கங்காளன் முதல் - கசக்கால் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கச்சைக்கொடியோன் யானைக் கழுத்திடு கயிற்றைக் கொடியிற் கொண்டவன் , கன்னன் .
கச்சோடி வெள்ளை ; வெற்றிலை .
கச்சோணி தாம்பூலத்தோடு சேரும் மணப்பண்டம் .
கச்சோதம் மின்மினி .
கச்சோரம் கிச்சிலிக் கிழங்கு ; பூலாங்கிழங்கு .
கச்சோலம் காண்க : கச்சோரம் ; ஏலக்காய்த் தோல் ; ஒருவகை மணப்பொருள் ; சிறுபாண்டம் .
கசக்கல் கசக்குதல் ; கசங்கச் செய்தல் .
கசக்கார் இனிமையான மாங்காய் .
கசக்கால் ஊற்றுக்கால் .
கங்கைக்குலம் வேளாளர்மரபு , வேளாளர்குலம் .
கங்கைகோத்திரம் வேளாளர்மரபு , வேளாளர்குலம் .
கங்கைதனயன் காண்க : கங்காசுதன் .
கங்கைதூவி மேகம் .
கங்கைபெற்றோன் முருகன் ; வீடுமன் ; விநாயகன் .
கங்கைமாத்திரர் சிறுவர் விளையாட்டில் வழங்கிய ஒரு பெயர் .
கங்கைமைந்தன் காண்க : கங்காசுதன் .
கங்கையோன் துருசு .
கங்கைவேணியன் கங்கையைச் சடையில் வைத்திருக்கும் சிவன் .
கச்சகம் குரங்கு .
கச்சங்கட்டுதல் கச்சை கட்டுதல் ; ஒரு செயலை முடிக்க முனைந்து நிற்றல் .
கச்சங்கம் ஒப்பந்தம் .
கச்சட்டம் உடைமடிப்பு ; கோவணம் .
கச்சடா இழிவு ; போக்கிரித்தன்மை .
கச்சந்தி கோணிப்பை .
கச்சந்தியவிழ்த்தல் பொய்மூட்டை அவிழ்த்தல் .
கச்சபம் ஆமை ; நவநிதியுள் ஒன்று ; மற்போர் நிலையுள் ஒன்று .
கச்சபீ கலைமகளின் வீணை .
கச்சம் அளவு ; ஓர் எண்ணுப்பெயர் ; இலட்சம் ; மரக்கால் ; ஒப்பந்தம் ; துணிவு ; இறகு ; கடுகு ரோகிணி ; ஒரு மீன் ; வார்க்கச்சு ; முன்றானை ; ஆடைச்சொருக்கு , யானைக் கழுத்திடு கயிறு ; ஆமை ; குதிரை அங்கவடி ; பக்கம் ; காய்ச்சற்பாடாணம் .
கச்சல் மிகவும் இளம்பிஞ்சு ; ஒல்லி ; கசப்பு ; வெறுப்பு ; பிஞ்சு வாழைக்காய் .
கச்சலாட்டம் சச்சரவு .
கச்சவடக்காரன் வணிகன் .
கச்சவடம் வணிகம்: குழப்புகை .
கச்சளம் இருள் ; கண்ணிலிடு மை ; கரிப்புகை .
கச்சற்கருவாடு கருவாட்டுவகை ; மீன்பொடி .
கச்சற்கோரை நெய்தல் நிலத்துப் புல்வகை .
கச்சன் ஆமை .
கச்சா தாழ்மை ; ஒரு நிறை .
கச்சாச்சேர் எட்டுப்பலம் கொண்ட நிறை .
கச்சாத்து நிலவரி முதலிய கணக்கு ; நிலவரி செலுத்தியதற்குரிய பற்றுச்சீட்டு .
கச்சாயம் ஒருவகைச் சிற்றுண்டி ; கடலருகான முனை .
கச்சாரம் பாய்முடையும் தொழில் .
கச்சால் மீன்பிடிக்குங் கூடு .
கச்சாலம் காய்ச்சற் பாடாணம் .
கச்சாலை கச்சாலயம் ; காஞ்சிபுரத்திலுள்ள சிவாலயங்களுள் ஒன்று .
கச்சான் மேல்காற்று ; மேற்குத்திசை .
கச்சான்கோடை தென்மேல் காற்று .
கச்சி காஞ்சிபுரம் ; சீந்திற்கொடி ; கொட்டாங்கச்சி , சிரட்டை ; சின்னிப்பூடு .
கச்சிதம் ஒழுங்கு ; தக்கபடி அமைகை .
கச்சிப்பேடு கச்சி என்னும் காஞ்சிபுரம் .
கச்சு அரைப்பட்டிகை ; கச்சைப்பட்டை ; முலைக்கக்சு ; கச்சை ; மேலாடை ; நெருப்பு ; மீன் .
கச்சுக்கச்செனல் ஓயாது பிதற்றுதல் .
கச்சுகோரம் பாண்டவகை .
கச்சுதல் கடித்தல் .
கச்சுப்பிச்செனல் தாறுமாறாகப் பேசுதல் .
கச்சுரி நெருப்பு .
கச்சுரை காண்க : கச்சூர்க்காய் ; பெருங்காஞ்சொறி .
கச்சூர்க்காய் பேரீச்சம்பழம் ; தின்பண்டவகை .
கச்சூரம் கழற்சிக்கொடி ; கழற்காய் ; பேரீந்து .
கச்சேரி உத்தியோக சாலை , அலுவற்கூடம் ; ஆடல் பாடல் நிகழ்ச்சி ; ஆடல் பாடல் முதலியவற்றிற்காகக் கூடும் கூட்டம் .
கச்சை கயிறு ; கவசம் ; தழும்பு ; அரைக்கச்சு ; அரைப்பட்டிகை ; யானைக் கழுத்திடு கயிறு , யானைக் கீழ்வயிற்றுக் கயிறு ; முழுப்புடைவை ; வார் ; கோவணம் ; கிண்கிணி .
கச்சைக்கட்டுதல் அரையில் கட்டுதல் ; தாறு பாய்ச்சிக் கட்டுதல் ; ஆடையை இறுகக் கட்டுதல் ; ஒன்றைச் செய்ய முற்படுதல் .
கங்காளன் சிவன் ; துருசு .
கங்காளி காளி ; பார்வதி ; ஏழை .
கங்கானம் குதிரை .
கங்கில் காளசின்னத்தின் உறுப்பு .
கங்கு வயலின் வரம்பு ; வரம்பின் பக்கம் ; கரை ; எல்லை ; அணை ; வரிசை ; தீப்பொறி ; தீப்பற்றிய துரும்பு ; பனைமட்டையி னடிப்புறம் ; ஒருவகை விளையாட்டிற் குறிக்கும் எல்லை ; கழுகு ; பருந்து ; கருந்தினை .
கங்குகரை இல்லாமை அளவின்மை .
கங்குமட்டை பனைமட்டையின் அடிக்கருக்கு .
கங்குரோகம் கொப்புள நோய்வகை .
கங்குல் இரவு , இருள் ; இடையாமம் ; பரணி நாள் .
கங்குல்வாணர் இரவில் திரியும் பழக்கமுடையவர் , அரக்கர் .
கங்குல்விழிப்பு கூகை .
கங்குவடலி அடிக்கருக்கு மட்டையுள்ள பனைமரம் .
கங்கை ஏழு புண்ணிய ஆறுகளுள் ஒன்று ; சிவன் மனைவி ; நவச்சாரம் .
கங்கைக்குணன் நவச்சாரம் .