல் ,பெய்தளத்தல் , சார்த்தியளத்தல் , நீட்டியளத்தல் , தெறித்தளத்தல் , தேங்க முகந்தளத்தல் , எண்ணியளத்தல் என்பன . |
| எழுவகைத் தாது | உடம்பில் உள்ள எழுவகைப் பொருள்கள் ; இரதம் , குருதி , எலும்பு , தோல் , இறைச்சி , மூளை , சுக்கிலம் . |
| எழுவகை நதி | ஏழு புண்ணிய ஆறுகள் ; கங்கை , குமரி , யமுனை , நருமதை , காவிரி , சரசுவதி , கோதாவரி . |
| எழுவகைப் பிறப்பு | காண்க : எழுபிறப்பு . |
| எழுவகைப் பெண்பருவம் | பெண்களின் வளர்சசியில் உள்ள ஏழு நிலைகள் ; பேதை , பெதும்பை , மங்கை , மடந்தை , அரிவை , தெரிவை , பேரிளம்பெண் . இவற்றின் அகவை முறையை 7 ,11 ,13 ,19 ,25 ,31 ,40 ஆகும் . |
| எழுவகை மேகம் | சம்வர்த்தம் , ஆவர்த்தம் , துரோணம் , புட்கலாவர்த்தம் , காளமுகி , சங்காரித்தம் , நீலவருணம் என்பன . இவை பொழிவன முறையே மணி , நீர் , பொன் , பூ , மண் , கல் , தீ . |
| எழுவரைக் கூடி | ஒருவகைப் பாடாணம் , சவ்வீரம் என்னும் நஞ்சு . |
| எழுவாய் | தொடக்கம் , உற்பத்தி ; முதல் ; முதல் வேற்றுமை ; கருத்தா . |
| எழுவாய் வேற்றுமை | முதலாம் வேற்றுமை , பெயர் வேற்றுமை , பெயர் தோன்றிய துணையால் உருபும் விளியும் ஏலாது பிறிதொன்றனொடு தொகாது நிற்கும் நிலைமை . |
| எழுவாயெழுஞ்சனி | மகநாள் . |
| எழுவான் | கிழக்குத் திசை . |
| எழுவுதல் | எழுப்புதல் , எழச்செய்தல் ; ஓசையுண்டாக்குதல் . |
| எள் | ஒருவகைச் செடி , ஒரு தவசம் ; ஒரு சிறிய அளவு ; நிந்தை . |
| எள் | (வி) எள்என் ஏவல் , நிந்தி , இகழ் . |
| எள்குதல் | இகழ்தல் , அஞ்சுதல் ; ஏய்த்தல் ; கூசுதல் ; வருந்துதல் . |
| எள்ள | ஓர் உவமவுருபு . |
| எள்ளல் | இகழ்தல் ; நிந்தித்தல் ; இழிவாகப் பேசல் ; தள்ளல் ; சிரித்தல் . |
| எள்ளளவும் | சிறிதளவும் . |
| எள்ளற்பாடு | இகழ்ச்சி , நிந்தை , நகைப்பு . |
| எள்ளிடை | எள்ளளவு . |
| எள்ளு | எள் . |
| எள்ளுக்கடை | எள்ளுத்தாள் . |
| எள்ளுச்செவி | ஒரு பூண்டுவகை . |
| எள்ளுண்டை | எள்ளுருண்டை , எள்ளும் வெல்லமும் கலந்து செய்யப்படும் சிற்றுண்டி . |
| எள்ளுதல் | இகழ்தல் , இழிவாகப் பேசுதல் ; தள்ளுதல் ; ஒப்பாதல் . |
| எள்ளுநர் | இகழ்பவர் . |
| எள்ளுப்பிண்ணாக்கு | எண்ணெய் ஆட்டி எடுத்த எள்ளின் சக்கை . |
| எள்ளுருண்டை | காண்க : எள்ளுண்டை . |
| எள்ளுரை | இகழ்ச்சியுரை . |
| எள்ளோரை | எள்ளுச்சோறு , எள்ளோதனம் . |
| எழுந்தருளுதல் | வருதல் ; புறப்படுதல் ; தோன்றல் ; சிலை முதலியவற்றினிடமாகத் தெய்வம் வெளிப்படுதல் . |
| எழுந்தருளுந்திருமேனி | உற்சவமூர்த்தி , திருவிழாவில் எழுந்தருளப் பண்ணும் தெய்வத் திருமேனி . |
| எழுந்தருளுநாயகர் | உற்சவமூர்த்தி , திருவிழாவில் எழுந்தருளப் பண்ணும் தெய்வத் திருமேனி . |
| எழுந்திருத்தல் | எழுதல் ; இருக்கையை விட்டு எழுதல் ; எழுந்து பின் இருத்தல் . |
| எழுந்திருப்பு | எழும்புதல் ; எழுந்து நிற்கை . |
| எழுந்தேற்றம் | இறுமாப்பு ; துணிவு ; எழுந்தமானம் ; கவனிப்பின்மை ; பெருமை ; விழாவில் சாமி புறப்பாடு . |
| எழுநகரம் | சிறப்புடைய ஏழு புண்ணிய நகரங்கள் ; அயோத்தி , மதுரை , மாயை , காசி , காஞ்சி , அவந்தி , துவாரகை . |
| எழுநயம் | சமணர் கூறும் எழுவகை வாதமுறை , இதனை வடமொழியில் சப்தபங்கி நியாயம் என்பர் . |
| எழுநரகம் | எழுவகையான நரகங்கள் ; அள்ளல் , இரௌரவம் , கும்பிபாகம் , கூடசாலம் , செந்துத் தானம் , பூதி , மாபூதி , (சமணர் கருத்துப்படி) பெருங்களிற்று வட்டம் , பெருமணல் வட்டம் , எரிபரல் வட்டம் ; அரிபடை வட்டம் ; புகை வட்டம் ; பெருங்கீழ் வட்டம் , இருள் வட்டம் என்பன . |
| எழுநா | ஏழு நாக்கு ; ஏழு நாவையுடையதாகிய அக்கினி , நெருப்பு ; கொடிவேலி . |
| எழுநாயிறு | காண்க : எழுஞாயிறு . |
| எழுநிலைக்கோபுரம் | ஏழடுக்குக் கட்டடமாய் ஒன்றன்மேல் ஒன்றாய் அமைக்கப்பட்ட கோபுரம் . |
| எழுநிலைமாடம் | ஏழடுக்கு மாளிகை . |
| எழுப்பம் | எழும்புகை , எழுகை , உயர்வு ; கிளர்ச்சி . |
| எழுப்பு | (வி) துயிலெழுப்பு ; தூக்கு ; உயிரோடெழுப்பு ; சண்டைமூட்டு ; கிளப்பிவிடு ; வீடெழுப்பு ; இசையெழுப்பு . |
| எழுப்புதல் | எழும்பச்செய்தல் ; துயில்எழுப்புதல் ; உயிர்பெற்றெழச் செய்தல் ; ஒலியெழுப்புதல் ; ஊக்கம் உண்டாக்குதல் ; கலகம் முதலியென மூட்டுதல் . |
| எழுபவம் | உயர்பிறப்பு ; எழுவகைப் பிறவி . |
| எழுபிறப்பு | எழுவகைப் பிறப்பு ; தேவர் , மனிதர் , விலங்கு , பறப்பன , ஊர்வன , நீர்வாழ்வன , தாவரம் ; மேல்வரும் பிறப்பு . |
| எழுபோது | விடியற்காலம் ; உதயகாலம் . |
| எழும்பல் | நில விவரம்பற்றிய கைக்குறிப்புப் புத்தகம் . |
| எழும்புதல் | உயர்தல் ; உறக்கம்விட்டெழுதல் . |
| எழுமதம் | நூலாசிரியருக்குரிய எழுவகைக் கொள்கைகள் ; அவை , உடன்படல் , மறுத்தல் , பிறர்தம் மதம் மேற்கொண்டு களைதல் , தான் ஒன்றனை நாட்டி அதனை நிலைநிறுத்தல் , இருவர் மாறுகோள் ஒருதலை துணிவு , பிறர்நூற் குற்றங் காட்டல் , பிறர் மதத்தைக் கொள்ளல் என்பன , யானைமதம் , கன்னம் இரண்டு , கண் இரண்டு , கைத்துளை இரண்டு , குறி ஒன்று ஆகிய ஏழிடத்திலிருந்து தோன்றும் மதநீர் . |
| எழுமலை | கதிரவன் தோன்றும் மலை , உதயகிரி ; ஏழு பெருமலைகள் ; கயிலை , இமயம் , மந்தரம் , விந்தம் , நிடதம் , ஏமகூடம் , நீலகிரி . |
| எழுமான் | எழுமான் பூண்டு . |
| எழுமான்புலி | எழுமான் பூண்டு . |
| எழுமீன் | ஏழு நட்சத்திரங்கள் , சப்தரிஷி மண்டலம் . |
| எழுமுகனை | தொடக்கம் . |
| எழுமுடி | வெல்லப்பட்ட ஏழரசர் முடியாற் செய்த சேரன் மாலை . |
| எழுமுரசு | எழுச்சி முரசு , அரசன் பயணத்தை அறிவிக்கும் முரசு . |
| எழுதாக்கேள்வி | மறை ,வேதம் . |
| எழுதாவெழுத்து | அச்செழுத்து . |
| எழுதிக்கொள்ளுதல் | பதவிசெய்தல் , அடிமையாக்குதல் ; விண்ணப்பம் செய்தல் . |
| எழுதிவைத்தல் | சாசனம் செய்துவைத்தல் . |
| எழுதீவு | நாவல் , இறலி , இலவம் , கிரவுஞ்சம் , குசை , தேக்கம் , புட்கரம் என்னும் ஏழு தீவுகள் . |
| எழுதுகொடி | முலைமேல் எழுதும் தொய்யில் . |
| எழுதுகோல் | தூரியக்கோல் ; ஓவியம் வரையும் கோல் ; எழுத்து வரையும் கோல் . |
| எழுதுதல் | எழுத்து வரைதல் ; ஓவியம் வரைதல் ; இயற்றுதல் ; விதியேற்படுத்துதல் ; பாவை முதலியன ஆக்குதல் ; அழுந்தப் பதித்தல் ; பூசுதல் . |
| எழுதுபடம் | துணிமேல் எழுதிய படம் . |
| எழுதுவரிக்கோலம் | மகளிர் ஆகத்து எழுதுங்கோலம் . |
| எழுதுவரிகோலம் | மகளிர் ஆகத்து எழுதுங்கோலம் . |
| எழுந்தபடி | நிலைத்தபடி , நேரிட்டபடி , கண்டபடி . |
| எழுந்தருள்படி | தெய்வத் திருமேனிப் புறப்பாடு ; பெரியோர் வருகை . |
| எழுந்தருளியிருத்தல் | தெய்வம் குடிகொண்டருளுதல் ; பெரியோர் வீற்றிருத்தல் . |
|
|
|