சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| குயம் | அரிவாள் ; நாவிதன் கத்தி ; குயச்சாதி ; இளமை ; முலை ; தருப்பைப் புல் . |
| குயமயக்கு | தாறுமாறு . |
| குயலன் | சேர்ந்தவன் . |
| குயவரி | புலி . |
| குயவன் | மட்பாண்டம் வனைவோன் ; மறை பொருளாளன் . |
| குயவன்மணை | குயவனது சக்கரத்தின் அடிக் கட்டை . |
| குயவு | தேர் . |
| குயா | கோங்குமரம் . |
| குயில் | சொல் ; ஒரு பறவை ; கோகிலம் ; மேகம் ; துளை . |
| குயில் கூவுதல் | கண்ணுக்கினிதாய்த் தோற்றுதல் |
| குயில்தல் | சொல்லுதல் ; கூவுதல் ; செய்தல் ; மணி பதித்தல் ; கட்டுதல் ; பின்னுதல் ; நெய்தல் ; துளைத்தல் ; செறிதல் ; வாத்தியம் ஒலித்தல் ; நடைபெறுதல் . |
| குயிலுதல் | சொல்லுதல் ; கூவுதல் ; செய்தல் ; மணி பதித்தல் ; கட்டுதல் ; பின்னுதல் ; நெய்தல் ; துளைத்தல் ; செறிதல் ; வாத்தியம் ஒலித்தல் ; நடைபெறுதல் . |
| குயிலாயம் | மட்கலம் வளையுங்கூடம் ; சுவருள் அறை ; பறவைக் கூடு . |
| குயிலுவக் கருவி | இசைக்கருவிகள் . |
| குயிலுவம் | வாத்தியம் வாசித்தல் . |
| குயிலுவர் | இசைக்கருவி வாசிப்போர் . |
| குயிற்றுதல் | சொல்லுதல் ; செய்தல் ; மணிபதித்தல் . |
| குயிறல் | சொல்லுதல் ; கூவுதல் ; செய்தல் ; மணி பதித்தல் ; கட்டுதல் ; பின்னுதல் ; நெய்தல் ; துளைத்தல் ; செறிதல் ; வாத்தியம் ஒலித்தல் ; நடைபெறுதல் . |
| குயின் | மேகம ; செயல் . |
| குயின்மூக்கெலும்பு | முதுகின் அடியெலும்பு . |
| குயின்மொழி | இன்மொழி ; அதிமதுரம் . |
| குயினர் | மணியில் துளையிடுவோர் ; தையற்காரர் . |
| குயுக்தி | நேர்மையற்ற உத்தி ; ஏளனம் . |
| குயுத்தி | நேர்மையற்ற உத்தி ; ஏளனம் . |
| குயக்குண்டு | குயவர் மண்ணெடுக்குங் குழி . |
| குயத்தி | குயவர்குடிப் பெண் . |
| குயத்தினலகை | நிலவாகைப் பூடு . |
| குமிலம் | பேரொலி . |
| குமிலவோதை | பேராரவாரம் . |
| குமிலி | துளசி . |
| குமிழ் | நீர்க்குமிழ் ; உருண்டு திரண்ட வடிவம் ; எருதின் திமில் ; உள்ளங்காற் கட்டி ; நாணற்புல் ; குமிழமரம் . |
| குமிழ்க்கட்டை | பாதக்குறடு . |
| குமிழ்குமிழ்த்தல் | பிறர்க்குத் தோன்றாமல் மறைத்தல் . |
| குமிழ்த்தல் | குமிழிடுதல் ; மயிர் சிலிர்த்தல் ; ஒலிக்கச் செய்தல் ; கொழித்தல் . |
| குமிழ்ப்பு | குமிழ் எழுகை ; மயிர்ச்சிலிர்ப்பு ; கொழிக்கை . |
| குமிழாணி | தலையில் குமிழ்கொண்ட ஆணி ; குமிழ்ப்பிடி . |
| குமிழி | நீர்க்குமிழி ; பாதக்குறட்டின் குமிழ் ; ஊற்றுவாய் ; சீழ்க்குமிழி . |
| குமிழித்தல் | குமிழி கொள்ளுதல் . |
| குமிழிநீருண்ணுதல் | ஒரு செயலில் கருத்தூன்றியிருத்தல் . |
| குமிறுதல் | ஒலித்தல் . |
| குமுக்கு | மொத்தம் ; பெருந்தொகை ; கூட்டம் ; உதவி ; இரகசியம் . |
| குமுக்குதல் | ஊமைக் காயம்படக் கையாற் குத்தல் ; ஆடை கும்முதல் . |
| குமுகம் | பன்றி . |
| குமுகாயம் | சமுதாயம் . |
| கமுகுமுத்தல் | அதிக மணம் வீசுதல் . |
| குமுகுமெனல் | பேரொலிக் குறிப்பு ; மிகுமணக் குறிப்பு . |
| குமுங்குதல் | மசிதல் ; உள்ளிறங்குதல் . |
| குமுதகம் | கட்டடத்தின் எழுதகவகை ; ஒரு சித்திரக் கம்பி . |
| குமுதச்சிலந்தி | கொப்புளமாகாமல் சீழ்வடியும் புண்வகை . |
| குமுதசகாயன் | சந்திரன் . |
| குமுதநாதன் | சந்திரன் . |
| குமுதப்படை | கருவறையின் வெளிப்புற மதிலில் வேலைப்பாடமைந்த அடிப்பகுதி ; குமுதம் . |
| குமுதம் | வெள்ளாம்பல் ; செவ்வாம்பல் ; தென்மேற்குத் திசையானை ; படையின் ஒருதொகை ; மிகுதி ; கட்டடத்தின் எழுதக வகை ; கருவிழியால் உண்டாகும் ஒருவகை நோய் ; அடுப்பு ; பேரொலி ; தருப்பை ; கருப்பூரம் . |
| குமுதிகை | பூசணிக்கொடி ; பறங்கிக்கொடி . |
| குமுதிப்பனை | கிச்சிலிப்பனை . |
| குமுலி | துளசிச்செடி . |
| குமுறக்காய்தல் | நன்றாகக் காய்தல் . |
| குமுறப்பிழிதல் | இறுகப் பிழிதல் . |
| குமுறல் | பேரொலி . |
| குமுறலண்டம் | அண்டவாதவகை . |
| குமுறுதல் | அதிரொலி செய்தல் ; கலப்போசை எழுதல் ; மனத்தினுள்ளேயே வருந்துதல் ; பீரிடுதல் ; கொதித்தல் . |
| குமேரு | பேய்பிசாசுகளுக்கு இருப்பிடமான தென்முனை . |
| குமை | அழிவு ; துன்பம் ; அழுக்குத்துணி முதலியன இடும் பெட்டி ; அடி ; ஓர் எடை . |
| குமைத்தல் | துவைத்தல் ; உரலில் வைத்து இடித்தல் ; குழைய வேகச்செய்தல் ; வருத்துதல் ; அழித்தல் . |
| குமைதல் | குழைய வேகுதல் ; குழம்புதல் ; வெப்பத்தால் புழுங்குதல் ; கண் முதலியன இறுகிக்கொள்ளுதல் ; சோர்தல் ; அழிதல் ; வருந்துதல் . |
| குமைதின்னுதல் | அடியுண்ணுதல் . |
| குய் | தாளிப்பு ; தாளித்த கறி ; நறும்புகை ; சாம்பிராணி . |
| குய்மனத்தாளர் | வஞ்சகர் . |
| குய்யதீபகம் | மின்மினி . |
| குய்யபீசகம் | எட்டி . |
| குய்யம் | மறைவானது ; ஆண்குறி ; பெண்குறி ; எருவாயில் ; வஞ்சகம் . |
| குய்யரோகம் | பெண்குறியில் வரும் ரோகம் . |
| குய்யோமுறையோவெனல் | கூச்சலோடு முறையிடுதற் குறிப்பு . |
| குயக்கலம் | மட்பாண்டம் ; ஒரு நூல் . |
| குயக்காலம் | நிலக்கடம்புப் பூடு . |
|
|
|