சொல்
|
அருஞ்சொற்பொருள் |
காசுமாலை | பொற்காசு கோத்த மாலையணி . |
காசை | காயாஞ்செடி ; நாணல் ; காசநோய் ; புற்பற்றை . |
காசையாடை | காவித்துணி . |
காஞ்சனம் | பொன் ; புன்கமரம் . |
காஞ்சனி | மஞ்சள் ; பொன்னிறம் ; கோரோசனை ; காட்டாத்தி . |
காஞ்சா | கஞ்சாச்செடி . |
காஞ்சி | காஞ்சிபுரம் ; ஆற்றுப் பூவரசு ; காஞ்சிப்பூமாலை ; காஞ்சித்திணை ; நிலையின்மை ; செவ்வழிப்பண்வகை ; நொய்யலாறு ; நாதாங்கி ; மகளிர் இடையணி ; மயிர் ; பெருமை ; அறிவு . |
காஞ்சிகா | காண்க : காஞ்சிரம் . |
காஞ்சிகை | காண்க : காஞ்சிரம் . |
காஞ்சித்திணை | வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமைகளைச் சாற்றும் புறத்திணை ; வீரன் காஞ்சி மலர்மாலை அணிந்து பகைவர்முன் எதிரூன்றி நிற்றலைக் குறிக்கும் புறத்திணை . |
காஞ்சியம் | வெண்கலம் , உபதாதுக்களுள் ஒன்று . |
காஞ்சியெதிர்வு | எதிரூன்றும் படையை மேலிடாது தடுக்கும் வீரனுடைய திறமையைக் கூறும் புறத்துறை . |
காஞ்சிரங்காய் | எட்டிக்கொட்டை . |
காஞ்சிரம் | எட்டிமரம் . |
காஞ்சிரை | எட்டிமரம் . |
காஞ்சுகம் | சட்டை . |
காஞ்சுகன் | சட்டை போட்ட மெய்காப்பாளன் . |
காஞ்சுகி | காஞ்சுகன் ; சட்டை . |
காஞ்சொறி | பூண்டுவகை . |
காஞ்சோன்றி | பூண்டுவகை . |
காட்சி | பார்வை ; காணல் ; தோற்றம் ; தரிசனம் ; கண்காட்சி ; வியத்தகு காட்சி ; காட்சியளவை ; அறிவு ; தலைமகளைத் தலைமகன் முதலில் காணுதலைக் கூறும் கைக்கிளைத் துறை ; வீரர் வீரபத்தினியர்க்கு ஏற்ற நடுகல்லை ஆராய்ந்து காணும் புறத்துறை ; நடுகல்லை வீரர் தரிசித்தலைக் கூறும் புறத்துறை ; அழகு ; தன்மை ; நூல் . |
காட்சிப்பிரமாணம் | நேராகக் காண்டல் . |
காட்சிப்பொருள் | காணப்படும் பொருள் ; கையுறை . |
காட்சிமறைத்தல் | எண் குற்றத்துள் உண்மைக் கொள்கையைக் காணவொட்டாமல் தடுக்கும் செயல் . |
காட்சியணி | ஓரணி ; உவமான உவமேயங்களின் தன்மையை ஒன்றற்கொன்று ஏற்றிக் கூறுதல் . |
காட்சியர் | அறிஞர் . |
காட்சியவர் | அறிஞர் . |
காட்சியளவை | காண்டல் அளவை . |
காட்சியறிவு | பொருளை நேரிற்கண்டு அறியும் அறிவு . |
காட்சியோகு | ஞானயோகம் . |
காட்சிவரி | தன் வருத்தத்தைப் பலரும் காணும் படி நடிக்கும் கூத்து ; காட்சிகளின்பொருட்டு ஏற்பட்ட வரி . |
காசுமண் | காவிக்கல் . |
காங்கு | நீலப்புடைவை ; பெரும்பானை ; கோங்குவகை . |
காங்கூலம் | சுட்டுவிரல் , பெருவிரல் , பேடுவிரல்(நடுவிரல்) என்னும் மூன்றும் ஒட்டிநிற்க , மோதிரவிரல் முடங்கிச் சிறுவிரல் நிமிர்ந்து நிற்கும் இணையா வினைக்கை . |
காங்கெயம் | ஒருவகைப் பொன் . |
காங்கேயன் | கங்கையில் தோன்றிய முருகக்கடவுள் ; கங்கையின் மகனான வீடுமன் . |
காங்கை | வெப்பம் . |
காச்சக்கீரை | புளிச்சைக்கீரை . |
காச்சரக்கு | புளிச்சைக்கீரை . |
காச்சரக்குநார் | புளிச்சைக்கீரை . |
காச்சி | துவரை . |
காச்சிரக்கு | காண்க : காச்சக்கீரை . |
காச்சுப்பீச்செனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
காச்சுமூச்செனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
காச்சுரை | காண்க : காச்சக்கீரை . |
காச்சுவாசம் | காச இழுப்பு . |
காசண்டி | வாயகலமுள்ள ஒருவகை ஏனம் . |
காசநீர் | காசநோய்க்குக் காரணமான கெட்ட நீர் . |
காசம் | ஈளைநோய் ; கோழை ; நாணல் ; வானம் ; பளிங்கு ; கண்ணோய்வகை ; பொன் . |
காசமர்த்தகம் | பெரும்புல் . |
காசரம் | எருமை . |
காசறை | கத்தூரிவிலங்கு ; கத்தூரி ; மயிர்ச்சாந்து ; மணி . |
காசறைக்கரு | கத்தூரிவிலங்கின் குட்டி . |
காசனம் | கொலை . |
காசா | காயாஞ்செடி ; நாணல் ; எருமை ; சொந்தம் ; அசல்விலை ; மிகவும் சிறந்த ; துணிவகை ; தலைவன் . |
காசாக்காரன் | சொந்தக்காரன் . |
காசாப்பற்று | தனது பற்று . |
காசாம்பாரை | ஒரு மீன்வகை . |
காசாம்பூவண்ணன் | திருமால் ; துரிசு ; காய்ச்சற்பாடாணம் |
காசாயம் | ரொக்க வரும்படி . |
காசி | ஒரு நகரம் ; செப்புக்காசு ; காசிக்குப்பி ; சீரகம் ; சிரமம் ; காசு . |
காசிக்கமலம் | பட்டை தீர்ந்த வயிரக் கல்வகை . |
காசிக்கல் | காகச்சிலை ; காந்த சத்தியுள்ள ஒரு வகை இரும்புக் கட்டு . |
காசித்தீர்த்தம் | காசியில் எடுக்கப்படும் கங்கை நீர் . |
காசித்தும்பை | தும்பைச்செடியில் ஒருவகை . |
காசிமணிமாலை | ஒருவகைக் கழுத்தணி . |
காசிரம் | வட்டம் . |
காசிரோர்த்தம் | வறட்சுண்டி ; தொட்டாற் சுருங்கி . |
காசினி | பூமி . |
காசு | பொன் ; அச்சுத்தாலி ; குற்றம் ; நாணயம் ; சிறு செப்புக்காசு ; மணி ; வெண்பாவின் இறுதிச்சீருள் ஒன்று ; கோழை ; சூதாடுகருவி . |
காசுக்கட்டி | ஒருவகை மருந்துச் சரக்கு ; மரவகை |
காசுக்கடை | பணம் மாற்றும் கடை ; தங்கம் , வெள்ளி விற்கும் இடம் . |
காசுக்காரன் | காசுக்கடைக்காரன் ; செல்வன் . |
காசுகட்டுதல் | செப்புக்காசால் விளையாடுதல் ; பணம் வைத்துச் சூதாடுதல் . |
காசுகல் | நிறைகல் . |
![]() |
![]() |
![]() |