சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| கடுவாய் | கழுதைப்புலி ; நாய் ; காவிரியின் கிளையாறுகளுள் ஒன்று ; முரசம் , கடுவாய்ப் பறை . |
| கடுவாய்ப்பறை | ஒருவகைப் போர்ப்பறை . |
| கடுவாயன் | கழுதை ; பாம்பு ; பேச்சால் எரிந்து விழுவோன் . |
| கடுவான்கரப்பன் | ஒருவகைக் கரப்பான் நோய் , குழந்தைகளின் முழந்தாளுக்கும் கால்பரட்டுக்கும் இடையில் வரும் ஒருவகைச் சிரங்கு . |
| கடுவிதித்தம் | கடுகுரோகிணிப் பூண்டு . |
| கடுவிலை | அதிக விலை . |
| கடுவினை | தீவினை ; கொடிய துன்பம் . |
| கடுவு | வேளை . |
| கடுவுப்பு | மாமிசபேதி ; வளையலுப்பு . |
| கடுவெளி | வெறுவெளி , நிழலற்ற வெளியிடம் ; வானம் . |
| கடுவை | ஒருவகைப் பறை . |
| கடூரம் | கொடுமை ; கடினம் . |
| கடூழியச்சிறை | கடுங்காவல் . |
| கடேரியம் | மரமஞ்சள் ; கடம் . |
| கடை | முடிவு ; இடம் ; எல்லை ; அங்காடி ; கீழ்மை ; தாழ்ந்தோன் ; வாயில் ; புறவாயில் ; பக்கம் ; பணிப்பூட்டு ; காம்பு ; ஒரு வினையெச்ச விகுதி ; ஏழனுருபு ; பின் ; கீழ் ; சோர்வு ; வழி ; பெண்குறி . |
| கடை | (வி) குடை ; சிலுப்பு ; தயிர்கடை ; பருப்பு முதலியன கடை ; மரம் முதலியன கடை ; தீக்கடை . |
| கடைக்கண் | கண்ணின் கடை ; கண்ணின் ஓரப் பார்வை , அருள் . |
| கடைக்கண்பார்வை | குறிப்போடு சாய்த்து நோக்குகை ; அருள்நோக்கம் . |
| கடைக்கணித்தல் | அருளுதல் ; கடைக்கண்ணாற் பார்த்தல் . |
| கடைக்கணோக்கம் | காண்க : கடைக்கண்பார்வை . |
| கடைக்கருவி | உடுக்கை . |
| கடைக்கனல் | ஊழித் தீ . |
| கடைக்காணுதல் | மேற்பார்த்தல் . |
| கடைக்காப்பு | பதிகத்தி னிறுதிப் பாட்டு , இறுதியான முத்திரைப் பாட்டு . |
| கடைக்கால் | அடிப்படை ; இறுதிக் காலம் ; ஊழிக்காற்று ; பின்வருங் காலம் ; தாழ்ந்த இடம் . |
| கடைக்குட்டி | கடைசிப் பிள்ளை . |
| கடைக்குறை | சொல்லின் இறுதி குறைந்து வரும் செய்யுள் விகாரம் . |
| கடைக்குளம் | உத்தராட நாள் . |
| கடைக்கூட்டன் | செயலாளன் , காரிய நிருவாகி . |
| கடைக்கூட்டு | இறக்குந் தறுவாய் ; மேலாண்மை செய்தல் , காரிய நிருவாகம் . |
| கடைக்கூட்டுத் தானத்தார் | கோயில் அதிகாரிகள் . |
| கடைக் கூட்டுதல் | செய்துமுடித்தல் ; ஒருப்படுத்துதல் ; சம்பாதித்தல் ; இறுதியடை வித்தல் ; நடைமுறையிற் கொணர்ந்து சேர்த்தல் . |
| கடைக்கூடுதல் | கைகூடுதல் ; சம்மதித்தல் . |
| கடைக்கூழை | அளவடியுள் முதற்சீர் ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் வரும் தொடைவகை ; பின்னணியாகச் செல்லும் படைவகுப்பு . |
| கடைக்கொம்பு | ஏரியின் கோடியிலுள்ள கரை ; விலங்கின் அடிக்கொம்பு . |
| கடைக்கொள்ளி | குறைக்கொள்ளி , நுனியில் எரியும் கொள்ளிக்கட்டை . |
| கடைக்கொள்ளுதல் | உறுதியாகக் கொள்ளுதல் ; பின்செல்லுதல் ; சேர்த்தல் ; முடிவுபெறுதல் . |
| கடைக்கோடி | அறக்கடைசி , இறுதி எல்லை . |
| கடைகட்டுதல் | காரியத்தை நிறுத்திவிடுதல் ; கடையை மூடுதல் . |
| கடைகண்ணி | கடை . |
| கடைகழிமகளிர் | பொதுமகளிர் . |
| கடைகாப்பாளன் | வாயிற்காவலன் . |
| கடைகால் | பால் கறக்கும் மூங்கிற்குழல் ; கொக்கியின் ஓர் உறுப்பு ; அடிப்படை . |
| கடைகாவலன் | காண்க : கடைக்காப்பாளன் . |
| கடைகூடுதல் | கைகூடுதல் . |
| கடைகெடுதல் | மிக இழிவடைதல் . |
| கடைகேடு | மிக்க இழிவு . |
| கடைகொள்ளுதல் | முடிவுபெறுதல் . |
| கடும்பு | சுற்றம் ; சும்மாடு ; சீம்பால் ; கூட்டம் . |
| கடும்புப்பால் | சீம்பால் , காய்ச்சித் திரட்டிய சீம்பால் . |
| கடும்பை | காண்க : கடுப்பை . |
| கடுமரம் | எட்டிமரம் ; கடுக்காய்மரம் . |
| கடுமழை | கனத்த மழை , பெருமழை . |
| கடுமா | சிங்கம் ; புலி . |
| கடுமான் | சிங்கம் ; புலி . |
| கடுமீன் | சுறா . |
| கடுமுடுக்கு | வேகமாய் நடக்கை ; முடுக்கான அதிகாரம் . |
| கடுமுடெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| கடுமுள் | ஆயுதப் பொது ; பேராயுதம் ; கண்டங்கத்தரி ; நச்சுமுள் . |
| கடுமை | கொடுமை ; கண்டிப்பு ; கடினம் ; வன்மை ; மிகுதி ; விரைவு ; வெம்மை ; மூர்க்கம் ; சினம் . |
| கடுமொடெனல் | காண்க : கடுமுடெனல் . |
| கடுமொழி | கடுமையான சொல் , வன்சொல் . |
| கடுரம் | மோர் . |
| கடுரவம் | தவளை . |
| கடுவங்கம் | இஞ்சி . |
| கடுவட்டி | அதிக வட்டி . |
| கடுவரல் | விரைந்து வருதல் . |
| கடுவரை | செந்தூக்கான மலை . |
| கடுவல் | வன்னிலம் ; கடுங்காற்று . |
| கடுவழி | கடத்தற்கு அரிய வழி . |
| கடுவளி | சூறாவளி , பெருங்காற்று . |
| கடுவன் | ஆண்குரங்கு ; ஆண்பூனை ; படை நோய் ; மாவிலங்கைமரம் . |
| கடுவன்பன்றி | ஆண்பன்றி . |
| கடுவன்பூனை | ஆண்பூனை . |
| கடுவன்முசல் | ஆண்முயல் . |
|
|
|