சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| கிடுகிடுத்தல் | நடுங்குதல் ; ஒலித்தல் ; பல்லோடு பல் கொட்டுதல் . |
| கிடுகிடுபாதாளம் | அச்சத்தை உண்டுபண்ணும் பெரும்பள்ளம் . |
| கிடுகிடெனல் | ஓர் ஒலிக்குறிப்பு ; அச்சக் குறிப்பு ; விரைவுக் குறிப்பு . |
| கிடுகின்படம் | தோற்கேடகம் . |
| கிடுகு | கேடகம் ; சட்டப்பலகை ; தேர் மரச்சுற்று ; முடைந்த ஓலைக் கீற்று ; வட்டவடிவப்பாறைவகை . |
| கிடுகு பின்னுதல் | ஓலை முடைதல் . |
| கிடுகோலை | கீற்றுக்குரிய தென்னையோலை . |
| கிடுபிடி | வட்டவடிவமான ஒருவகை வாத்தியம் . |
| கிடுமுடி | ஒருவகைச் சிறுபறை . |
| கிடேச்சு | நெட்டி . |
| கிடேச்சை | நெட்டி . |
| கிடை | கிடக்கை: நோயில் விழுகை ; இருப்பிடம் ; வேத பாடசாலை ; வேதமோதுங்குழாம் ; ஆயுதம் பயிலிடம் ; ஆட்டுக்கிடை ; உட்கிடை ; ஐயம் ; உவமை ; நெட்டி ; சடைமரம் . |
| கிடைக்காரன் | ஆட்டுக்கிடைக்கு உரியவன் ; ஆட்டுக்கிடை வைக்கும் நிலத்துக்குரியவன் . |
| கிடைகொடுத்தல் | பசு முதலியன பொலி எருதின் சேர்க்கைக்கு இடம்கொடுத்தல் . |
| கிடைச்சரக்கு | நாட்பட்ட சரக்கு . |
| கிடைச்சி | காண்க : கிடேச்சு . |
| கிடைச்சு | காண்க : கிடேச்சு . |
| கிடைச்சை | காண்க : கிடேச்சு . |
| கிடைத்தல் | அடைதல் , பெறுதல் , இயைதல் , அணுகல் , எதிர்த்தல் . |
| கிடைப்படுதல் | நோயுறுதல் ; கட்டுப்படுதல் . |
| கிடைப்பாடு | நோய் . |
| கிடைப்பிசகு | படுத்திருக்கும்போது நிலைமாறியதால் ஏற்படும் சுளுக்கு . |
| கிடைமறித்தல் | உரத்திற்காகக் கால்நடைகளை வயலிற் கூட்டுதல் . |
| கிடைவைத்தல் | உரத்திற்காகக் கால்நடைகளை வயலிற் கூட்டுதல் . |
| கிண்கிணி | காற்சதங்கை , அரைச் சதங்கை , கிலுகிலுப்பை . |
| கிண்கிணித் தாமம் | சதங்கைமாலை . |
| கிண்கிணி மாலை | சதங்கைமாலை . |
| கிண்கிணி வாய்க்கொள்ளுதல் | சிறு சதங்கையின் வாய் போலச் சிறிதே மலரத் தொடங்குதல் . |
| கிண்கிணி வாய்ச்செய்தல் | சிறு சதங்கையின் வாய் போலச் சிறிதே மலரத் தொடங்குதல் . |
| கிண்கிணெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| கிண்டல் | எள்ளல் ; பரிகாசம் ; தூண்டிவிடுகை . |
| கிண்டன் | தடியன் ; உரப்புத்துணி . |
| கிண்டான் | ஒருவகை உரப்புத்துணி . |
| கிண்டி | மூக்குத் துளையால் நீர் விழும் சிறு பாத்திரம் . |
| கிண்டிக்கொடுத்தல் | கிளறிக்கொடுத்தல் ; தூண்டிவிடுதல் ; நினைப்பூட்டுதல் . |
| கிண்டிப்பார்த்தல் | தோண்டிப் பார்த்தல் ; ஆராய்தல் . |
| கிண்டிவிடுதல் | காண்க : கிண்டிக்கொடுத்தல் . |
| கிண்டுதல் | கிளறுதல் ; தோண்டுதல் ; ஆராய்தல் ; நினைப்பூட்டுதல் ; தூண்டுதல் ; கடைதல் ; கிளறிச் சமைத்தல் ; வெளிப்படுத்துதல் ; எள்ளல் ; கிழித்தல் . |
| கிண்ணகம் | வெள்ளம் . |
| கிண்ணம் | சிறு வட்டில் ; கிண்ணி ; நாழிகை வட்டில் . |
| கிண்ணாரம் | ஒரு நரம்பிசைக் கருவி . |
| கிட | ஒரு நிகழ்கால இடைநிலை . |
| கிடக்கட்டும் | அதைத் தள்ளு என்னும் புறக்கணிப்புக் குறிப்பு . |
| கிடக்கிடு | அதைத் தள்ளு என்னும் புறக்கணிப்புக் குறிப்பு . |
| கிடக்கிடும் | அதைத் தள்ளு என்னும் புறக்கணிப்புக் குறிப்பு . |
| கிடக்கை | படுக்கைநிலை ; படுக்கை ; படுக்குமிடம் ; பூமி ; பரப்பு ; இடம் ; உள்ளுறு பொருள் . |
| கிடகு | இருபத்துநான்கு விரல்கொண்ட முழஅளவு . |
| கிடங்கர் | அகழி ; கடல் . |
| கிடங்காடுதல் | சுடுகாட்டில் பிணத்தைச் சுற்றி வருதல் . |
| கிடங்கு | அகழ் ; குளம் ; குழி ; பண்டசாலை , பொருளறை ; சிறைச்சாலை . |
| கிடத்தல் | படுத்திருக்கும் இருக்கைவகை . |
| கிடத்துதல் | கிடக்கச்செய்தல் , படுக்கச் செய்தல் . |
| கிடந்தகிடையாய் | நோயால் படுத்த படுக்கையாய் . |
| கிடந்த திருக்கோலம் | திருமால் பள்ளிகொண்ட நிலை . |
| கிடந்துருளி | நீர் இறைக்கும் இராட்டின உருளை . |
| கிடப்பு | கிடந்து துயில்கை ; நிலை ; மேற்போகாத நிலைமை . |
| கிடப்புத்தொகை | இருப்புத்தொகை . |
| கிடப்புதல் | கிடத்துதல் . |
| கிடவாக்கிடை | பெருந்துன்ப நிலை ; நோய் முற்றிப் படுக்கையிலிருக்கை . |
| கிடா | கடா ; எருமை . |
| கிடாக்காலன் | எருமைக்கொம்பு . |
| கிடாசுதல் | காண்க : கடாசுதல் . |
| கிடாய் | ஆட்டின் ஆண் ; வியங்கோள் விகுதி ; காண் என்னும் பொருளில் வரும் முன்னிலை ஒருமை உரையசை . |
| கிடாரம் | கொப்பரை . |
| கிடாரவன் | அகில்வகை . |
| கிடாரி | கடாரி . |
| கிடி | பன்றி . |
| கிடிகோள் | காண்மின் என்னும் பொருளில் வரும் முன்னிலைப் பன்மை உரையசை . |
| கிடீர் | காண்மின் என்னும் பொருளில் வரும் முன்னிலைப் பன்மை உரையசை . |
| கிடுக்கட்டி | ஓர் ஒலி ; ஒருவகை முழவு ; இருப்பைப் பூவின் இடித்த கட்டி . |
| கிடுக்கு | கிடுக்கட்டி ; ஓர் ஒலிக்குறிப்பு . |
| கிடுக்குக்கிடுக்கெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| கிடுகிடாய்த்தல் | நடுநடுங்குதல் ; திகைத்தல் . |
| கிடுகிடாயமானம் | அதிர்ச்சி . |
| கிடுகிடு | ஒரு சிறுபறை ; நடுக்கம் . |
|
|
|