சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| குணுக்கு | மாதர் காதணியுள் ஒன்று ; காது பெருக்க இடும் ஒலைச்சுருள் ; மீன்வலையின் ஈயக்குண்டு ; வெள்ளி ; பணியாரவகை . |
| குணுக்குத்தடி | இரும்புப் பூணிட்ட கனத்த கழி . |
| குணுக்குதல் | வளைத்தல் ; துணுக்குதல் . |
| குணுகுணுத்தல் | மூக்காற் பேசுதல் ; முணுமுணுத்தல் . |
| குணுகுணெனல் | முணுமுணுத்தற் குறிப்பு . |
| குணுகுதல் | கொஞ்சுதல் . |
| குணுங்கர் | இழிந்தோர் ; புலையர் ; தோற்கருவியாளர் ; குயிலுவர் . |
| குணுங்கு | பிசாசு ; கொச்சை நாற்றம் . |
| குணைவண்டு | வண்டுவகை . |
| குத்தகை | குறிப்பிட்ட காலத்துக்கு அனுபவ உரிமையளிக்கும் ஒப்பந்தக் கட்டுபாட்டு முறை ; குத்தகைத் தொகை . |
| குத்தகைக்காரன் | குத்தகை எடுப்பவன் . |
| குத்தகைச்சரக்கு | ஒப்பந்தஞ் செய்த சரக்கு . |
| குத்தகைச்சீட்டு | குத்தகைப் பத்திரம் . |
| குத்தகைப்பொருள் | குத்தகைக்கு ஒப்பந்தப்படி கட்டவேண்டிய பொருள் . |
| குத்தகைமாறுதல் | குத்தகைக் காலம் முடிவு பெறுகை . |
| குத்தகையெடுத்தல் | குத்தகைக்கு வாங்குதல் . |
| குத்தம் | எருது . |
| குத்தரசம் | பெருங்காயம் . |
| குத்தல் | உடம்பின் உள்நோவு ; மனம் நோவச் செய்கை ; தெருவிற்கு எதிராக வீடு அமைந்திருப்பது முதலிய குற்றம் ; நீர்க்குத்தலான இடம் ; குற்றலரிசி . |
| குத்தலரிசி | குற்றித் தீட்டிய அரிசி . |
| குத்தன் | காப்பவன் ; வணிகர் பட்டம் ; குப்த மரபில் வந்த அரசன் . |
| குத்தாங்கல் | செங்குத்தாக வைக்குங் கல் அல்லது செங்கல் ; குத்துக்கல் . |
| குத்தாணி | மரக் கைப்பிடியமைந்த நீண்ட ஊசி வகை . |
| குத்தாமற்குத்துதல் | குறிப்பாகக் குற்றத்தைச் சொல்லிக் காட்டுதல் . |
| குத்தார்க்கு | குத்தூசியால் வாங்கித் தைக்கும் பனைநார் . |
| குத்தாலம் | திருவாத்தி , காட்டாத்தி . |
| குத்தாலா | கடுகுரோகிணி . |
| குத்தாளை | மானவாரியாக விளையும் நெல்வகை . |
| குத்தி | கோணிமூட்டையினின்றும் அரிசி முதலியவற்றை எடுக்கும் கருவி , குத்தூசி ; கலப்பைக் கூர் ; திரிகரண அடக்கம் ; மண் ; மாறுபாடு . |
| குத்திக்காட்டுதல் | ஒருவன் குற்றத்தைச் சுட்டிக் காட்டி அவன் மனத்தைப் புண்படச் செய்தல் . |
| குத்திக்கொல்லன் | ஆயுதபாணியாய்ப் பொருள் கொண்டு செல்பவன் . |
| குத்திச்செருப்பு | குதியிற் கனமுள்ள செருப்பு . |
| குத்திப்பிடுங்குதல் | வாந்திசெய்ய வருதல் . |
| குத்திப்பேசுதல் | நோவும்படி ஒருவரைச் சுட்டிப் பேசுதல் . |
| குத்தியளத்தல் | அளக்குங் கருவியைத் தானியத்திற் பாய்ச்சியளத்தல் . |
| குத்தியோட்டம் | இரண்டு விலாப்பக்கங்களிலும் கூரான கம்புகளைக் குத்திக்கொண்டு கோயிலை வலம்வரும் ஒரு வேண்டுதல் . |
| குத்திரக்காரன் | வஞ்சகன் . |
| குத்திரப்பேச்சு | இகழ்ந்துரைக்குஞ் சுடுசொல் . |
| குத்திரம் | வஞ்சகம் ; இழிவு ; ஏளனச் சொல் ; குரூரம் ; மலை ; சணல் ; பொய் . |
| குத்திரவித்தை | தந்திரம் ; சூனிய வித்தை . |
| குத்திரன் | வஞ்சகன் . |
| குத்திருமல் | கக்குவான் இருமல் . |
| குத்தினி | ஒருவகைப் பட்டுச்சீலை . |
| குத்தீட்டி | ஈட்டிவகை . |
| குத்து | கைமுட்டியால் தாக்குவது ; ஈட்டி முதலியவற்றால் தாக்குகை ; உரலிற் குற்றுதல் ; புள்ளி ; செங்குத்து ; நோவு ; பிடி ; தெரு முதலியவற்றின் பாய்ச்சல் . |
| குணவாக்கு | சிறப்பாக அமைந்த குணம் ; சொந்தப் பழக்கம் . |
| குணவாகுபெயர் | பண்புப் பெயரைப் பண்பிக்கு உரைத்தல் . |
| குணவான் | காண்க : குணமுள்ளவன் . |
| குணவியது | மேன்மையானது . |
| குணவிரதம் | மகாவிரதத்துக்கு அடுத்தபடியாகக் கொள்ளும் ஒரு சைன நோன்பு . |
| குணன் | குணமுள்ளவன் , நற்குணம் உடையவன் . |
| குணனம் | எண்வகைக் கணிதத்துள் ஒன்றாகிய பெருக்கல் . |
| குணனீயம் | பெருக்கப்படும் எண் . |
| குணாக்கர நியாயம் | மரம் , புத்தகம் முதலியவற்றில் புழுவின் அரிப்பு எழுத்தாதல் போலத் தற்செயலாக நேர்வதைக் குறிக்கும் நெறி . |
| குணாகுணம் | நன்மையுந் தீமையும் ; குணமும் குணமின்மையும் . |
| குணாட்டம் | ஓருவகை வரிக்கூத்து . |
| குணாதிசயம் | குணவிசேடம் . |
| குணாதீதம் | குணங்கடந்தது . |
| குணாது | கிழக்கிலுள்ளது . |
| குணாம்பி | கோமாளி . |
| குணாம்பு | பகடி . |
| குணாம்புதல் | பகடி பேசுதல் . |
| குணாலங்கிருதன் | நற்குணத்தையே அணியாக உடையவன் . |
| குணாலம் | ஒருவகை ம்கிழ்ச்சிக்கூத்து ; வீராவேசத்தாற் கொக்கரித்தல் ; ஒரு பறவை . |
| குணாலயன் | நற்குணமுள்ளவன் , குணங்களுக்கு இருப்பிடமானவன் . |
| குணாலை | ஆரவாரத்துடன் நடிக்குங் கூத்து . |
| குணாளன் | நற்குணமிக்கவன் . |
| குணி | பண்பி ; முடமானது ; நற்குணம் உடையவன் ; சொத்தைக் கையன் . |
| குணித்தல் | கணித்தல் ; ஆலோசித்தல் ; வரையறுத்தல் ; பெருக்குதல் . |
| குணிதம் | பெருக்கிவந்த தொகை , மடங்கு . |
| குணிப்பு | அளவு ; ஆராய்ச்சி ; மதிப்பு . |
| குணில் | குறுந்தடி ; பறையடிக்குந் தடி ; கவண் . |
| குணு | புழு . |
| குணுக்கம் | வருத்தம் , துன்பம் . |
| குணுககன் | மூக்காற் பேசுவோன் . |
|
|
|