சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| ஏதீடு | காரணமிட்டுரைத்தல் ; தோழி அறத்தொடு நிற்கையில் தலைவி தலைவனை மணத்தற்கு அவன் செய்த உதவிகளைக் காரணமாக இட்டுரைக்கை . |
| ஏது | யாது ; காரணம் ; ஏன் ; எங்கிருந்து ; எப்படி ; முதற்காரணம் ; துணைக்காரணம் ; ஏதுநிகழ்ச்சி ; ஏதம் ; நிமித்தம் ; ஓரணி ; செல்வம் ; எடுத்துக்காட்டு ; சம்பந்தம் . |
| ஏதுக்கருத்தன் | ஏவுதற் கருத்தா . |
| ஏதுக்கருத்தா | ஏவுதற் கருத்தா . |
| ஏதுகரப்படுதல் | பயனுடையதாதல் . |
| ஏதுகரம் | வழி , வகை , ஆயத்தம் : சாதனம் . |
| ஏதுங்கெட்டவன் | பயன்றறவன் . |
| ஏதுநிகழ்ச்சி | கன்மங்களாகிய காரணங்கள் தத்தம் பயனைக் கொடுத்தற்குத் தோற்றுகை . |
| ஏதுப்பண்ணுதல் | வகைசெய்தல் . |
| ஏதுப்போலி | ஏதுவுக்கு உரிய இலக்கணம் இன்றி ஏதுப்போலத் தோன்றுவது . |
| ஏதும் | யாதொன்றும் ,சிறிதும் , எதுவும் . |
| ஏதுவின் முடித்தல் | முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று , காரணங்காட்டி முடித்தல் , முன்னர் முடிவு விளங்கப் பெறாததைப் பின்னர்க்காரணத்தால் முடியவைத்தல் . |
| ஏதை | பேதை ; வறியன் . |
| ஏந்தல் | உயர்ச்சி ; மலை ; மேடு ; பெருமையிற் சிறந்தோன் ; தேக்கம் ; அரசன் ; ஆழமின்மை ; முதல் ; இளமை ; எளிதில் செய்து முடிக்கும் தன்மை , ஏந்துதல் , தாங்குதல் , கையேந்துதல் . |
| ஏந்தல் வண்ணம் | விளக்கத்தின் பொருட்டும் வற்புறுத்தற் பொருட்டும் ஒரு சொல்லே மிகுந்து வருஞ் சந்தம் . |
| ஏந்தி | தாங்குபவன் . |
| ஏந்திசை | செய்யுளோசை . |
| ஏத்திசைச் செப்பல் | வெண்சீர் வெண்டளையாற் பிறக்கும் ஓசை . |
| ஏந்திசைத் துள்ளல் | கலித்தளையால் பிறக்கும் ஓசை . |
| ஏந்திசைத் தூங்கல் | ஒன்றிய வஞ்சித்தளையால் பிறக்கும் ஓசை . |
| ஏந்திசையகவல் | நேரொன்றாசிரியத் தளையால் பிறக்கும் ஓசை . |
| ஏந்திரம் | எந்திரம் , மா அரைக்கும் திரிகை ; கரும்பாலை ; கண்கட்டு வித்தை ; மதிலுறுப்பு . |
| ஏந்திரவச்சு | வண்டியச்சு ; திரிகையச்சு . |
| ஏந்திலை | வேல் . |
| ஏடாசிரியன் | ஆசிரியன் இன்றி ஏட்டின் உதவி கொண்டே கற்றோன் . |
| ஏடி | தோழி முதலிய பெண்பாலரை விளிக்கும் சொல் ; இழிந்தாளை விளிக்கும் சொல் . |
| ஏடு | இதழ் ; பூவிதழ் ; மலர் ; பனையேடு ; ஏட்டுப்புத்தகம் ; புத்தகவிதழ் ; கண்ணிமை ; வாழையிலைத் துண்டு ; உடல் ; பாலாடை ; பாலேடு ; மேன்மை ; குற்றம் ; உலகம் ; பாதத்தின் அடிப்பக்கம் . |
| ஏடுகம் | கல்லறை . |
| ஏடுககோளாளன் | கணக்கன் . |
| ஏடுசேர்த்தல் | பனையோலைகளை ஏடுகளாகச் சீவிப் புத்தகமாக்குதல் . |
| ஏடுதூக்குதல் | ஆசிரியரிடம் ஏட்டையெடுத்துப் படித்தல் . |
| ஏடுபடுதல் | பாலில் ஆடை உண்டாதல் ; பாசி படிதல் . |
| ஏடுவாருதல் | ஓலை வாருதல் , எழுதும் பொருட்டுப் பனையோலைகளைச் சீவிச் செப்பஞ்செய்தல் . |
| ஏடை | ஆசை , விருப்பம் . |
| ஏண் | எல்லை ; வலிமை ; திண்ணம் ; உயர்ச்சி ; செருக்குப் பேச்சு ; பெருமைப் பேச்சு ; வளைவு . |
| ஏண்கோண் | ஒழுங்கின்மை , நேரின்மை . |
| ஏண்டாப்பு | இறுமாப்பு . |
| ஏணகம் | கருமை நிறம் கொண்ட ஒருவகை மான் ; ஒருவகை மருந்துச் சரக்கு . |
| ஏணம் | மான் ; மான்தோல் ; வலிமை ; நிலைபேறு . |
| ஏணல் | வளைவு ; கோணல் . |
| ஏணல்கோணல் | ஒழுங்கின்மை . |
| ஏணி | எண் ; அடுக்கு ; ஏறுதற்குரிய கருவி ; எல்லை ; நாடு ; மான் ; மான்கன்று . |
| ஏணிக்காணம் | மரத்தீர்வை . |
| ஏணிச்சீகு | ஒரு புல்வகை . |
| ஏணிப்படிகால் | மேகலை என்னும் அணி . |
| ஏணிப்படுகால் | மேகலை என்னும் அணி . |
| ஏணிப்பந்தம் | தோளில் சுமக்கும் ஒருவகைத் தீவட்டி . |
| ஏணிப்பழு | ஏணிப்படி , கண்ணேணியில் பொருத்தப்பட்டுள்ள குறுக்குக் கழி . |
| ஏணிமயக்கம் | கோட்டைக்கு உள்ளும் புறமும் உள்ளார் ஏணிமிசை நின்று போர் செய்தலைக் கூறும் புறத்துறை . |
| ஏணிமிசைமயக்கம் | கோட்டைக்கு உள்ளும் புறமும் உள்ளார் ஏணிமிசை நின்று போர் செய்தலைக் கூறும் புறத்துறை . |
| ஏணுக்குக்கோண் | எதிரிடையான பேச்சு . |
| ஏணை | புடைவைத் தொட்டில் ; நிலை ; ஆடு . |
| ஏணைக்குக்கோணை | காண்க : ஏணுக்குக்கோண் . |
| ஏத்தம்வாழை | நேந்திரம் வாழை . |
| ஏத்தாளி | புகழ்வோன் . |
| ஏத்தியலாளன் | புகழ்வோன் . |
| ஏத்திரி | சாதிபத்திரி . |
| ஏத்திவாபாசம் | ஏதுப்போலி , எடுத்துக்கொண்ட நோக்கத்திற்கு இயைபில்லாத ஏதுக்களைக் கூறுதல் . |
| ஏத்துதல் | துதித்தல் , புகழ்தல் , உயர்த்திக் கூறுதல் ; வாழ்த்துதல் . |
| ஏதடை | எதிரிடை , போட்டி , பகைமை . |
| ஏதண்டை | பலகைத் தூக்கு ; கட்டடங்களுக்குக் கட்டும் சாரம் ; நீர்த்துறையில் கட்டும் பரண் . |
| ஏதப்பாடு | குற்றம் ; குற்றம் உண்டாகுகை . |
| ஏதம் | துன்பம் , குற்றம் , கேடு . |
| ஏதர் | தீயோர் , கெட்டவர்கள் , குற்றமுடையோர் . |
| ஏதலன் | பகைவன் . |
| ஏதிலன் | பகைவன் . |
| ஏதலிடுதல் | பொறாமையைப் பேசுதல் . |
| ஏதன் | மூலகாரணன் , ஆதிகாரணன் , முதல்வன் , கடவுள் . |
| ஏதனம் | மூச்சுவிடுதல் . |
| ஏதி | ஆயுதப்பொது ; வாள் ; துண்டம் . |
| ஏதிலர் | அயலார் ; பகைவர் ; பரத்தையர் . |
| ஏதிலார் | அயலார் ; பகைவர் ; பரத்தையர் . |
| ஏதிலாள் | பிற மாது ; மாற்றாள் ; சக்களத்தி . |
| ஏதிலாளன் | அயலான் ; பிறன் . |
| ஏதின்மை | அயலாந்தன்மை , அன்னியம் ; பகைமை . |
|
|
|