சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| என்றும் | என்றைக்கும் , எந்நாளும் , எப்போதும் . |
| என்றுமபாவம் | என்றும் இன்மை , ஒருபோதும் இல்லாமையைத் தெரிவிக்கும் தன்மை . |
| என்றூழ் | சூரியன் ; வெயில் ; கோடைக்காலம் . |
| என்றூழி | என்றைக்கும் , எப்போதும் . |
| என்றென்றைக்கும் | எக்காலத்தும் ; ஒரு நாளும் ; ஒருபொழுதும் . |
| என்றைக்கு | எந்நாள் , எப்போதைக்கு . |
| என்றைக்கும் | காண்க : என்றென்றைக்கும் . |
| என்ன | யாது ; என்ன பயன் ; ஓர் உவமவுருபு . |
| என்னணம் | எவ்வண்ணம் , எவ்வாறு , எவ்வகையாக , எப்படி . |
| என்னதும் | சிறிதும் . |
| என்னம்பு | என்னது . |
| என்னம்புது | என்னது . |
| என்னர் | யாவர் ; எத்தன்மையினர் , எத்தகையினர் ; சிறிதும் . |
| என்னவன் | யாவன் ; எப்படிப்பட்டவன் ; என்னைச் சேர்ந்தவன் , எனக்குரியவன் . |
| என்னன் | யாவன் ; எப்படிப்பட்டவன் ; என்னைச் சேர்ந்தவன் , எனக்குரியவன் . |
| என்னாங்கு | என்னிடத்து . |
| என்னுக்கு | எதற்கு . |
| என்னுங்காட்டில் | என்பதைக் காட்டிலும் . |
| என்னும் | யாவும் , எல்லாம் ; என்று சொல்லப்படும் ; யாதும் ; சிறிதும் . |
| என்னே | ஒரு வியப்பிரக்கக் குறிப்பு . |
| என்னை | என் தந்தை ; என் தாய் ; என் தலைவன் ; என் இறைவன் ; யாது ; என்ன ; ஓர் இகழ்ச்சிக் குறிப்பு . |
| என்னோ | காண்க : என்னே . |
| என்னோரும் | எத்தன்மையோரும் ; எல்லாரும் , யாவரும் . |
| என | என்னுடைய ; என்ன ; என்று ; ஓர் உவமவுருபு . |
| எனவ | என்னுடையவை . |
| எனா | என்று ; ஓர் எண்ணிடைச் சொல் . |
| எனின் | என்றால் , என்று சொல்லின் ; என்கையால் . |
| எனினும் | என்று சொல்லினும் ; ஆனாலும் . |
| எனும் | என்கின்ற ; சிறிதும் . |
| எனை | என்ன ; எவ்வளவு ; எல்லாம் . |
| எனைத்து | எத்தன்மைத்து ; எத்தனை ; எவ்வளவு . |
| எனைத்துணை | எவ்வளவு |
| எனைத்தும் | சிறிதும் ; எவ்வளவும் ; எவ்வளவாயினும் ; எல்லாம் ; முழுதும் . |
| எனைப்பல | எத்தனையோ பல . |
| எனையதும் | சிறிதும் . |
| எனையவர் | எத்தனை பேர் ; யாவர் . |
| எனையவன் | எத்தன்மையன் ; எவன் . |
| எனையன் | எத்தன்மையன் ; எவன் . |
| எனைவன் | யாவன் . |
|
|