கடற்கொள்ளைக்காரன் முதல் - கடாவல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கடன்கழித்தல் கடமையைச் செய்தல் ; பிதிர் கருமஞ் செய்தல் ; நித்திய கருமஞ் செய்தல் ; கடனைத் தீர்த்தல் ; கரிசனமற்ற வேலை செய்தல் ; மனமின்றிச் செய்தல் .
கடன்காரன் கடன்பட்டவன் ; கடன் கொடுத்தவன் ; அகால மரணம் அடைந்தவன் .
கடன்காரி கடன்பட்டவள் ; கடன் கொடுத்தவள் ; அகால மரணம் அடைந்தவள் .
கடன்கேட்டல் கடன் கொடுக்கும்படி கேட்டல் ; கொடுத்த கடனைக் கேட்டல் .
கடன்கோடல் பணத்தைக் கடனாகக் கொள்ளுகை , வழக்குப் பதினெட்டனுள் ஒன்று .
கடன்சீட்டு கடன்பத்திரம் .
கடன்படுதல் கடன்வாங்குதல் ; கடனுக்குள்ளாதல் .
கடன்பத்திரம் கடன்சீட்டு .
கடன்பற்று கடனாகப் பெற்ற பொருள் .
கடன்பற்றுதல் கொடுத்த கடனை வாங்கிக் கொள்ளுதல் .
கடன்மரம் மரக்கலம் , கப்பல் .
கடன்மல்லை மாமல்லபுரம் .
கடன்முரசோன் காமன் , மன்மதன் .
கடன்முள்ளி கத்தரிவகை .
கடன்முறி காண்க : கடன்சீட்டு .
கடன்முறை பெரியோர் வழிபாடு , பெரியோர்க்குச் செய்யும் மரியாதை .
கடன்மை தன்மை ; முறைமை .
கடனம் தாழ்வாரம் ; முயற்சி ; ஊக்கம் .
கடனாய் கடலில் வாழும் நீர்நாய் .
கடனாளி கடன்பட்டவன் ; கடமையுடையவன் .
கடனிறவண்ணன் திருமால் ; ஐயனார்
கடனிறுத்தல் கடனைக் கொடுத்தல் ; கடமையைச் செய்தல் .
கடனுரை ஒருவகைக் கடல் மீன் ஓடு ; ஒருவகைப் பணியாரம் ; ஒரு மருந்துச் சரக்கு .
கடா ஆட்டின் ஆண் ; ஆட்டின் பொது ; எருமைக்கடா ; சருக்கரை காய்ச்சும் பாண்டம் ; வினா , கேள்வி .
கடாக்களிறு மதயானை .
கடாக்கன்று ஆண் எருமைக்கன்று .
கடாக்குட்டி ஆண்குட்டி .
கடாகம் அண்டகோளகை ; கடாரம் , பெருங்கொப்பரை ; கிணறு .
கடாகாசம் குடத்தில் தோன்றும் ஆகாசம் , குடத்தினுள் காற்று .
கடாகு பறவை .
கடாச்சங்காத்தம் மடத்தனம் ; மதியாத்தன்மை .
கடாசலம் யானை .
கடாசுதல் ஆணி ஆப்பு முதலியன அடித்தல் ; எறிதல் .
கடாஞ்செய்தல் மதஞ்சொரிதல் .
கடாட்சம் கடைக்கண் ; கடைக்கண் பார்வை ; அருள் .
கடாட்ச வீட்சணம் கடைக்கண் பார்வை .
கடாட்சித்தல் அருளுடன் நோக்குதல் , கிருபை செய்தல் .
கடாத்தன்மை கீழ்ப்படியாமை ; திருத்தமின்மை ; சுறுசுறுப்பின்மை .
கடாதல் கடாவுதல் , வினாவுதல் .
கடாம் யானை மதம் தோன்றும் துளை ; யானை மதநீர் ; பத்துப்பாட்டுள் ஒன்றாகிய மலைபடுகடாம் .
கடாய் கடா ; வாணலி , பொரிக்கும் சட்டி , கொப்பரை .
கடாரம் காழகம் , பர்மா நாடு ; பெருநாரத்தை ; கொப்பரை .
கடாரி ஈனாத இளம் பசு .
கடாரை கடார நாரத்தை .
கடாவல் வினாவல் ; செலுத்தல் ; ஆணி முதலியன அடித்தல் ; குட்டுதல் ; கேட்டல் .
கடற்கொள்ளைக்காரன் கப்பற் கொள்ளைக் காரன் .
கடற்கோ வருணன் , கடலரசன் , கடல்தெய்வம் .
கடற்கோடு கடற்கரை .
கடற்சார்பு நெய்தல்நிலம் .
கடற்சில் கடல்மரக்கொட்டை .
கடற்செலவு கடற்பயணம் .
கடற்சேர்ப்பன் நெய்தல்நிலத் தலைவன் .
கடற்பக்கி காண்க : கடற்பட்சி .
கடற்பச்சை காண்க : கடற்பாலை .
கடற்பஞ்சு கடற்காளான் .
கடற்பட்சி கிளிஞ்சில் .
கடற்படை கப்பற்படை .
கடற்பன்றி ஒரு கடல்விலங்கு , பெருமீன்வகை .
கடற்பாசி ஒருவகைக் காளான் , கடற்பூடு .
கடற்பாம்பு கடலில் வாழும் நச்சுப் பாம்புவகை .
கடற்பாய்ச்சி கடலில் கப்பற் செலுத்துவோன் .
கடற்பாலை சோழி .
கடற்பிணா நெய்தல்நிலப் பெண் .
கடற்பிறந்தாள் பாற்கடலில் தோன்றிய திருமகள் .
கடற்புறம் ஆறுகள் கடலுடன் கூடும் முகத்தில் உள்ள மணல் அடைப்பு ; கடற்கரைப் பகுதி .
கடற்பூ செம்மருது .
கடற்பெருக்கு கடலில் நீரேற்றம் .
கடற்றாமரை பெருந்தாமரை .
கடற்றாழை கொந்தாழை ; வாட்டாழை .
கடற்றுறை துறைமுகம் .
கடற்றெங்கு தென்னைவகை .
கடற்றெய்வம் வருணன் .
கடறு காடு ; அருவழி ; பாலைநிலம் ; மலைச் சாரல் ; வாளுறை .
கடன் முறைமை ; இருணம் ; இரவற்பொருள் ; இயல்பு ; வைதிகக் கிரியை ; விருந்தோம்பல் ; மரக்கால் ; குடியிறை ; மானம் ; இறுதிக்கடன் ; பின்னர்த் தருவதாக வாங்கிய பொருள் ; கடப்பாடு .
கடன்கட்டாய்ப்பேசுதல் கடுமையாய்ப் பேசுதல் .