கண்ணடி முதல் - கண்ணுக்குக் கண்ணாதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கண்ணி பூமாலை ; பூங்கொத்து ; சூடும் பூ மாலை ; தலைமாலை ; போர்ப்பூ ; புட்படுக்கும் முடிப்புக்கயிறு ; பூட்டாங்கயிறு ; கயிறு ; தாமணி ; ஓர் இசைப்பாட்டு ; கரிசலாங்கண்ணி .
கண்ணிக்கயிறு நெய்வோரது விழுதுக்கயிறு ; பூட்டாங்கயிறு .
கண்ணிக்கால் கிளைவாய்க்கால் .
கண்ணிக்கொடி ஒரு படர்கொடிவகை , கருங்காக்கணம் .
கண்ணிகட்டுதல் அரும்புகொள்ளுதல் ; வலை கட்டுதல் .
கண்ணுகண்ணுதல் சூடிய போர்க்கண்ணிக்கு ஏற்ப வினைசெய்யக் கருதுதல் .
கண்ணிகம் மணித்தக்காளிச் செடி .
கண்ணிகுத்துதல் கண்ணிவைத்தல் ; சுருக்குக் கயிறு வைத்தல் .
கண்ணிகை பூவரும்பு ; தாமரைக்கொட்டை .
கண்ணிதழ் கண்மடல் , கண்ணிமை .
கண்ணிமாங்காய் மாவடு .
கண்ணிமை கண்ணிதழ் ; ஒரு மாத்திரைக் கால அளவு .
கண்ணிமைத்தல் இமைகொட்டல் .
கண்ணிமையார் தேவர் .
கண்ணியம் கனம் , மதிப்பு ; மேன்மை ; மர மஞ்சள் .
கண்ணியன் கண்ணியமுடையவன் , நாகரிகன் ; வேடன் .
கண்ணிரங்குதல் ஒலித்தல் ; அருள்செய்தல் .
கண்ணிலன் குருடன் ; கண்ணோட்டம் இல்லாதவன் .
கண்ணிலி கண்ணில்லாதவன் , குருடன் ; எறும்பு .
கண்ணிற்றல் எதிரே நிற்றல் .
கண்ணிறுக்கம் கண்ணோய்வகை .
கண்ணிறை தூக்கம் .
கண்ணினளவு ஒரு மாத்திரையளவு .
கண்ணீர் கண்ணிலிருந்து வழியும் நீர் .
கண்ணுக்கரசன் துரிசு .
கண்ணுக்கினியான் கரிசலாங்கண்ணி ; பொன்னாங்காணி .
கண்ணுக்குக் கண்ணாதல் மிகப் பாராட்டப்படுதல் ; அந்தரங்கமாயிருத்தல் .
கண்ணடி கண்ணாடி .
கண்ணடித்தல் கண்சாடை காட்டுதல் .
கண்ணடைத்தல் இடத்தை மறைத்தல் ; துளை இறுகுதல் ; வழியடைத்தல் ; தூங்குதல் .
கண்ணடைதல் ஊற்றடைதல் ; துளை இறுகல் ; பயிர் குருத்தடைதல் ; திரிந்து கேடுறுதல் .
கண்ணடைந்த பால் திரிந்துகெட்ட பால் , நெடு நேரம் வைத்திருந்து கெட்டுப்போன பால் .
கண்ணமரம் கண்சூட்டு நோய் .
கண்ணமுது பாயசம் .
கண்ணயத்தல் விரும்புதல் , மோகங் கொள்ளுதல் .
கண்ணயர்தல் உறங்குதல் , தூக்கநிலையடைதல் .
கண்ணராவி துன்பநிலை , துயரம் ; கேவல நிலை .
கண்ணரிதல் நீக்குதல் .
கண்ணரிப்பு கண்ணோய்வகை .
கண்ணவர் அமைச்சர் .
கண்ணழற்சி கண்ணெரிச்சல் ; பொறாமை .
கண்ணழித்தல் பாட்டிலுள்ள சொற்களைப் பிரித்தல் ; சொற்பொருளுரைத்தல் .
கண்ணழித்துரை சொற்பொருள் .
கண்ணழிப்பு சொற்பொருள் கூறுகை ; குறைவு ; காலத்தாழ்ப்பு , தாமதம் .
கண்ணழிவு சொற்பொருள் கூறுகை ; குறைவு ; காலத்தாழ்ப்பு , தாமதம் .
கண்ணழுத்தங்கோல் வலிய கணுக்களுடைய மூங்கில் ; ஓவியம் எழுதுங்கோல் .
கண்ணளி கண்ணாற் செய்யும் அருள் .
கண்ணறுதல் கண்ணோட்டம் இல்லாமை , அருளில்லாமற் போதல் ; நட்புக் குலைதல் .
கண்ணறை அகலம் ; குருடு ; வன்னெஞ்சு ; சிறு அறை ; வட்டத்துளை ; வலை முதலியவற்றின் கண் .
கண்ணறையன் கண்ணோட்டம் அற்றவன் , வன்னெஞ்சன் ; குருடன் .
கண்ணன் கண்ணுடையவன் ; கிருட்டினன் ; திருமால் ; கையாந்தகரை .
கண்ணனான் கண்போன்றவன் ; புரோகிதன் .
கண்ணா ஒரு மரவகை ; திப்பிலி .
கண்ணாட்டி அன்பானவள் , காதலி , மனையாட்டி .
கண்ணாடி உருவங்காட்டி , எண்வகை மங்கலப் பொருள்களுள் ஒன்று , முகம் பார்க்கும் கண்ணாடி ; மூக்குக் கண்ணாடி ; மின்மினி .
கண்ணாடிச்சால் திடர் இடைவிட்டு உழும் உழவு , குறுக்கும் நெடுக்குமாக உழும் உழவில் நடுவில் விடப்படும் திடர் .
கண்ணாடிச் சுவர் அடுப்பையடுத்த சுவர் .
கண்ணாடிப் பலகை பார்ப்பதற்கு ஏற்ற துளையுள்ள பலகை .
கண்ணாடியிலை வாழையின் ஈற்றிலை , தாறு விடுமுன் வாழைமரம் விடும் சிறிய இலை .
கண்ணாடிவிரியன் விரியன்பாம்புவகை .
கண்ணாணி கருவிழி ; உரையாணி ; மலவாய் .
கண்ணாணை ஒரு சூளுரை .
கண்ணாதல் கருத்து வைத்தல் ; அருமையாதல் .
கண்ணாம்பூச்சி கண்கட்டி ஆடும் பிள்ளை விளையாட்டுவகை ; கண்மயக்கம் .
கண்ணாம்பொத்தி கண்கட்டி ஆடும் பிள்ளை விளையாட்டுவகை ; கண்மயக்கம் .
கண்ணாமண்டை கண்மண்டை , கண்மேலுள்ள எலும்பு .
கண்ணாயிருத்தல் உற்றுப்பார்த்திருத்தல் ; காவலாயிருத்தல் ; விழிப்பாயிருத்தல் ; அருமையாயிருத்தல் .
கண்ணார் பகைவர் .
கண்ணார்வித்தல் கண்ணுக்கு இன்பமூட்டுதல் .
கண்ணாரக்காணுதல் வெளிப்படையாகக் காணுதல் ; ஆசைதீர நோக்குதல் .
கண்ணாள் கலைமகள் , நாமகள் .
கண்ணாளர் கம்மாளர் , ஓவியர் ; கணவர் , நாயகர் ; தோழர் .
கண்ணாளன் அன்பன் ; கணவன் ; தலைவன் ; கம்மாளன் ; ஓவியன் .
கண்ணாற்சுடுதல் கண்ணேறுபடப் பார்த்தல் .
கண்ணாறு பாசன வாய்க்கால் ; நன்செய்ப்பிரிவு ; சிறு பாலம் .