கண்கெடுதல் முதல் - கண்டவன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கண்டசூலை கழுத்துநோய்வகை , கழுத்தைச் சுற்றிவரும் புண் .
கண்டத்திரை பலநிறத் திரைச்சீலை .
கண்டதிப்பிலி வங்காளத் திப்பிலி , ஒரு கொடி வகை .
கண்டது காணப்பட்ட பொருள் ; சம்பந்தமற்ற செய்தி .
கண்டதுங்கடியதும் நல்லதும் கெட்டதும் .
கண்டதுண்டம் பல துண்டம் .
கண்டநாண் கழுத்தணிவகை .
கண்டநாளம் தொண்டைக்குழி .
கண்டப்படை கட்டடத்தின் அடிப்படை .
கண்டப்பனி கால்நடைகளுக்கு ஆகாத கொடும் பனி .
கண்டப்புற்று தொண்டைப் புண்வகை .
கண்டபடி பார்த்தவாறு , மனம்போன விதம் .
கண்டபத்திரம் வழக்கைத் தீர்த்து எழுதும் சீட்டு .
கண்டபதம் மண்ணுளிப்பாம்பு ; பூநாகம் .
கண்டபலம் இலவு .
கண்டபேரண்டம் யானையையும் தூக்கிச் செல்லவல்ல இருதலைப் பறவை .
கண்டம் கழுத்து ; இடுதிரை ; நிலத்தின் பெரும் பிரிவு ; துண்டம் ; நவகண்டம் ; கண்ட சருக்கரை ; எழுத்தாணி ; குரல் ; கவசம் ; வாள் ; கள்ளி ; ஓர் யாகம் ; குன்றிவேர் ; யானைக் கழுத்து ; சாதிலிங்கம் ; கோயில் முகமண்டபம் ; அக்குரோணி ; கண்டாமணி .
கண்டம்பயறு காராமணி .
கண்டமட்டும் மிகுதியாய் .
கண்டமண்டலம் குறைவட்டம் .
கண்டமாலை கழுத்தைச் சுற்றியுண்டாகும் புண் ; ஒருவகைக் கழுத்தணி .
கண்டயம் வீரக்கழல் .
கண்டர் துரிசு .
கண்டரை ஆதார நாடி , ஒரு நரம்பு , இதயத்தின் கீழறைகள் இரண்டில் வலப்புறத்திலிருந்து செல்லும் பெருநாடி என்னும் பெரிய குழல் .
கண்டல் தாழை , ஒரு மரவகை ; முட்செடி ; நீர்முள்ளி ; கடல்மீன்வகை .
கண்டவன் படைத்தவன் ; பார்த்தவன் ; தொடர்பில்லாதவன் .
கண்கெடுதல் பார்வையிழத்தல் ; அறிவழிதல் .
கண்கொட்டுதல் கண்ணிமைத்தல் .
கண்கொதி காண்க : கண்ணேறு .
கண்கொழுப்பு அகங்காரம் .
கண்கொள்ளாக்காட்சி அடங்காத காட்சி , வியத்தற்குரிய தோற்றம் .
கண்சமிக்கினை காண்க : கண்சாடை .
கண்சமிக்கை காண்க : கண்சாடை .
கண்சவ்வு விழியின் ஓரச் சதை .
கண்சாடை கண்ணாற் குறிப்பித்தல் ; அறிந்தும் அறியார் போன்றிருத்தல் .
கண்சாத்துதல் அன்பொடு நோக்குதல் ; வேண்டுதலுக்காகத் தெய்வத்திற்குக் கண்மலர் சாத்துதல் .
கண்சாய்தல் அறிவு தளர்தல் ; அன்பு குறைதல் .
கண்சாய்ப்பு கண்சாடை ; குறிப்பாகக் காட்டும் அருள் ; வெறுப்பான பார்வை ; சம்மதப்பார்வை ; கண்ணூறு .
கண்சிமிட்டுதல் கண்ணிமைத்தல் ; கண்ணாலே குறிப்புக் காட்டுதல் .
கண்சிவத்தல் சினத்தல் ; நோய் முதலியவற்றால் கண் செந்நிறமடைதல் .
கண்சுருட்டுதல் அழகு முதலியவற்றால் தன் வயப்படுத்தல் ; கண்ணுறங்குதல் .
கண்சுழலுதல் விழிகள் மயங்குதல் .
கண்செம்முதல் கண் பொங்குதல் .
கண்செருகுதல் விழிகள் உள்வாங்குதல் .
கண்செறியிடுதல் விழுங்கிவிடுதல் ; முழுதும் பரவி அடைத்துக்கொள்ளுதல் .
கண்டக்கட்டு பாவகை .
கண்டக்கரப்பன் கரகரப்பு , புகைச்சல் முதலியன உண்டாக்கும் ஒருவகைத் தொண்டைநோய் .
கண்டக்கருவி மிடற்றுக் கருவி .
கண்டக்குருகு கழுத்துநோய்வகை .
கண்டக சங்கம் முட்சங்குச் செடி .
கண்டகண் கண்ணோட்டமில்லாதவன் , கொடியோன் ; அசுரன் ; பகைவன் .
கண்டகத்துவாரம் முள்ளெலும்புத் தொளை , வீணாதண்டத்தின் நடுவே செல்லும் தொளை .
கண்டகபலம் பலாப்பழம் .
கண்டகம் முள் ; நீர்முள்ளிச் செடி : காடு ; உடைவாள் ; வாள் ; கொடுமை ; மூங்கில் .
கண்டகாசனம் ஒட்டகம் .
கண்டகாந்தாரம் பண்வகை .
கண்டகாரி காண்க : கண்டங்கத்திரி .
கண்டகி தாழை ; ஒருவகை மூங்கில் ; இலந்தை ; முதுகெலும்பு ; தீயவள் : காசிக்கருகேயுள்ள ஓர் ஆறு .
கண்டகிக்கல் சாளக்கிராமம் .
கண்டகிச்சிலை சாளக்கிராமம் .
கண்டகூணிகை வீணை .
கண்டகோடரி ஒருவகைக் கோடாலி , பரசு , மழு , துறவியருள் ஒருசாரார் தாங்கிச் செல்லும் கைக்கோடாலி .
கண்டங்கணம் திப்பிலி .
கண்டங்கத்தரி முள்ளுள்ள ஒருவகைக் கத்தரி , சிறுபஞ்சமூலத்துள் ஒன்று , தசமூலத்துள் ஒன்று .
கண்டங்கருவழலை ஒருவகைப் பாம்பு .
கண்டங்கருவிலி ஒருவகைப் பாம்பு .
கண்டங்காலி காண்க : கண்டங்கத்தரி .
கண்டங்கி காண்க : கண்டாங்கி .
கண்டச்சுருதி சாரீரம் .
கண்டசர்க்கரை ஒருவகைச் சருக்கரை .
கண்டசருக்கரை ஒருவகைச் சருக்கரை .
கண்டசரம் கழுத்தணிவகை .
கண்டசருக்கரைத்தேறு கற்கண்டுக் கட்டி .
கண்டசித்தி ஆசுகவி சொல்லும் வல்லமை .
கண்டசுத்தி ஆசுகவி சொல்லும் வல்லமை .