ஓலைமுறி முதல் - ஓனம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஓலைமுறி ஓலைச்சீட்டு .
ஓலையெழுத்து இராயசம் .
ஓலையெழுதுதல் சீட்டெழுதுதல் ; சீதனவுறுதியெழுதுதல் ; கடிதம் அனுப்புதல் .
ஓலைவாங்குதல் சாதல் ; இறத்தல் .
ஓலைவார்தல் எழுதுதற்கு உதவுமாறு ஓலை சீவுதல் .
ஓலைவாலன் வாளைமீன்வகை .
ஓலைவாளை வாளைமீன்வகை .
ஓவம் ஓவியம் ; சித்திரம் ; உயரம் ;
ஓவர் கம்மாளர் ; ஓவியர் ; சித்திரகாரர் ; ஏத்தாளர் .
ஓவருதல் ஒழிதல் .
ஓவன் ஓவியன் ; சித்திரகாரன் .
ஓவாமை நீங்காமை ; ஒழியாமை ; இடைவிடாமை .
ஓவாய் பற்கள்போன வாய் ; மூளியானகலத்தின் வாய் .
ஓவி ஓவியம் , சித்திரம் .
ஓவியகாயம் அழகிய வரிகளையுடைய புலி .
ஓவியப்பேச்சு இனியமொழி .
ஓவியம் சித்திரம் ; சித்திரத் தொழில் ; அழகு ; பிரதிமை .
ஓவியன் சித்திரம் வரைபவன் ; சித்திரகாரன் ; சிற்பி ; பிரதிமைசெய்வோன் ; சிற்ப நூலோன் .
ஓவு காண்க : ஓவி .
ஓவுதல் ஒழிதல் , நீங்குதல் ; நீக்குதல் ; முடிதல் .
ஓவெனல் ஓரொலிக் குறிப்பு ; ஓவென்றொலித்தல் ; ஓவென்று முறையிடல் ; முழு இருட்டாதல் குறிப்பு .
ஓளி ஒழுங்கு ; யானையின் கூட்டம் .
ஓற்பலம் கோங்கு ;
ஓனம் எழுத்தின் சாரியை .