சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| கூனற்கிழவன் | உடல் வளைந்த முதியோன் . |
| கூனன் | கூன் முதுகுடையவன் . |
| கூனன் முதுகு | காண்க : கூன்முதுகு . |
| கூனாள் | கூனி . |
| கூனி | கூனுடையவள் ; இராமபிரான் முடிசூடுதலைச் சூழ்ச்சிசெய்து தடுத்த மந்தரை ; வானவில் ; இறால்மீன்வகை ; பங்குனி . |
| கூனிக்குயம் | கூனிரும்பு , அறுவாள் . |
| கூனிப்போதல் | மூப்பு முதலியவற்றால் உடல் வளைதல் ; அவமான முதலியவற்றால் உடல் குறுகுதல் . |
| கூனிரும்பு | அறுவாள் . |
| கூனுதல் | வளைதல் ; முதுகு வளைதல் . |
| கூனை | மிடா ; நீர்ச்சால் . |
| கூன்முதுகு | ஆமையோடு . |
| கூனல் | வளைவு , கோணல் ; கூனல்முதுகு ; கூனன் . |
| கூனலங்காய் | புளியங்காய் . |
| கூழைக்கிடா | நீர்வாழ் பறவையுள் ஒன்று ; வாலில்லா எருமைக்கடா . |
| கூழைக்கும்பிடு | போலிவணக்கம் . |
| கூழைக்குறும்பு | பிறர் அறியாமற் செய்யும் குறும்புச் செயல் . |
| கூழைக்கை | குறைபட்டகை . |
| கூழைத்தனம் | போலியாகக் குழைந்து காட்டுகை . |
| கூழைத்தொடை | அளவடியில் இறுதிச்சீர் ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது . |
| கூழைநரி | வால் குட்டையான நரி . |
| கூழைப்பாம்பு | தலைக்கும் உடலுக்கும் இடையில் கழுத்தின்றி ஒன்றுபோல் தடித்துள்ள குள்ளவகைப் பாம்பு . |
| கூழைப்பார்வை | வஞ்சகப் பார்வை . |
| கூழைமுட்டை | காண்க : கூழ்முட்டை . |
| கூழைமுரண் | கடைச்சீரொழிந்த மற்றெல்லாச் சீர்க்கண்ணும் முரண்வரத் தொடுப்பது . |
| கூழைமை | கடமை ; குழைந்து நடக்கை . |
| கூழையன் | குள்ளன் ; முழுமடையன் . |
| கூள்தல் | திரளுதல் . |
| கூளுதல் | திரளுதல் . |
| கூளப்படை | பலவகையினர் கலந்த கூட்டுப்படை . |
| கூளம் | குப்பை , சண்டு ; திப்பி . |
| கூளன் | பயனற்றவன் . |
| கூளி | கூட்டம் ; குடும்பம் ; உறவு ; படைத்தலைவன் ; சாத்தான் ; பேய் ; சிவகணங்களாகிய பூதம் ; பெருங்கழுகு ; குற்றம் ; குள்ளம் ; கற்பில்லாதவள் ; எருது ; பொலி காளை . |
| கூளியர் | படைவீர்ர் ; வேட்டுவர் ; ஆறலைப்போர் ; குறவர் ; ஏவல் செய்வோர் ; நண்பர் . |
| கூற்றம் | பகுதி ; கொடும்பகைவன் , யமன் ; அழிவுண்டாக்குவது ; நாட்டின் பகுதி ; சொல் . |
| கூற்றரிசி | குற்றலரிசி . |
| கூற்றன் | யமன் . |
| கூற்றன் கொலையோன் | மயில்துத்தம் . |
| கூற்றன்வாய் | தலைமதகு . |
| கூற்று | கூறுகை ; மொழி ; கூறத்தக்கது ; யமன் , காலன் . |
| கூற்றுதைத்தான் | யமனைக் காலால் உதைத்த சிவன் . |
| கூற்றுவன் | யமன் . |
| கூறடைத்தல் | பகுதியாகப் பிரித்தல் . |
| கூறிட்டு மொழிதல் | வினாக்களுக்கு ஏற்பப்பகுத்துக் கூறும் விடை . |
| கூறிடுதல் | பங்கிடுதல் ; துண்டாக்குதல் . |
| கூறியது கூறல் | நூற் குற்றம் பத்தனுள் ஒன்று , முன்மொழிந்ததையே பயனின்றிப் பின்னும் மொழிவது . |
| கூறு | பகுதி , கூறுபாடு ; பங்கு ; பிளவுபட்ட துண்டு ; பாதி ; தன்மை . |
| கூறுகொள்ளுதல் | வாயில் திணித்துக்கொள்ளுதல் ; உரிமையாக்கிக்கொள்ளுதல் . |
| கூறுச்சீட்டு | பாகப்பிரிவினை ஆவணம் . |
| கூறுசீட்டு | பாகப்பிரிவினை ஆவணம் . |
| கூறுசெய்தல் | துண்டாக்குதல் ; பங்கிடுதல் ; மணியம் பண்ணுதல் . |
| கூறுசெய்வான் | மணியக்காரன் ; பங்கு பிரிப்பவன் . |
| கூறுதல் | சொல்லுதல் ; விலைகூறுதல் ; விளக்கிச் சொல்லுதல் ; கூறு சொல்லுதல் . |
| கூறுபடுத்துதல் | பிரித்தல் . |
| கூறுபடுதல் | பிரிவுபடுதல் . |
| கூறுபாடல் | வாய்ப்பாட்டு . |
| கூறுபாடு | பாகுபாடு ; பகுதி ; தன்மை . |
| கூறுவிக்குறுதல் | பிறரைக்கொண்டு சொல்லுவித்தல் . |
| கூறை | ஆடை ; கூறைப்புடைவை , கலியாண ஆடை . |
| கூறைகோட்படுதல் | ஆடையைப் பறிகொடுத்தல் . |
| கூறைப்பாய் | தோணிப்பாய் . |
| கூறைப்புடைவை | தாலிகட்டும் சமயத்திற்கு முன் மணமகளுக்கு மணமகன் வீட்டார் கொடுக்கும் சேலை . |
| கூறையுடுத்தல் | நாத்தனார் மணமகளுக்குக் கூறைப்புடைவை உடுத்துகை . |
| கூன் | வளைவு ; உடற்கூனல் ; கூனன் ; நத்தை ; ஆந்தை ; பெரும்பாத்திரம் செய்யுளடியில் அளவுக்குமேல் வரும் அசையும் சீரும் . |
| கூன்கிடை | ஐவகை மெய்க்குற்றங்களுள் ஒன்றாகிய உடல் கூனிக்கிடக்கை . |
| கூழாமட்டி | அறிவிலான் . |
| கூழான் | கண்டகிக்கல் . |
| கூழை | பெண்டிர் தலைமயிர் ; இறகு ; மயிற்றோகை ; நடு ; வால் ; குட்டையானது ; புத்திக்குறைவு ; கூழைத்தொடை ; கூழைப்பாம்பு ; சேறு ; பொன் ; கடைவரிசை படையின் பின்னணி . |
| கூழைக்கடா | நீர்வாழ் பறவையுள் ஒன்று ; வாலில்லா எருமைக்கடா . |
|
|