ஒட்டுக்கும் முதல் - ஒண்டியாணி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஒடு ஒடுமரம் ; நிலப்பாலை ; முதுபுண் ; புடைகொண்ட புண் ; எண்ணுப் பொருளில் வரும் ஓரிடைச்சொல் ; காண்க : ஒடுக்கட்டி ; மூன்றாம் வேற்றுமையுருபு .
ஒடுக்கட்டி அக்குட்புண் ; கழலைக்கட்டி .
ஒடுக்கத்தம்பிரான் அணுக்கர் , சைவ மடாதிபதிக்கு உட்காரியம் பார்க்கும் தம்பிரான் .
ஒடுக்கம் அடக்கம் ; குறுக்கம் ; சுருக்கம் ; புழுக்கம் ; சிறிது சிறிதாகக் குறைதல் ; நெருக்கமான இடம் ; பதுக்கம் ; மறைவிடம் ; தனியிடம் ; வழிபாடு ; முடிவு ; ஒன்றில் அடங்குகை ; இடைஞ்சல் .
ஒடுக்கிடம் மறைவிடம் ; சுருக்கமான இடம் ; தனியிடம் .
ஒடுக்கு அடக்கம் ; இடுக்குமூலை ; ஒடுக்கமாயிருப்பது ; நெளிவு .
ஒடுக்குச்சீட்டு பணம் செலுத்தியவருக்குக் கொடுக்கும் பற்றுச்சீட்டு .
ஒடுக்குத்துண்டு பணம் செலுத்தியவருக்குக் கொடுக்கும் பற்றுச்சீட்டு .
ஒடுக்குதல் அடக்குதல் ; வருத்துதல் ; குறைத்தல் ; சிறுகுதல் ; செறித்தல் ; சுருங்கப் பண்ணுதல் ; உடம்பையொடுக்கல் ; இறையிறுத்தல் ; கீழ்ப்படுத்துதல் .
ஒடுக்குப்படி ஒரு பழைய வரி .
ஒடுக்குமாடு கொள்ளைப் பொருள் .
ஒடுக்குவாய் ஒடுங்கின வாய் ; கோணல் வாய் .
ஒடுக்கெடுத்தல் நெளிவெடுத்தல் .
ஒடுகு ஒடுமரம் ; நிலப்பாலை .
ஒடுங்க ஓர் உவமவுருபு .
ஒடுங்கல் அடங்கல் ; சுருங்குதல் .
ஒடுங்கி ஆமை .
ஒடுங்குதல் அடங்குதல் ; குறைதல் ; சுருங்குதல் ; குவிதல் ; சோர்தல் ; கீழ்ப்படிதல் ; பதுங்கல் ; ஒதுங்குதல் ; ஒளி மங்குதல் .
ஒடுத்தங்குதல் புண்ணிற் சீழ் தங்குதல் .
ஒடுதடங்கல் நெளிவு , வளைவு .
ஒடுப்பை நிலப்பாலை .
ஒடுவடக்கி குப்பைமேனி ; திராய்மரம் ; பெருந்தும்பை .
ஒடுவை ஒடுமரம் .
ஒடை உடைமரம் , குடைவேலமரம் .
ஒண்டன் நரி ; ஆண் நரி .
ஒண்டி ஒன்றி , தனிமை ; துணையில்லாதவன்(ள்) ; ஊற்றாணி என்னும் கலப்பை உறுப்பு .
ஒண்டிக்கட்டை தனிமையானவன் .
ஒண்டிக்காரன் தனிமையானவன் .
ஒண்டிக்குடி மற்றொரு குடும்பத்தோடு ஒட்டி வாழ்தல் , ஒட்டுக் குடித்தனம் .
ஒண்டுக்குடி மற்றொரு குடும்பத்தோடு ஒட்டி வாழ்தல் , ஒட்டுக் குடித்தனம் .
ஒண்டியாணி கலப்பையில் கொழுப் படிவதற்காக அடிக்கப்படும் இருப்பாணி .
ஒட்டுக்கும் முழுதும் .
ஒட்டுக்கேட்டல் காண்க : ஒற்றுக்கேட்டல் .
ஒட்டுக்கொடுத்தல் அணுக இடங்கொடுத்தல் ; கேட்டது கொடுத்தல் ; உறுதிபண்ணித் தருதல் .
ஒட்டுச்சல்லடம் குறுங்காற் சட்டை .
ஒட்டுச்செடி ஒட்டொட்டிச் செடி , ஒட்டுக்கட்டி உண்டாக்கும் செடி .
ஒட்டுடந்தை ஒட்டுப்பற்று ; சிறுதொடர்பு ; தூரவுறவு .
ஒட்டுத்தரவு சுற்றறிக்கை .
ஒட்டுத்திண்ணை சிறு திண்ணை , வீட்டைச் சார்ந்த சிறு திண்ணை ; மிகச் சிறிய தெருத் திண்ணை .
ஒட்டுத்துணி ஒட்டு வைத்துத் தைக்கப்படும் துணித்துண்டு .
ஒட்டுத்துத்தி துத்திப்பூண்டுவகை ; செடிவகை .
ஒட்டுத்தையல் ஒட்டுத் துணியிட்டுத் தைக்கும் தையல் .
ஒட்டுதல் ஒட்டவைத்தல் ; பொருத்துதல் ; சார்தல் ; பந்தயம் கட்டுதல் ; துணிதல் ; கிட்டுதல் ; கூட்டுதல் ; இணைத்தல் ; தாக்குதல் ; உடன்படுதல் ; ஆணையிடுதல் ; நட்பாக்குதல் ; வஞ்சினங்கூறல் ; பதுங்கி நிற்றல் ; அடை கொடுத்தல் ; சுருங்குதல் ; வற்றுதல் .
ஒட்டுநர் நண்பர் , மித்திரர் .
ஒட்டுப்பழம் ஒட்டுமரத்தின் பழம் .
ஒட்டுப்பற்று ஒட்டுடன்பாடு ; ஆசாபாசம் ; ஒட்டுடந்தை ; ஒட்டுரிமை ; சிறு உறவு .
ஒட்டுப்புதவம் இரட்டைக் கதவு .
ஒட்டுப்புல் சார்ந்த பொருள்களின்மேல் தொற்றிக்கொள்ளும் புல்வகை .
ஒட்டுப்புழு புறாமுட்டி என்னும் செடிவகை .
ஒட்டுப்பொறுக்குதல் சிந்தினவற்றைத் திரட்டுதல் .
ஒட்டுப்போடுதல் துண்டு வைத்து இணைத்தல் ; சமயம் பார்த்தல் .
ஒட்டுமயிர் குடுமியுடன் கூடாத மயிர் , காண்க : இடுமயிர் .
ஒட்டுமொத்தம் முழுமொத்தம் , முழுமையும் .
ஒட்டுரிமை ஒட்டுடன்பாடு , உடந்தை , சிறு தொடர்பு ; நட்பு .
ஒட்டுவட்டில் ஆராதனை வட்டில் .
ஒட்டுவாரொட்டி ஒட்டுநோய் , தொற்றுநோய் .
ஒட்டுவிடுதல் பொருத்து நீங்குதல் ; பற்று விடுதல் .
ஒட்டுவித்தை இடத்தைவிட்டுப் பெயராது இருக்கச் செய்யும் வித்தை .
ஒட்டுவைத்தல் ஆணையிடல் ; பறவைகளைப் பிடிக்க ஒட்டுப் பிசின் வைத்தல் ; கண்ணி வைத்தல் ; அகழி தோண்டுதல் .
ஒட்டுறவு உரித்துறவு ; நெருங்கிய சம்பந்தம் .
ஒட்டை ஒட்டகம் ; ஒட்டைச்சாண் ; பத்து விரற்கிடை ; சமானம் ; விளையாட்டில் உதவுவோன் .
ஒட்டைத்திருக்கை திருக்கை மீன்வகை .
ஒட்டொட்டி காண்க : ஒட்டங்காய்ப்புல் .
ஒட்டோலக்கம் பெருங் கூட்டம் ; பகட்டு , இடம்பம் ; வெற்றி .
ஒட்பம் அறிவு ; அழகு ; நன்மை ; மேன்மை .
ஒடி கவண் ; காட்டுப்புதர் .
ஒடிசல் முறிந்தது ; ஒல்லியாயிருப்பவன் (ள்) .
ஒடிசில் காண்க : ஒடி .
ஒடித்தல் முரித்தல் , அழித்தல் ; தகர்த்தல் ; ஒளி செய்தல் .
ஒடிதல் முரிதல் ; கெடுதல் ; அழிதல் ; இடையறுதல் .
ஒடிபு முறிகை ; கெடுகை ; குறைவு ; குற்றம் ; அழிவு ; தவிர்வு .
ஒடியல் முறிகை ; முரிதல் ; பனங்கிழங்கின் காய்ந்த பிளவு .
ஒடியல்மா பனங்கிழங்கின் மா .
ஒடியெறிதல் காட்டுப்புதர்களை அழித்தல் ; மரக்கொம்பைப் பாதி குறைத்தல் ; குற்றுயிராக்கல் ; வலைவீசல் .
ஒடிவு இடைமுறிகை ; இடைமுறிபட்டது .