சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| கருதுதல் | எண்ணுதல் ; மறந்ததை நினைத்தல் ; நிதானித்தறிதல் ; உத்தேசித்தல் ; மதித்தல் ; விரும்புதல் ; அனுமானித்தல் ; நன்கு ஆலோசித்தல் ; ஒத்தல் . |
| கருந்தமிழ் | கொச்சைத்தமிழ் . |
| கருந்தரை | பாழ்நிலம் . |
| கருந்தலை | கால்பாகம் ; முடிவு ; தொடக்கம் ; கரிய தலை . |
| கருந்தனம் | பொன் ; பணம் . |
| கருந்தாது | இரும்பு ; இரும்பின் பொடி . |
| கருந்தாமக்கொடி | சிறுசெங்குரலி என்னும் மலைக்கொடி . |
| கருந்தாள் | அறுபட்ட தாளடி . |
| கருந்திடர் | பெரிய மேடு . |
| கருந்துகிலோன் | நீல ஆடையை அணிந்த பலராமன் . |
| கருந்தும்பை | பேய்மருட்டி ; கருங்காலிமரம் ; செடிவகை ; மரவிசேடம் . |
| கருந்துவரை | மலைத்துவரை ; மரவகை . |
| கருந்தூள் செந்தூள் பரத்தல் | கடுமையாய் முயலுகை . |
| கருந்தொழில் | வலிய தொழில் ; கொலைத் தொழில் ; தச்சுவேலை . |
| கருந்தோழி | அவுரிச்செடி . |
| கருநடம் | கருநாடகம் , கன்னடம் . |
| கருநந்து | நத்தைவகை . |
| கருநாக்கு | தீயநாக்கு ; தீயநாக்குள்ளவர் . |
| கருநாகப்படலம் | ஒருவகைக் கண்நோய் . |
| கருநாகம் | கரும்பாம்பு , இராகு ; காரீயம் . |
| கருநாடகம் | தென்னிந்திய மாநிலங்களுள் ஒன்று ; கன்னடமொழி ; தென்னாட்டு இசை ; பழைமையானது ; நாகரிகமற்றது . |
| கருநாடர் | கருநாடகத்தைச் சேர்ந்தவர் . |
| கருநாபி | கல்லுப்பு |
| கருநாய் | ஓநாய் |
| கருநார் | பனையின் கறுத்த நார் . |
| கருநாழிகை | இரவு . |
| கருநாள் | நற்செயல்களுக்கு ஆகாத நாள் , தீய நாள் . |
| கருநிலம் | பயன்படாத நிலம் . |
| கருநீலப்பிறப்பு | நரகப் பிறப்புக்குச் சிறிது மேற்பட்ட பிறவி . |
| கருநெய்தல் | கருங்குவளை , நீலம் . |
| கருநெல்லி | ஒருவகை நெல்லிமரம் . |
| கருநெறி | நெருப்பு . |
| கருணம் | எலுமிச்சைமரம் ; காது . |
| கருணமல்லி | முல்லை . |
| கருணன் | அருளுடையவன் ; கர்ணன் ; கும்பகர்ணன் . |
| கருணா | ஒருவகை வாச்சியம் ; கருணை ; பாவனை ஐந்தனுள் ஒன்றான அருள் . |
| கருணாகடாட்சம் | அருள்நோக்கு , கருணையோடு கூடிய கடைக்கண் பார்வை . |
| கருணாகரன் | அருளுக்கு இருப்பிடமான கடவுள் . |
| கருணாநிதி | அருட்செல்வன் , கடவுள் . |
| கருணாபாவனை | வறியவர்கள் வறுமை நீங்கிச் செல்வமுடையவர்களாகுக என்று பாவித்தல் . |
| கருணாமூர்த்தி | அருள் உருவான கடவுள் . |
| கருணி | மலை ; குகை . |
| கருணிகை | தாமரைக்கொட்டை . |
| கருணீகம் | ஊர்க் கணக்குவேலை . |
| கருணீகன் | ஊர்க்கணக்கன் ; கணக்குவேலை பார்க்கும் ஒரு சாதி . |
| கருணை | அருள் , தயவு , இரக்கம் , ஒரு கிழங்கு ; ஒன்பான் சுவையுள் ஒன்றாகிய அவலச்சுவை . |
| கருணைமறம் | அருளாற் செய்யும் தண்டனை . |
| கருத்தபம் | காண்க : கர்த்தபம் . |
| கருத்தமம் | சேறு . |
| கருத்தரங்கு | கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் மேடை . |
| கருத்தரித்தல் | கருத்தங்கல் , சினையாதல் , சூல்கொள்ளுதல் . |
| கருத்தவ்வியம் | செய்யத்தக்கது . |
| கருத்தளவு | அனுமானப் பிரமாணம் . |
| கருத்தளவை | அனுமானப் பிரமாணம் . |
| கருத்தா | செய்வோன் ; தலைவன் ; கடவுள் . |
| கருத்தன் | செய்வோன் ; தலைவன் ; கடவுள் . |
| கருத்தாவாகுபெயர் | கருத்தாவின் பெயரைக் காரியத்திற்கு வழங்குதல் . |
| கருத்தாளி | புத்திசாலி , கருத்துள்ளவன் . |
| கருத்து | நோக்கம் , தாற்பரியம் , கொள்கை , எண்ணம் , விருப்பம் , சொற்பொருள் , கவனம் , இச்சை , விவேகம் , சம்மதம் , மனம் , பயன் , சங்கற்பம் , தன்மதிப்பு . |
| கருத்துக்கொள்ளுதல் | நோக்கமுறுதல் , மனம் வைத்தல் . |
| கருத்துடையடை | அபிப்பிராயத்தோடு கூடிய விசேடணத்தை உடையதாகிய அணி . |
| கருத்துடையடைகொளி | அபிப்பிராயத்தோடு கூடிய விசேடியத்தை உடையதாகிய அணி . |
| கருத்துப்பிசகு | தவறான கருத்து , தப்புரை . |
| கருத்துப்பிரிதல் | மனத்து உதித்தல் ; கருத்து விளங்குதல் . |
| கருத்துப்பொருள் | மனத்தாலே கருதப்பட்ட பொருள் . |
| கருத்துரை | தாற்பரியம் , செய்யுட் கருத்துரைக்கு முரை , உட்பொருள் . |
| கருத்தெடுத்தல் | சூழ்ச்சி செய்தல் ; உட்கருத்தறிதல் , உள்ளவுண்மையை உணர்ந்தறிதல் . |
| கருத்தொட்டுதல் | பொருள் காணுதல் ; தொக்கு நின்ற சொல்லை விரித்துப் பொருள்காணுதல் ; பிறர் பாடத்தில் தன் கருத்தை ஒட்டுதல் ; மனத்தை ஒருமுகப்படுத்துதல் . |
| கருத்தோட்டம் | சிந்தனை . |
| கருதல் | எண்ணல் , அனுமானம் , நினைத்தல் . |
| கருதலர் | பகைவர் . |
| கருதலளவை | காண்க : கருத்தளவு(வை) . |
| கருதலார் | காண்க : கருதலர் . |
| கருதாதார் | காண்க : கருதலர் . |
| கருதார் | காண்க : கருதலர் . |
|
|
|