கிளித்தட்டு முதல் - கினை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கிறித்தவன் கிறித்தவ சமயத்தைச் சார்ந்தவன் .
கிறு நிகழ்கால இடைநிலை .
கிறுக்கல் தாறுமாறாக எழுதுதல் ; எழுத்தின் அடிப்பு .
கிறுக்கன் பைத்தியக்காரன் ; ஆணவம் பிடித்தவன் .
கிறுக்கு உருத்தெரியாத எழுத்து ; எழுதியதை அடித்தல் ; தலைச்சுற்று ; பைத்தியம் ; மிக்க ஆசை ; ஆணவம் .
கிறுக்குதல் எழுதுதல் ; கீறித்தள்ளல் ; வரைந்த எழுத்தை அடித்தல் ; தலைச்சுற்றுதல் .
கிறுகிறுத்தல் மயக்கமாதல் ; தடுமாறுதல் .
கிறுகிறுப்பு தலைச்சுழற்சி ; செருக்கு .
கிறுகிறெனல் தலைசுற்றற் குறிப்பு ; விரைவுக் குறிப்பு .
கிறுங்குதல் அசைதல் .
கிறுசன் குங்குமப்பூ ; மஞ்சள் .
கிறுத்துவம் அகில் .
கிறுது குறும்பு ; செருக்கு .
கிறுதுவேதன் பீர்க்கங்கொடி .
கின்று ஒரு நிகழ்கால இடைநிலை .
கின்னகம் தூக்கணங்குருவி .
கின்னம் துன்பம் ; கீழ்மை .
கின்னரகண்டி கின்னரர்களால் பாடப்படும் இசை .
கின்னரகீதம் கின்னரர்களால் பாடப்படும் இசை .
கின்னரப்பெட்டி ஆர்மோனியம் முதலிய வாத்தியப்பெட்டி .
கின்னரம் இசையெழுப்பும் ஒரு பறவைவகை ; ஒருவகை யாழ் ; நீர்வாழ் பறவை ; ஆந்தை .
கின்னரமிதுனம் கின்னரப் பறவைகளின் ஆண்பெண் இரட்டை ; ஒருசார் தேவசாதியின் ஆண்பெண் இணை .
கின்னரர் மனிதவுடலும் குதிரை முகமும் உடையராய் இசையில் வல்ல தேவசாதியார் .
கின்னரர்பிரான் குபேரன் .
கின்னராகம் ஒரு பெரும்பண் வகை .
கின்னரி யாழ்வகை ; கின்னரசாதிப் பெண் ; ஆந்தை .
கின்னி மழைக்கிளி .
கின்னிக்கோழி கினியாநாட்டுக் கோழி .
கினி கிரகபீடை .
கினிதல் முற்றுங் கவிதல் .
கினை புடமிடுதற்குரிய கவசம் ; விளாமரம் .
கிறித்தல் மாயஞ்செய்தல் .
கிளித்தட்டு ஒருவகை விளையாட்டு .
கிளிப்பிள்ளை கிளி ; கிளிக்குஞ்சு .
கிளிமூக்கன் கற்றாழை ; வளைந்த மூக்குடையவன் .
கிளிமூக்கு கிளிமூக்குப் போன்றது ; சுவடிகளில் ஏடு விழாமல் தடுக்கவைக்கும் ஓலையீர்க்குத் துண்டு .
கிளிமூக்குக்கிழங்கு ஆகாசகருடன் கிழங்கு .
கிளியந்தட்டு காண்க : கிளித்தட்டு .
கிளியீடு கிளியினாற் பொந்துகளிற் சேர்த்து வைக்கப்பட்ட கதிர்கள் .
கிளுகிளுத்தல் மகிழ்தல் .
கிளுகிளெனல் சிரித்தல் முதலிய ஒலிக்குறிப்பு ; செழித்தற் குறிப்பு ; ஒளிர்தற் குறிப்பு .
கிளுவை செடிவகை ; உயிர்வேலி ; பறவைவகை ; மீன்வகை ; மரவகை .
கிளை கப்பு ; பூங்கொத்து ; தளிர் ; சுற்றம் ; பகுப்பு ; இனம் ; உறவினர் ; மூங்கில் ; ஓர் இசைக்கருவி ; ஓர் இசை .
கிளைக்கதை ஒன்றிலிருந்து பலகதை தோன்றுங்கதை .
கிளைக்கொம்பு பன்றியின் கோரப்பல் .
கிளைகூட்டுதல் ஆந்தைகள் கூட்டமாய்ச் சத்தமிடுதல் .
கிளைச்சங்கம் துணைச்சங்கம் .
கிளைஞர் உறவினர் ; நட்பினர் ; மருதநிலமாக்கள் .
கிளைத்தல் மரம் கப்புவிடுதல் ; பெருகுதல் ; உண்டாதல் ; நெருங்குதல் ; விளைதல் ; நிறைதல் ; கிளறுதல் .
கிளைதல் நீக்குதல் ; களைதல் ; ஆடை களைதல் ; கிளறுதல் .
கிளைநதி ஆற்றினின்று பிரிந்து செல்லும் சிற்றாறு .
கிளைநரம்பு குரல் , இளி , துத்தம் , விளரி , கைக்கிளை என்னும் யாழ் நரம்புகள் .
கிளைப்பு கப்புவிடுகை ; கிண்டுகை .
கிளைப்பெயர் சுற்றத்தை உணர்த்தும் பெயர் .
கிளைமை உறவு .
கிளையடுப்பு கொடியடுப்பு .
கிளையார் உறவினர் ; நண்பர் .
கிளையிதழ் புறவிதழ் .
கிளையோடுதல் கிளைவிடுதல் .
கிளைவழி கொடிவழி , வமிசம் .
கிளைவிழுதல் கப்பு உண்டாதல் .
கிளைவிளக்கு பல கிளைகளையுடைய மணவிளக்குவகை .
கிற்பன் அடிமையானவன் .
கிற்பு வலிமை ; வேலைப்பாடு ; செய்கை ; அடிமைத்தனம் .
கிற்றல் செய்யுந்திறங்கொள்ளுதல் .
கிறாக்கி அருமை ; விலையேற்றம் .
கிறாம்புதல் மெல்லச் செதுக்குதல் .
கிறாய் பச்சைநிறக் களிமன் .
கிறாளித்தனம் கொடுமை .
கிறி குழந்தைகளின் முன்கையில் அணியும் சிறு பவள வடம் ; பொய் ; தந்திரம் ; மாயம் .
கிறிச்சிடுதல் கிறிச்சென்று ஒலித்தல் .
கிறிசு குறுவாள் .