குளிர்ந்தபேச்சு முதல் - குறவன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
குறம் குறச்சாதி ; குறத்தி சொல்லுங் குறி ; குறவர் கூற்றாக வரும் கலம்பகவுறுப்புள் ஒன்று ; குறத்திப்பாட்டு .
குறவஞ்சி குறிசொல்லுங் குறத்திமகள் ; குறத்திப்பாட்டு .
குறவணவன் ஒரு புழு , எருக்குவியலில் தோன்றும் வெண்புழு .
குறவழக்கு தீராவழக்கு ; பிடிவாதமாய் மேற்கொள்ளும் தீய வழக்கு .
குறவன் குறிஞ்சிநில மகன் ; பாலை நிலத்தவன் ; ஒருசாதியான் ; பாசாங்கு பண்ணுகிறவன் ; பாதரசம் .
குற்றங்காணுதல் தவறு கண்டுபிடித்தல் .
குற்றச்சாட்டு குற்றப்பத்திரிகை .
குற்றஞ்சாட்டுதல் ஒருவன்மீது குற்றத்தை ஏற்றுதல் .
குற்றஞ்சுமத்தல் ஒருவன்மீது குற்றத்தை ஏற்றுதல் .
குற்றப்படுதல் குற்றத்திற்குள்ளாதல் .
குற்றப்பத்திரம் நீதிமன்றத்தில் ஒருவன்மீது குற்றத்தின் விவரங்காட்டிப் படிக்கப்படும் பத்திரம் .
குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் ஒருவன்மீது குற்றத்தின் விவரங்காட்டிப் படிக்கப்படும் பத்திரம் .
குற்றப்பாடு குற்றம் ; குற்றத்திற்கு உட்படுகை .
குற்றம் பிழை ; பழி ; துன்பம் ; உடற்குறை ; தீங்கு ; அபராதம் ; தீட்டு .
குற்றம்பாராட்டுதல் பிறர் குற்றத்தை மிகுதிப்படுத்துதல் .
குற்றவாளி குற்றம் செய்தவன் ; குற்றஞ் சாட்டப்பட்டவன் .
குற்றவீடு காமம் , வெகுளி முதலிய குற்றங்கள் நீங்குகை .
குற்றி மரக்கட்டை ; வாய் குறுகிய சிறுபாண்டம் .
குற்றிகரம் காண்க : குற்றியலிகரம் .
குற்றிசை குறுகிய சந்தம் ; தலைவன் தலைவியைப் புறக்கணித்து அறநெறி பிறழ்ந்தொழுகுவதைக் கூறும் புறத்துறை .
குற்றியலிகரம் சார்பெழுத்துள் ஒன்றாய் அரைமாத்திரையாகக் குறுகிய இகரம் .
குற்றியலுகரம் மாத்திரை குறுகிய உகரம் , சார்பெழுத்துள் ஒன்றாய்ப் பெரும்பாலும் மொழிகளின் ஈற்றில் வல்லின மெய்களைச் சார்ந்து அரைமாத்திரையாய்க் குறுகிவரும் உகரம் .
குற்றுடைவாள் சுரிகை .
குற்றுதல் இடித்தல் ; தாக்குதல் ; நெரித்தல் ; ஊடுருவக் குத்துதல் .
குற்றுயிர் இறக்கும் நிலையிலுள்ள உயிர் , குறையுயிர் ; குற்றெழுத்து .
குற்றுழிஞை பகைவரது கோட்டை மதில்மேல் நின்று வீரனொருவன் தன் பெருமை காட்டுவது கூறும் புறத்துறை .
குற்றெழுத்து ஒரு மாத்திரையளவு ஒலிக்கப்படும் எழுத்து ; அவை : அ , இ , உ , எ , ஒ என்பன .
குற்றேவல் சிறுதொழில் ; பணிவிடை .
குறக்கூத்து குறவராடுங் கூத்து .
குறங்கறுத்தல் கால்வாயினின்று வேறு தனிக்கால் பிரித்தல் ; தொடையைப் பிளத்தல் .
குறங்கு தொடை ; கிளைவாய்க்கால் ; கொக்கி .
குறங்குசெறி தொடையணி .
குறஞ்சனம் வெண்காரம் .
குறஞ்சி செம்முள்ளிச்செடி ; ஈந்து ; மருதோன்றி .
குறட்டரியம் குறைகூறுதல் ; குறையை மெல்ல வெளியிடுகை .
குறட்டாழிசை குறள்வெண்பாவிற்குரிய பாவினம் .
குறட்டுச்சுவர் மண்தாங்கிச் சுவர் .
குறட்டுவாதம் ஒருவகை வலிப்புநோய் .
குறட்டை உறக்கத்தில் மூச்சுவிடும் ஒலி ; சவரிக்கொடி ; எலிவகை .
குறட்பா குறள்வெண்பா .
குறடா குதிரைச்சவுக்கு .
குறடு கம்மியர் குறடு ; சுவடி தூக்குங் கயிற்றுக் குறடு ; பாதக்குறடு ; மரத்துண்டு ; பலகை ; இறைச்சி கொத்தும் பட்டை மரம் ; தேர் முதலியவற்றின் அச்சுக்கோக்குமிடம் ; சந்தனக்கல் ; ஒட்டுத்திண்ணை ; திண்ணை ; பறைவகை ; நண்டு .
குறண்டி செவ்வழிப் பண்வகை ; முட்செடி ; தூண்டில் முள் .
குறண்டுதல் வளைதல் ; வலிப்புக் கொள்ளுதல் ; சுருளுதல் .
குறத்தனம் பாசாங்கு , கள்ளத்தனம் .
குறத்தி குறிஞ்சிநிலப் பெண் ; குறச்சாதிப் பெண் ; குறிகூறுபவள் ; நிலப்பனை .
குறத்திப்பாட்டு தலைவியின் காதல் முதலியவைபற்றிக் குறத்தி குறிசொல்வதாகப் பாடும் நூல் .
குளிர்ந்தபேச்சு இனிய மொழி .
குளிர்ந்தவேளை சாயங்காலம் .
குளிர்ந்துகிடத்தல் சூடாறியிருத்தல் ; கைகால் சில்லிடுதல் ; இறந்துகிடத்தல் .
குளிர்மை குளிரச்சி , சீதளம் ; அன்பு .
குளிர்விடுதல் அச்சம் நீங்குதல் .
குளிரநோக்குதல் அருளோடு பார்த்தல் .
குளிரம் நண்டு .
குளிரி பீலிக்குஞ்சம் ; நீர்ச்சேம்பு ; குளிர்ச்சி .
குளிறு ஒலி .
குளிறுதல் ஒலித்தல் , சத்தமிடுதல் .
குளுகுளுத்தல் செழித்து வளருதல் ; சோகை பற்றுதல் ; அழுகிப்போதல் .
குளுகுளுப்பை காமாலை நோய் .
குளுத்தி குளிர்மை .
குளுந்தை கத்தூரிவகை .
குளுப்பை நோயால் முகம் ஊதுகை .
குளுப்பைதட்டுதல் நோயால் முகம் ஊதித்தோன்றுதல் .
குளுமை குளிர்ச்சி .
குளுவன் குறவனுடைய பாங்கன் ; பாம்பாட்டி .
குளுவை ஊரற்பறவை .
குளைச்சக்கரம் ஓடு .
குளைச்சு நாலில் ஒன்று ; கால் .
குற்குலு குங்கிலியம் .
குற்சித்தல் அருவருத்தல் .
குற்சிதம் அருவருப்பு .
குற்சை இளிவரல் ; அருவருப்பு ; இகழ்ச்சி .
குற்பகம் நாணற்புல் .
குற்பம் பரடு ; கணைக்கால் .
குற்றங்காட்டுதல் குற்றத்தை எடுத்துச்சொல்லுதல் .