கீல்கீலாய் முதல் - கீழிடுதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கீழாநெல்லி நெல்லிச் செடிவகை ; சிறிய மரவகை .
கீழாறு நிலத்தினுள்ளோடும் ஆறு .
கீழிசை பாடுதற்குரிய குற்றங்களுள் ஒன்று .
கீழிடுதல் தாழ்த்தல் .
கீழ்க்கடை கழிந்துபோன நாள்கள் ; இழிந்தது .
கீழ்க்கண் கீழ்ப்பார்வை ; கண்ணின் கீழ்ப்பக்கம் .
கீழ்க்கணக்கு அடிநிமிர்வில்லாச் செய்யுள் பலவற்றால் அறம் பொருள் இன்பங்களைப்பற்றிக் கூறும் நூல்வகை ; கீழ்வாய் இலக்கம் ; உதவிக்கணக்கன் .
கீழ்க்கதுவாய்த்தொடை அளவடியுள் ஈற்றயற்சீர்க்கண் இன்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலியன வரத் தொடுப்பது .
கீழ்க்காது காதடி .
கீழ்க்குரல் அடிக்குரல் ; மந்தவொலி .
கீழ்காற்று கிழக்கிலிருந்து வீசும் காற்று .
கீழ்ச்சாதி தாழ்ந்த சாதி , கீழ்பிறப்பு .
கீழ்த்தரம் இழிந்த தரம் ; தாழ்ந்தபடி .
கீழ்த்திசை கிழக்கு .
கீழ்த்திசைப்பாலன் இந்திரன் .
கீழ்தல் கிழித்தல் ; பிளத்தல் , சிதைத்தல் ; தோண்டுதல் ; மீறுதல் ; கோடுகிழித்தல் ; பறியுண்ணுதல் .
கீழுதல் கிழித்தல் ; பிளத்தல் , சிதைத்தல் ; தோண்டுதல் ; மீறுதல் ; கோடுகிழித்தல் ; பறியுண்ணுதல் .
கீழ்நிலை தாழ்ந்த நிலைமை ; கீழ்மாடம் , நிலவறை .
கீழ்நோக்கம் கீழ்ப்பார்வை ; கீழானவற்றில் மனம் விரும்புகை .
கீழ்நோக்குதல் கீழே பார்த்தல் ; தரையின் கீழாதல் ; தாழ்ந்த நிலைக்குப் போதல் ; கீழானவற்றில் மனம் செல்லுதல் ; கழிச்சலாதல் .
கீழ்ப்பட்டவர் தாழ்ந்தவர் .
கீழ்ப்படிதல் அடங்கிநடத்தல் .
கீழ்ப்படிவு அமைவு , அடங்கிப்பணிகை .
கீழ்ப்படுத்தல் அடங்குதல் , தாழ்வுபடுத்தல் ; இழிவுறச் செய்தல் .
கீழ்ப்படுதல் அடங்குதல் ; இழிவுபடுதல் .
கீழ்ப்பயிர் பயிருக்குக்கீழ் உண்டாகும் பயிர் ; புன்செய்ப் பயிர் .
கீழ்ப்பாடு கீழ்ப்பக்கம் .
கீழ்ப்பாதி குடிவாரம் .
கீழ்ப்பாய்ச்சி மூலைக்கச்சம் .
கீழ்ப்பார்வை கீழ்நோக்குகை ; வஞ்சகப்பார்வை .
கீழ்ப்பால் கீழ்ச்சாதி .
கீழ்ப்பாவல் மரக்கலத்தின் ஓர் உறுப்பு .
கீழ்ப்புறம் கீழ்ப்பக்கம் ; கப்பலின் சாய்வுப் பக்கம் .
கீழ்பால் கிழக்கு .
கீழ்போகம் கிழங்குகளின் விளைவு .
கீழ்மக்கள் இழிந்தோர் .
கீழ்மகன் இழிந்தோன் ; சனி .
கீழ்மடை கடைமடை ; மடைநீர் பாய்தற்குத் தொலைவான நிலம் .
கீழ்மரம் அச்சுமரம் .
கீழ்மாடம் நிலவறை .
கீழ்முந்திரி கீழ்வாய் இலக்கங்களுள் ஒன்று , 1/102400 .
கீழ்மேலாதல் தலைகீழாதல் .
கீழ்மை இழிவு , தாழ்மை .
கீழ்வாய் மோவாய் ; சிற்றெண் ; பெண்குறி .
கீழ்வாய்நெல்லி கீழாநெல்லி .
கீழ்வாயிலக்கம் ஒன்றுக்குக் கீழ்ப்பட்ட எண் வாய்பாடு , பின்ன எண்ணின் கீழ்த்தொகை .
கீழ்விழுதல் செயல் முடிவதற்காகத் தாழ்தல் .
கீழ்வு கீழிடம் .
கீழ்வெட்டு தடுத்துப் பேசுகை ; கிண்டல் பேச்சு ; சதிசெய்து கெடுக்கை .
கீழ்வெட்டு வெட்டுதல் சதிசெய்தல் ; தடுத்துப் பேசுதல் ; வெட்டிய கிணற்றின் அடியில் மேலும் வெட்டுதல் .
கீழண்டை கிழக்குப் பக்கம் , கிழக்குப்புறம் .
கீழது கீழுள்ளது .
கீழறுத்தல் நிலத்தில் சுரங்கம் செய்தல் ; சதி செய்தல் .
கீழறுதல் படைகளின் மனப்போக்குப் பகைவரால் வேறுபடுத்தப்படுதல் .
கீழறுப்பான் சூழ்ச்சியாற் பிறரைக் கெடுப்பவன் .
கீழறை கீழறுக்கை ; நிலவறை ; பொந்து .
கீழாதல் தாழ்வடைதல் ; தளர்தல் .
கீல்கீலாய் சந்து சந்தாய் .
கீல்பூசுதல் தாரடித்தல் .
கீல்முளை கதவிற் கீல்தாங்கும் முளை .
கீல்தல் கிழித்தல் .
கீல்லுதல் கிழித்தல் .
கீல்வாதம் கீல்மூட்டுகளில் உண்டாகும் வாதநோய் .
கீல்வாயு கீல்மூட்டுகளில் உண்டாகும் வாதநோய் .
கீல்வீக்கம் கீல்மூட்டு வீங்குதல் .
கீலக அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்திரண்டாம் ஆண்டு .
கீலகம் ஆணி ; பொருத்து ; விரகு .
கீலகவெட்டை மிகுவெப்பம் ; கீலக ஆண்டுப் பஞ்சம் .
கீலச்சு உருவம் உண்டாக்கும் கட்டளையச்சு .
கீலம் ஆணி ; சுடர்க்கொழுந்து ; பிசின் ; கிழிதுண்டம் ; வெட்டு ; பூசுந்தார் .
கீலாணி கதவு முதலியவற்றின் கீலைப் பற்றியிருக்கும் ஆணி .
கீலாரி காண்க : கீதாரி .
கீலாலம் இரத்தம் ; நீர் ; காடி .
கீலி விரகன் ; தந்திரமுள்ளவன் .
கீழ் கீழிடம் ; கிழக்கு ; பள்ளம் ; முற்காலம் ; குற்றம் ; கயமை ; இழிந்தவன் ; கீழே ; ஏழனுருபு ; மறதி ; கடிவாளம் .