சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| ஏறூர்ந்தோன் | காளையூர்தியையுடைய சிவன் . |
| ஏறெடுத்தல் | மேலெடுத்தல் , நிமிர்தல் . |
| ஏன் | எதற்கு , என்ன , என்ன காரணம் , என்னை ; இரக்கப்பொருளைத் தரும் இடைச் சொல் ; தன்மையொருமை விகுதி ; பன்றி . |
| ஏன்றுகொள்ளுதல் | ஏற்றல் , ஏற்றுக்கொள்ளல் ; பிறரைத் தாங்குதல் ; எதிர்த்து நிற்றல் . |
| ஏன்றுகோள் | ஆதரிக்கை , காப்பாற்றுகை . |
| ஏன | ஏனைய , பிற , மற்றைய , வேறான . |
| ஏனக்கோடு | பன்றிக்கொம்பு ; வெதுப்படக்கி . |
| ஏனப்படம் | பன்றிமுகக் கேடகம் . |
| ஏனப்பானம் | தட்டுமுட்டு . |
| ஏனம் | பன்றி ; காட்டுப்பன்றி ; கருவி ; பாத்திரம் ; பாவம் ; குற்றம் ; எழுத்தின் சாரியை ; ஓலைக்குடை ; அணிகலன் . |
| ஏனல் | கதிர் ; கருந்தினை ; தினைப்புனம் ; செந்தினை . |
| ஏனவாயன் | பேதை ; தீங்கு பேசுவோன் . |
| ஏனாதி | மறவன் ; நாவிதன் ; படைத்தலைவன் ; ஒரு பட்டப்பெயர் ; அமைச்சன் ; ஒரு பழைய சாதியார் ; சாணாரில் ஒரு வகுப்பு ; ஓர் இளகம் , இலேகியம் . |
| ஏனாதிமோதிரம் | ஏனாதிப் பட்டத்தார்களுக்கு அரசன் அளிக்கும் மோதிரம் . |
| ஏனும் | ஒரு வினையெச்ச விகுதி ; என்றாலும் . |
| ஏனென்னுதல் | இடுக்கணுக்கு உதவ வினாதல் , ஆபத்தில் உதவ முற்படுதல் . |
| ஏனை | ஒழிபு , மற்றையெனும் இடைச்சொல் ; ஒழிந்த ; மற்று ; எத்தன்மைத்து ; மலங்குமீன் . |
| ஏனையுவமம் | வெளிப்படை உவமம் . |
| ஏனோதானோவெனல் | பராமுகமாயிருத்தல் , பிடிப்பின்றியிருத்தல் . |
|
|