அகண்டாகாரஞானம் முதல் - அகம்பு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
அகப்பாடு உள்நிகழ்ச்சி ; நெருங்கியிருக்கை .
அகப்பு ஆழம் ; தாழ்வுப்பகுதி ; படுகுழி .
அகப்புறக்கைக்கிளை காமம் நிரம்பாத இளமையோளை ஒருவன் அடுத்து அவளுடைய குறிப்பறியாது மேலும் மேலும் பேசுவது .
அகப்புறச்சமயம் சைவசித்தாந்தத்திற்குப் புறம்பான மதங்கள் ; அவை : பாசுபதம் , மாவிரதம் , காபாலம் , வாமம் , வைரவம் , ஐக்கியவாத சைவம் .
அகப்புறத்தலைவன் கைக்கிளை , பெருந்திணை ஒழுக்கங்களுக்குரிய தலைவன் .
அகப்புறத்திணை காண்க : அகத்திணைப்புறம் .
அகப்புறமுழவு மத்திமமான வாத்தியம் ; எழுவகை முழவுகளுள் ஒன்று . அது தண்ணுமை , தக்கை , தகுணிச்சம் முதலாகப் பலவகைப் படும் .
அகப்பூ உள்ளத்தாமரை ; மனமகிழ்ச்சி .
அகப்பூசை உள்ளத்தால் நினைந்து வழிபடுகை .
அகப்பை குழிந்த கரண்டி , சட்டுவம் .
அகப்பைக்கணை அகப்பையின் காம்பு , அகப்பைப் பிடி .
அகப்பைக்குறி அகப்பையளவு ; நெல்லுக் குவியலின் மேலிடும் சாணிப்பால் குறி .
அகப்பைக்கூடு அகப்பைகளைச் செருகிவைக்கும் சட்டம் .
அகப்பொருட்கோவை அகப்பொருள் துறைகளைத் தொடர்புபடுத்திக் கூறும் கோவை நூல் .
அகப்பொருள் உட்பொருள் ; சிற்றின்பம் ; அகவொழுக்கமாகிய பொருள் ; வீட்டில் உள்ள பொருள் .
அகம் இருப்பிடம் ; பூமி ; மனை ; வீடு ; உள் ; மனம் ; அகப்பொருள் ; ' நான் ' என்னும் அகங்காரம் ; பாவம் ; அகம்பாவம் ; மார்பு ; ஏழாம் வேற்றுமையுருபு .
அகம்படி உள்ளிடம் ; மனம் ; அகத்தொண்டு ; ஒருவகைச் சாதி ; அடிவயிறு .
அகம்படித்தொண்டு அணுக்கத் தொண்டு .
அகம்படிமை அணுக்கத் தொண்டு .
அகம்படியர் உள்வேலைக்காரர் ; ஊழியம் செய்வோர் ; ஒருவகைச் சாதியார் .
அகம்பன் அசைவற்றவன் .
அகம்பாடு ' நான் ' என்னும் எண்ணம் ; உள்ளச்செருக்கு ; உள்ள நினைவு .
அகம்பாவம் ' நான் ' என்னும் எண்ணம் ; உள்ளச்செருக்கு ; உள்ள நினைவு .
அகம்பிரமம் ' நானே பிரமம் ' எனக் கூறல் .
அகம்பு உள் .
அகத்தடிமை இறைவன் அருகிலிருந்து செய்யும் அணுக்கத் தொண்டு ; வீட்டுப் பணியாளர் .
அகத்தடியாள் வீட்டு வேலைக்காரி .
அகத்தமிழ் அகத்திணைபற்றிய இலக்கியம் .
அகத்தாழம் மாலைப்பொழுது .
அகத்தான் உள்ளிடத்தில் இருப்பவன் ; மனத்தில் தங்கி இருப்பவன் ; இல்வாழ்வான் ; உறவினன் ; முற்றுகைக்குட்பட்டவன் ; மதில்காத்து உள்ளிருப்பவன் .
அகத்திடுதல் செருகுதல் ; உள்ளிடுதல் ; கையால் உள்ளணைத்தல் .
அகத்திணை அகவொழுக்கம் , உள்ளொழுக்கம் ; கணவன் மனைவியரிடையே உள்ளத்தே நிகழும் இன்பவொழுக்கம் ; குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை எனப்படும் ஐந்திணை ஒழுக்கம் .
அகத்திணைப்புறம் இன்ப வாழ்க்கைக்கு மாறுபட்டது ; கைக்கிளை பெருந்திணை ஒழுக்கங்கள் .
அகத்தியம் கட்டாயம் ; அகத்தியர் செய்த ஓர் இலக்கண நூல் .
அகத்தியல் உள்ளத்து இயற்கை , மனப்பாங்கு .
அகத்திருத்துவம் செயலின்றி நிற்கும் கடவுள் தன்மை .
அகத்தீடு உளளீடு ; எண்ணம் ; அன்பு ; கையால் உள்ளணைக்கை ; உள்ளடக்குதல் .
அகத்துரைப்போன் கடவுள் ; மனச்சாட்சி .
அகத்துவங்கொள்ளுதல் அடிப்படைக்காகத் தோண்டுதல் .
அகத்துழிஞை கோட்டையின் அகத்து உள்ளாரைப் புறத்தார் வெல்லும் புறத்துறை .
அகத்தொண்டர் வீட்டுப்பணிபுரிவோர் .
அகத்தோர் உள்ளிருப்போர் ; ஊரார் ; ஒத்த உள்ளத்தராம் நண்பர் .
அகதகாரன் மருத்துவன் .
அகதம் அழிவற்றது ; குளிகை ; மருந்து ; இன்பம் .
அகதன் நோயிலி .
அகதி போக்கற்றவன் , கதியிலி ; வறியவன் ; தில்லைமரம் ; வேலமரம் .
அகதேசி உளளூரிலுள்ளவன் ; உள்நாட்டுப் பிச்சைவாங்கி .
அகந்தை காண்க : அகங்காரம் .
அகநகர் கோட்டைக்குள் அடங்கிய நகரப்பகுதி ; அந்தப்புரம் .
அகநகை உட்சிரிப்பு ; இகழ்ச்சிச் சிரிப்பு .
அகநாடக உரு அகக்கூத்திற்குரிய இசைப் பாட்டு வகை ; அவை : கந்தம் முதல் பிரபந்தம் ஈறாக இருபத்தெட்டு .
அகநாடு உள்நாடு ; மருதம் .
அகநாழிகை கருவறை ; உண்ணாழிகை .
அகநிலை உட்பட்டநிலை ; உள்ள நிலை ; உள்நகர் ; ஊர் ; நால்வகைத் தலைமைப் பண்களுள் ஒன்று .
அகப்பகை உட்பகை .
அகப்பட்டி சிறுதீங்கு செய்வோன் ; காவலின்றித் திரிவோன் .
அகப்படுதல் உட்படுதல் ; பிடிக்கப்படுதல் ; சிக்கிக்கொள்ளுதல் ; கிட்டுதல் .
அகப்படை அணுக்கப்படை , மூலப்படை .
அகப்பணி மனச்சிந்தனை ; வீட்டுவேலை .
அகப்பத்தியம் மனவடக்கம் ; இணைவிழைச்சு இல்லாமை .
அகப்பரம் வீட்டைச் சார்ந்த மேடை ; திண்ணை , வேதிகை .
அகப்பரிசாரம் வீட்டுவேலைக்காரர் ; அரண்மனைப் பணியாளர் .
அகப்பரிவாரம் வீட்டுவேலைக்காரர் ; அரண்மனைப் பணியாளர் .
அகப்பற்று ' நான் ' என்னும் உளப்பற்று மன விருப்பு .
அகப்பா கோட்டை உள்மதில் ; மதிலுள் மேடை ; அகழி ; அகத்திணைப் பாட்டு .
அகப்பாட்டண்மையன் மனமொத்த நண்பன் ; பிடிபடுந்தொலைவில் உள்ளவன் .
அகப்பாட்டு அகப்பொருள் பற்றிய பாட்டு ; அகநானூறு என்னும் நூல் .
அகப்பாட்டுவண்ணம் இறுதியடி முற்றுப் பெறாது இடையடி போன்று வரும் சந்தம் .
அகப்பாட்டுறுப்பு அகப்பொருட் பாடல்களுக் குரிய பன்னிரண்டு உறுப்புகள் ; அவை : திணை , கைகோள் , கூற்று , கேட்போர் , இடம் , காலம் , பயன் , முன்னம் , மெய்ப்பாடு , எச்சம் , பொருள்வகை , துறை .
அகண்டாகாரஞானம் முற்றறிவு .
அகண்டாகாரம் அளவுபடாத வடிவம் , பெருவடிவம் ; பெருவெளி .
அகண்டி ஓர் இசைக்கருவி .
அகண்டிதன் பிளவுபடா இயல்பினன் ; முழுமையன் , கடவுள் .
அகணி உள் ; உட்பட்டது ; நம்பத்தக்க நட்பினர் ; தெங்கு , பனை முதலியவற்றின் மட்டைகளின் அகவாயிலிருந்து உரிக்கும் நார் ; வயல் ; மருதநிலம் .
அகணிப்பாய் மூங்கிலாலான பாய் .