சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| ஒன்றுதல் | பொருந்துதல் , நெருங்குதல் , ஒன்றாதல் ; மனங்கலத்தல் ; சம்மதித்தல் ; உவமையாதல் ; ஒருமுகப்படுதல் . |
| ஒன்றுநன் | நண்பன் ; |
| ஒன்றுபடுத்தல் | ஒப்புரவாக்கல் ; ஒருமைப்படுத்தல் . |
| ஒன்றுபடுதல் | கூடுதல் ; பொருந்துதல் ; ஒருதன்மையாதல் ; இணக்கமாதல் . |
| ஒன்றுபாதி | பாதி ; ஏறக்குறையப் பாதி ; நடுச்சாமம் . |
| ஒன்றும் | சிறிதும் . |
| ஒன்றுமற்றவன் | பயனில்லாதவன் ; வறியவன் . |
| ஒன்றுமொழிதல் | வஞ்சினங்கூறுதல் ; சூளுரைத்தல் . |
| ஒன்றுவிட்ட | உறவு முறையில் ஒரு தலைமுறைவிட்ட . |
| ஒன்றொழிபொதுச்சொல் | இருதிணை ஆண் பெண்ணுள் ஒன்றனையொழிக்கும் பொதுச்சொல் . |
| ஒன்றோ | எண்ணிடைச்சொல் ; விகற்பப் பொருள் தரும் இடைச்சொல் ; வியப்பிரக்கச்சொல் . |
| ஒன்னப்பூ | மாதர் காதணியுள் ஒன்று . |
| ஒன்னலன் | பகைவன் . |
| ஒன்னாதோர் | பகைவர் . |
| ஒன்னார் | பகைவர் . |
| ஒன்னுதல் | பொருந்துதல் ; பொறுத்தல் . |
| ஒன்பது | ஓரெண் , பத்தில் ஒன்று குறைந்த எண் . |
| ஒன்பதொத்து | ஒருவகைத் தாளம் . |
| ஒன்பான் | ஒன்பது . |
| ஒன்ற | ஓர் உவமைச்சொல் . |
| ஒன்றடிமன்றடி | குழப்பம் . |
| ஒன்றரைக்கண்ணன் | ஒரு பக்கஞ் சரிந்த பார்வையாளன் . |
| ஒன்றல் | ஒன்றுதல் ; பொருந்துதல் . |
| ஒன்றலர் | சேராதவர் , பகைவர் . |
| ஒன்றறவாடம் | ஒன்றுவிட்டு ஒருநாள் . |
| ஒன்றறிசொல் | ஒன்றன்பாற்சொல் . |
| ஒன்றறியாதவன் | ஏதும் அறியாதவன் . |
| ஒன்றன்கூட்டம் | ஒரே பொருளின் கூட்டம் . |
| ஒன்றன்பால் | அஃறிணையொருமைப்பால் . |
| ஒன்றாக | ஒரு பொருளாக ; நிச்சயமாக ; ஒருமிக்க . |
| ஒன்றாதல் | ஒற்றுமைப்படுதல் , ஐக்கியப்படுதல் ; முதலாதல் ; இணையின்றாதல் . |
| ஒன்றாதவஞ்சித்தளை | நிரையீற்று உரிச்சீரின் முன் நேரசை வரும் தளை , கனிச்சீர் முன் நேரசை வரும் தளை . |
| ஒன்றாமை | சேராமை ; பொருந்தாமை ; பகைமை . |
| ஒன்றாய் | ஒரசேர , ஒருமிக்க . |
| ஒன்றார் | சேரார் , பொருந்தார் , பகைவர் . |
| ஒன்றாவொன்றும் | யாதொன்றினாலும் . |
| ஒன்றி | ஒற்றை ; தனிமை ; தனித்த ஆள் ; தனித்தது ; பிரமசாரி . |
| ஒன்றிக்காரன் | குடும்பமில்லாதவன் ; மனைவி மக்களற்றவன் , தனியாள் . |
| ஒன்றித்தல் | பொருந்துதல் ; ஒருமைப்படுதல் . |
| ஒன்றிப்பு | ஒருமிப்பு . |
| ஒன்றியவஞ்சித்தளை | நிரையீற்று உரிச்சீரின் முன் நிரையசை வரும் தளை , கனிச்சீர் முன் நிரையசை வரும் தளை . |
| ஒன்றியார் | உள்ளாயினார் , தன்னைச் சேர்ந்தவர் . |
| ஒன்றியாள் | ஒற்றையாள் ; மனைவியில்லாதவன் . |
| ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல் | ஒரு பொருளைக் கூறி முடிக்கையில் அதற்கு இனமான பொருளையும் அங்குத்தானே கூறுகை . |
| ஒன்றினொன்றபாவம் | ஒன்றில் ஒன்று இன்மை . |
| ஒன்று | ஒன்று என்னும் எண் ; மதிப்பிற்குரியபொருள் ; வீடுபேறு ; ஒற்றுமை ; வாய்மை ; அறம் ; அஃறிணையொருமை . |
| ஒன்றுக்கிருத்தல் | சிறுநீர் கழித்தல் . |
| ஒன்றுக்குப்போதல் | சிறுநீர் கழித்தல் . |
| ஒன்றுக்குமற்றவன் | பயனற்றவன் . |
| ஒன்றுக்கொன்று | ஒன்றறோடொன்று ; ஒன்றுக்கு மாறாய் ஒன்று ; ஏட்டிக்குப் போட்டி . |
| ஒன்றுகட்டுதல் | சரிப்படுத்தல் . |
| ஒன்றுகுடி | ஒதுக்குக்குடி , ஒட்டுக்குடி . |
| ஒன்றுகூட்டு | ஒரு சேர்க்கை . |
| ஒன்றுகூடுதல் | ஒன்றாய்ச் சேர்தல் ; ஒற்றுமைப்படுதல் . |
| ஒன்றுகை | ஒன்றுதல் , இசைகை . |
|
|