கானாங்கெளிறு முதல் - கானை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கானாங்கெளிறு நன்னீரில் வாழும் ஒருவகை மீன் .
கானாங்கோழி கானங்கோழி , காட்டுக்கோழி ; வான்கோழி .
கானாங்கோழை கானா வாழைவகை ; ஒரு பூண்டுவகை .
கானாங்கோனான் குழப்பம் .
கானாத்தடி காண்க : கானா .
கானான் ஒருவகைச்செடி .
கானிலம் கொடிவேலி .
கானீனன் கன்னிபெற்ற பிள்ளை ; கன்னன் .
கானெறி காண்க : காலதர் .
கானை காலிற் காணும் மாட்டுநோய்வகை ; காளையார்கோயில் .