குப்பம் முதல் - கும்பிபீடு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
குபேரன் வடதிசைக்கு உரிய பெருஞ்செல்வன் ; செல்வன் ; சந்திரன் .
குபையம் சிறுபுள்ளடிப் பூடு .
கும்பகம் இழுத்த மூச்சுக்காற்றை உள்ளே நிறுத்தும் பிராணாயாமவகை .
கும்பகாம்போதி ஒரு பண்வகை .
கும்பகாரன் குயவன் .
கும்பகாரிகை குயத்தி ; கண்ணிடுமை .
கும்பங்கொட்டுதல் துர்க்கைக்கு வேண்டுதலைச் செலுத்துதல் ; பெருந்தீனி கொடுத்தல் .
கும்பசம்பவன் குடத்திலிருந்து பிறந்தவன் ; அகத்தியன் ; துரோணன் .
கும்பசன் குடத்திலிருந்து பிறந்தவன் ; அகத்தியன் ; துரோணன் .
கும்பஞ்சான் சிவதைக்கொடி .
கும்பஞ்செய்தல் கல்லறையின்மேல் மண்ணைக் குவித்தல் ; பிணத்தைப் புதைத்தல் .
கும்பதீபம் குடவடிவான ஆராதனை விளக்கு .
கும்பம் குடம் ; கும்பகலசம் ; யானை மத்தகம் ; கலசம் ; கும்பராசி ; மாசிமாதம் ; நெற்றி ; இரு தோள்கட்கும் இடையிலுள்ள முதுகின் மேற்பக்கம் ; நூறுகோடி ; குவியல் ; சிவதை .
கும்பம்போடுதல் தேவதைகளுக்குப் பெருஞ்சோறளித்தல் .
கும்பமுனி காண்க : குடதேவர் .
கும்பயோனி காண்க : கும்பசம்பவன் .
கும்பல் குவியல் ; திரள் ; கூட்டம் ; கும்பல் நாற்றம் .
கும்பளம் கலியாணப்பூசணி .
கும்பளமோசு ஓருவகைக் கருவாடு .
கும்பன் அகத்தியன் ; சிவகணத் தலைவருள் ஒருவன் ; ஒர் அரக்கன் ; கயவன் .
கும்பனாற்றம் காண்க : கும்பிநாற்றம் .
கும்பா ஓருவகைப் பாண்டம் .
கும்பாகம் பவளக்கொடி .
கும்பாபிடேகம் கோயில்களில் சுவாமி பிரதிட்டை செய்வதற்கும் சுத்தி செய்வதற்கும் உரிய சடங்கு , குடமுழுக்கு .
கும்பாரம் அம்பாரம் ; கும்பம் .
கும்பாலத்தி சுவாமிக்குமுன் எடுக்கும் கும்பதீபம் .
கும்பி குவியல் ; சேறு ; சுடுசாம்பல் ; வயிறு ; யானை ; கும்பிபாகம் ; நரகம் ; கும்பராசி ; நெருப்பு ; மட்பாண்டம் .
கும்பிடரி பயிரிடுவோர் நிலக்கிழார்க்கேனும் ஆலயத்திற்கேனும் அளிக்கும் கதிர்க்கட்டு .
கும்பிடல் காண்க : கும்பிடுதல் .
கும்பிடு வணங்குகை , வணக்கம் .
கும்பிபீடு வணங்குகை , வணக்கம் .
குப்பம் ஊர் ; காடு ; செம்படவர் வாழும் சிற்றூர் ; கூட்டம் ; குவியல் .
குப்பல் குவியல் ; மேடு ; கூட்டம் .
குப்பன் முன்னிரண்டு குழந்தைகளும் தவறிய பின் பிறக்கும் மூன்றாம் மகனுக்கு இடும் பெயர் .
குப்பாசம் மெய்ச்சட்டை ; பாம்புச்சட்டை .
குப்பாமணி குப்பைமேனி .
குப்பாயம் சட்டை .
குப்பான் மூடன் .
குப்பி ஒருவிதக் குடுவை ; சடைக்குச்சு ; குப்பிக்கடுக்கண் ; சிமிழ் ; கண்ணாடிக் குடுவை ; வயிரவகை ; வீணையின் முறுக்காணி ; மாட்டுக் கொம்பு முதலியவற்றிற் செருகும் பூண் ; சங்கங்குப்பி ; சாணி ; முன்னிரண்டு குழந்தைகளும் தவறியபின் பிறக்கும் மூன்றாம் மகளுக்கு இடும்பெயர் .
குப்பிச்சாரம் காசிச்சாரம் .
குப்பிமா மாக்கல் .
குப்பிலவணம் வளையலுப்பு .
குப்பிவைப்பு ஒர் இரசாயன முறை ; இரசாயனச் சரக்கு .
குப்புகுப்பெனல் தீ முதலியன மூண்டெழும் போது உண்டாகும் ஒர் ஒலிக்குறிப்பு .
குப்புறக் கிடத்தல் தலைகீழாகக் கிடத்தல் , கவிழ்ந்து கிடத்தல் .
குப்புறத் தள்ளுதல் தலைகீழாக விழும்படி தள்ளுதல் .
குப்புறவிழுதல் முகந் தரைநோக்க விழுதல் .
குப்புறுதுல் கடத்தல் ; பாய்ந்து கடத்தல் ; தலை கவிழ விழுதல் ; தலைகுனிதல் ; குழந்தையின் முகந் தரைநோக்கக் கவிழ்தல் .
குப்பெனல் திடீரெனல் , விரைவுக் குறிப்பு .
குப்பை குவியல் ; கூட்டம் ; தவசக் குவியல் ; செத்தை ; மேடு ; மலம் ; சதகுப்பை .
குப்பைக்காரன் குப்பை வாருவோன் .
குப்பைக் காலன் அதிர்ஷ்டக் காலுடையவன் .
குப்பைக் கீரை சிறுதண்டுக் கீரை ; அறைக்கீரை .
குப்பை கிளர்தல் குப்பையைக் கிண்டுதல் ; குற்றம் வெளியாகத் துருவி விசாரித்தல் .
குப்பை கிளர்றுதல் குப்பையைக் கிண்டுதல் ; குற்றம் வெளியாகத் துருவி விசாரித்தல் .
குப்பை கிளைத்தல் குப்பையைக் கிண்டுதல் ; குற்றம் வெளியாகத் துருவி விசாரித்தல் .
குப்பைகூளம் செத்தை முதலியவற்றின் தொகுதி .
குப்பைப்பருத்தி பருத்திவகை , உப்பம்பருத்தி .
குப்பைமேடு கூளக் குவியல் .
குப்பைமேனி ஓருவகைப் பூடு .
குப்பையன் அழுக்கடைந்தவன் .
குப்பைவாரி குப்பை வாருவோன் ; செத்தை கூட்டுங் கருவி .
குப்பைவைத்தல் உரம் போடுதல் .
குபசுபா எட்டிமரம் .
குபதம் தீயநடை ; பாழ்வழி .
குபதன் தீய வழியிற் செல்வோன் .
குபலம் வலியின்மை ; இழப்பு .
குபார் கூச்சலிடுகை ; கக்கல்கழிச்சல் ; நோய் , வாந்திபேதி .
குபிதன் கோபங்கொண்டவன் .
குபிலன் மன்னன் , காவலன் .
குபினன் வலைஞன் .
குபீரெனல் விரைவுக் குறிப்பு .
குபீரெலெனல் விரைவுக் குறிப்பு .
குபேரகம் சின்னிப் பூடு .
குபேர சம்பத்து குபேரனுக்கு உரியது போன்ற பெருஞ்செல்வம் .