கூட்டை முதல் - கூத்தாடுதல் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கூத்தரிசிக்காரி அரிசி குற்றி விற்பவள் .
கூத்தன் உயிர் ; நாடகன் ; சிவன் ; ஒட்டக்கூத்தன் ; துரிசு .
கூத்தன்குதம்பை மூக்கொற்றிப்பூண்டு .
கூத்தாட்டு நடிப்பு , நடனம் .
கூத்தாடி நடன் ; கழைக்கூத்தன் ; கூத்தாடுவோன் .
கூத்தாடிச்சி கூத்து நடிப்பவள் ; அடங்காது சத்தமிட்டுத் திரிபவள் .
கூத்தாடுதல் நடித்தல் ; நடனம் ; மகிழ்ச்சி மிகுதல் ; செழித்திருத்தல் ; பிடிவாதமாய் வேண்டுதல் .
கூத்தரிசி குற்றிவிற்கும் அரிசி .
கூடம்பில் சுரைக்கொடி .
கூடயந்திரம் பொறி ; வலை .
கூடரணம் திரிபுரம் .
கூடல் மதுரை ; பொருந்துகை ; புணர்தல் ; ஆறுகள் கூடுமிடம் ; தேடல் ; தலைவனைப் பிரிந்த தலைவி அவன் வரும் நிமித்தமறியத் தரையில் சுழிக்கும் சுழிக்குறி: அடர்த்தியான தோப்பு .
கூடல் வளைத்தல் மகளிர் விளையாட்டில் ஒன்று .
கூடலர் கூடார் , பகைவர் .
கூடலித்தல் கிளர்ந்து வளைதல் .
கூடலிழைத்தல் தலைவனைப் பிரிந்த தலைவி அவன் வரும் நிமித்தம் அறியத் தரையில் சுழி வரைதல் .
கூடவற்சை தவளை .
கூடற்கோமான் பாண்டியன் .
கூடற்றெய்வம் கூடற்சுழிக்குரிய தேவதை .
கூடன் காண்க : கூடசன் .
கூடாக்கு புகையிலை .
கூடாகாரம் மேல்வீடு ; கூடம் ; நிலவறை .
கூடாங்கம் ஆமை .
கூடாதார் பகைவர் .
கூடாநட்பு அகத்தாற் கூடாது புறத்தாற் கூடியொழுகும் நட்பு , தீயோர் நட்பு .
கூடார் காண்க : கூடாதார் .
கூடாரம் சீலைவீடு , துணியால் அமைக்கும் வீடு ; வண்டிக்கூடு ; நெற்கூடு ; பெருங்காயம் .
கூடாரவண்டி மேற்கூடுள்ள வண்டி .
கூடாவொழுக்கம் தகாத ஒழுக்கம் .
கூடியவரை ஆனமட்டும் .
கூடியற்பெயர் கூட்டத்தைக் குறிக்கும் பெயர் .
கூடிலி புலால் உண்போன் .
கூடிவருதல் சேர்ந்துவருதல் ; கைகூடிவருதல் ; மிகுதியாதல் .
கூடினரைப்பிரித்தல் பகையரசர்களைத் தம்முட் பிளவுண்டாக்கிப் பிரிக்கை .
கூடு உடல் ; பறவைக்கூடு ; விலங்கின் கூடு ; நெற்கூடு ; உருண்டு திரண்டு கூடுபோலுள்ளது ; மைக்கூடு ; வண்டிக்கூடு ; சாட்சிக்கூடு ; கூடாரம் ; மீன்பறி .
கூடுகொம்பன் கொம்பின் முனைப்பாகம் தம்முட் கூடிய மாடு .
கூடுதல் ஒன்றுசேர்தல் ; திரளுதல் ; பொருந்துதல் ; இயலுதல் ; கிடைத்தல் ; நேரிடுதல் ; இணங்குதல் ; தகுதியாதல் ; அதிகமாதல் ; தொடங்குதல் ; அனுகூலமாதல் ; உடன்படுதல் ; நட்புக்கொள்ளுதல் ; புணர்தல் ; அடைதல் ; மொத்தம் ; மேலெல்லை .
கூடுபூரித்தல் நிரப்புதல் .
கூடுவாய்மூலை மேற்கூரை இணையும் மூலை .
கூடுவிட்டுக் கூடுபாய்தல் உயிர் ஒருடம்பைவிட்டு மற்றோர் உடம்பிற் புகுதல் .
கூடுவிடுதல் இறத்தல் ; எலும்பு தோன்ற இளைத்தல் .
கூடுவிழுதல் சாதல் ; கட்டியின் ஆணிவேர் கழலுதல் .
கூடை பிரம்பு முதலியவற்றால் பின்னப்படும் கலம் ; பூக்கூடை ; ஈச்சங்கசங்கு , மூங்கில் முதலியவற்றால் செய்த கூடை ; மழைநீர் படாதபடி உடல்மேல் போட்டுக்கொள்ளும் சம்பைக் கொங்காணி ; அபிநயக் கைவகை .
கூடைக்காரன் கூடை விற்போன் ; கூடையில் காய்கறி விற்போன் .
கூடைப்பாடல் சொற்செறிவும் இசைச்செறிவும் உடைய பாடல் .
கூடையன் உடல் பருத்தவன் .
கூண்டடுப்பு வளைவினுள் அமைந்த அனலடுப்பு .
கூண்டாதல் மயிர் சிக்குப்படுதல் .
கூண்டு கூடு ; பறவைக்கூடு .
கூண்டுதல் கூடுதல் .
கூணிகை வீணையின் ஓர் உறுப்பு .
கூத்தச் சாக்கையன் கூத்து நிகழ்த்தும் சாக்கையர் குலத்தான் .
கூத்தப்பள்ளி அரண்மனையைச் சார்ந்த நாடக அரங்கு .
கூத்தம்பலம் கூத்தாடுதற்குரிய கோயிலரங்கு .
கூத்தர் நாடகம் நடிப்போர் .
கூத்தராற்றுப்படை தலைவனைக் கண்டு மீண்ட இரவலன் கூத்தாடுபவரைத் தலைவனிடம் செலுத்தும் புறத்துறை ; மலைபடுகடாம் .
கூட்டை ஒரு கூத்துவகை .
கூட்டோடு அடியோடு .
கூட உடன் ; ஒருங்கு ; மேற்பட ; உம்மைப் பொருள் தரும் இடைச்சொல் .
கூடகம் வஞ்சகம் .
கூடகாரகன் வஞ்சகன் .
கூடகாரம் மேன்மாடம் ; மாளிகையின் நெற்றிக் கூடு ; கூடம் .
கூடகாரன் காண்க : கூடகாரகன் .
கூடசதுக்கம் நான்காமடியிலுள்ள எழுத்துகள் யாவும் ஏனை மூன்றடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு பாடப்பெறுஞ் சித்திரகவி .
கூடசதுர்த்தம் நான்காமடியிலுள்ள எழுத்துகள் யாவும் ஏனை மூன்றடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு பாடப்பெறுஞ் சித்திரகவி .
கூடசன் கணவனல்லாதார்க்குப் பிறந்த மகன் , தந்தை இன்னானென்று அறியப்படாத புதல்வன் .
கூடசன்மலி முன்னிலவு நிரம்பிய நரகவகை .
கூடசாரன் அந்தரங்க தூதன் .
கூடசாலம் ஏழு நரகத்துள் ஒன்று .
கூடணை மயிற்றோகைக் கண் .
கூடத்தன் பரப்பிரமம் ; முதன்மையானவன் ; ஆன்மா .
கூடபதம் பாம்பு .
கூடபாதம் பாம்பு .
கூடபாகலம் யானைக்கு வரும் ஒருவகைக் கடுஞ் சுரநோய் .
கூடம் வீடு ; வீட்டின் கூடம் ; தாழ்வாரம் ; யானைச்சாலை ; மேலிடம் ; கோபுரம் ; தேவகோட்ட மன்றம் ; சம்மட்டி ; மலையினுச்சி ; அண்டகோளகை ; திரள் ; மறைவு ; பொய் ; வஞ்சகம: இசை வாராது ஓசை மழுங்கல் ; யாழ் குற்றம் நான்கனுள் ஒன்று .