சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| குறைவேண்டுநர் | அனுகூல காரியங்களை விரும்புவோர் . |
| குறோக்கை | குறட்டை . |
| குறோட்டை | காக்கணங்கொடி ; பீச்சுவிளாத்தி . |
| குன்மப்புரட்டு | குன்மத்தால் வாந்தியுண்டாக்கும் வயிற்றுநோய்வகை . |
| குன்மம் | செரிப்பின்மை ; வலி முதலியன காணும் வயிற்றுநோய் : ஒரு படைத்தொகை ; அடர்ந்த தூறு . |
| குன்றக்கூறல் | பத்துவகை நூற்குற்றங்களுள் கூறவேண்டியதைக் குறைவுபடச் சொல்லுகையாகிய குற்றம் . |
| குன்றம் | சிறுமலை . |
| குன்றர் | காண்க : குன்றவர் . |
| குன்றல் | குறைதல் ; கெடுதல் விகாரம் . |
| குன்றவர் | குறிஞ்சிநில மக்கள் . |
| குன்றவாணர் | காண்க : குன்றவர் . |
| குன்றவில்லி | சிவன் . |
| குன்றாவாடை | வடகீழ்காற்று . |
| குன்றி | குன்றிக்கொடி ; குன்றிமணி ; மனோசிலை . |
| குன்றிநிறக்கண்ணன் | குன்றிமணிபோற் சிவந்த கண்ணுடையவன் ; காட்டுப்பன்றி . |
| குன்றிமணி | குன்றிக் கொட்டை , குன்றிக்கொடியின் சிவப்பு விதை ; 4 நெல் அல்லது 1/2 மஞ்சாடி எடையுள்ள பொன் நிறுக்கும் நிறைவகை : அதிமதுரம் . |
| குன்றியறுகரம் | காண்க : குற்றியலுகரம் . |
| குன்றிவேர் | அதிமதுரம் . |
| குன்று | சிறுமலை ; மலை ; குறைவு ; சிறுகுவடு ; சதயநாள் . |
| குன்றுகூப்பிடுதல் | மலையில் எதிரொலியெழக் கூப்பிடுதல் . |
| குன்றுதல் | குறைதல் ; அழிவுறுதல் ; நிலைதாழ்தல் ; எழுத்துக்கெடுதல் ; வாடுதல்: வளர்ச்சியறுதல் . |
| குன்றுபயன் | களவொழுக்கம் . |
| குன்றுவர் | குறிஞ்சிநில மக்கள் ; வேட்டுவர் . |
| குன்றுவாடை | வடமேல்காற்று . |
| குன்றெடுத்தோன் | கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்துத் தாங்கிய கண்ணன் . |
| குன்றெறிந்தோன் | கிரவுஞ்சமலையை வேலால் எறிந்தவனான முருகக்கடவுள் . |
| குன்றேந்தி | காண்க : குன்றெடுத்தோன் . |
| குன்னம் | அவமானம் ; பழி . |
| குன்னாத்தல் | குளிரால் உடம்பு கூனிப்போதல் . |
| குனகுதல் | கொஞ்சிப்பேசுதல் . |
| குனட்டம் | அதிவிடயப்பூண்டு . |
| குனாசகம் | சிறுகாஞ்சொறிச்செடி . |
| குனாசம் | குன்றிக்கொடி . |
| குனாபீ | சுழிக்காற்று . |
| குனி | வளைகை ; வில் . |
| குனித்தல் | வளைத்தல் ; ஆடுதல் ; குரல் நடுங்குதல் . |
| குனிதல் | வளைதல் ; வணங்குதல் ; தாழ்தல் ; வீழ்தல் ; இறங்குதல் . |
| குனிப்பு | வளைகை ; ஆடல் ; கூத்துவகை ; குழிப்பு . |
| குனிவு | தாழ்வு ; வளைவு . |
| குனுகுதல் | கொஞ்சிப் பேசுதல் . |
| குனை | கூர்மையான பக்கம் ; நுனி . |
|
|