கெடுமதி முதல் - கெற்போட்டம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கெந்திவாருணி பேய்த்தும்மட்டிக்கொடி .
கெந்து ஒற்றைக்காலால் தத்தியாடும் பிள்ளை விளையாட்டு ; கிட்டிப்புள் விளையாட்டு .
கெந்துதல் தத்துதல் ; நெளித்தல் ; கிட்டிப்புள் அடித்தல் .
கெபி பள்ளம் ; குகை .
கெம்பத்து பகட்டு .
கெம்பரை கூடை .
கெம்பளித்தல் மகிழ்தல் .
கெம்பளிப்பு மகிழ்ச்சி .
கெம்பு பதுமராகம் , சிவப்பு இரத்தினக்கல் .
கெம்புதல் கொந்தளித்தல் ; இரத்தங்கொதித்தல் ; உரத்துப் பேசுதல் , ஆரவாரித்தல் .
கெம்புநீலம் உயர்ந்தநீலம் .
கெம்புமல்லிகை மயிர்மாணிக்கம் .
கெமித்தல் போதல் ; புணர்தல் .
கெல்லுதல் கல்லுதல் ; தோண்டுதல் ; வயிற்றை அரித்துவிடுதல் .
கெலி அச்சம் ; ஆசை ; பெருவயிறு .
கெலிசு முகம் வயிறுகளிற் காணும் வீக்கம் .
கெலித்தல் வெல்லுதல் ; ஆசைப்படுதல் ; அஞ்சுதல் .
கெலிப்பு வெற்றி ; மகிழ்ச்சி .
கெலுழன் கருடன் .
கெவரி வெள்ளைக் காக்கணங்கொடி .
கெவியூதி நாலரைக்கல் தொலைவு .
கெவுரா துளசிச்செடி .
கெவுரிசங்கம் காண்க : கௌரிசங்கம் .
கெவுளி கவுளி , பல்லி ; மஞ்சள்நிறத் தேங்காய் .
கெவுனி கோட்டைவாயில் .
கெழி நட்பு .
கெழீஇயிலி பகைவன் .
கெழு நிறம் ; ஒளி ; ஒரு சாரியை .
கெழுதகைமை உரிமை ; நட்பு .
கெழுமுதல் நிறைதல் ; முதிர்தல் ; முளைத்தல் ; காமவிகாரங் கொள்ளுதல் ; கற்றல் ; பொருந்துதல் ; கூடுதல் .
கெழுமை நிறம் ; ஒளி ; வளமை .
கெழுவு நட்பு .
கெழுவுதல் பொருந்துதல் ; நிறைதல் ; பற்றுக் கொள்ளுதல் .
கெளிசு காண்க : கெலிசு .
கெளித்தல் நெளிந்துபோதல்
கெளிதம் பெருங்கல் .
கெளிர்ச்சல்லியம் மீன் எலும்பு .
கெளிறு கெளிற்றுமீன் .
கெளுத்தி கெளிற்றுமீன் .
கெற்சி சிறுவழுதலை .
கெற்பாதானம் கருத்தரித்த நாலா மாதஞ் செய்யும் ஒரு சடங்கு .
கெற்பு கிற்பு , திராணி , வலிமை .
கெற்போட்டம் காண்க : கர்ப்போட்டம் .
கெடுமதி கெடுபுத்தி , அழிதற்காம் அறிவு ; கெட்ட ஆலோசனை .
கெடுவாய் ஓர் இகழ்ச்சிமொழி .
கெடுவான் ஒரு வசைமொழி .
கெடுவு தவணை .
கெடை மூங்கில் .
கெண்டம் ஆபத்து .
கெண்டண் தடியன் , முரடன் .
கெண்டி கெண்டிகை ; துண்டு .
கெண்டிகை கமண்டலம் .
கெண்டிச்செம்பு மூக்குள்ள செம்புவகை .
கெண்டுதல் தோண்டுதல் ; அறுத்துத் தின்னுதல் ; கிண்டுதல் .
கெண்டை சேல்மீன் ; சரிகை ; கண்டை ; புயத்தின் முன்பக்கத்துச் சதை ; கணைக்கால் ; ஏளனம் .
கெண்டைக்கால் கணைக்கால் .
கெண்டைபுரட்டுதல் பசிதாகம் முதலியவற்றால் கைகால்கள் வலித்திழுத்தல் .
கெணணை எண்ணிக்கை .
கெத்து தந்திரம் ; தந்திரமான சொல் .
கெத்துதல் கீறிப் பிளத்தல் ; மீன் முதலியவை அறுத்தல் ; கொக்கரித்தல் ; ஏமாற்றுதல் .
கெதாயு ஆயுள் முடிந்தவன் .
கெதி கதி ; புகலிடம் .
கெந்தகம் கந்தகம் , ஒருவகைத் தாதுப்பொருள் ; அப்பிரகம் ; நாய்வேளைப்பூடு .
கெந்தசாலி கந்தசாலி , ஒருவகை உயர்ந்த செந்நெல் .
கெந்தபொடி குளிக்கும்போது பயன்படுத்தும் ஒருவகை மணப்பொடி .
கெந்தம் கந்தம் , மணம் .
கெந்தனம் கோடகசாலைப் பூண்டு .
கெந்தி கந்தகம் ; பொன்னிறமான கல் .
கெந்தித்தல் தத்துதல் ; நெளித்தல் .
கெந்திபரம் ஆடுதின்னாப்பாளைச்செடி .