சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| கேட்டல் | செவிக்குப் புலனாகுதல் ; பாடங்கேட்டல் ; வினாவல் ; விசாரித்தல் ; வேண்டுதல் ; கேள்விப்படுதல் ; கொடுக்கச் சொல்லுதல் ; தண்டித்தல் ; இரத்தல் ; நோய் முதலியன நீக்குதல் ; விலை கேட்டல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; பொறுத்தல் ; தணிதல் ; கீழ்ப்படிதல் ; ஒலி எட்டுதல் ; செவியாற் கேட்குதல் ; அனுமதி பெறுதல் . |
| கேட்டித்தடி | தாற்றுக்கோல் ; சாட்டை . |
| கேட்டுக்கொள்ளுதல் | வேண்டிக்கொள்ளுதல் . |
| கேட்டுமுட்டு | புறச்சமயத்தாரைப்பற்றிக் கேட்டதனால் சைனர் மேற்கொள்ளும் தீட்டு . |
| கேட்டை | பதினெட்டாம் நாண்மீண் ; மூதேவி ; ஓர் அசைநிலை . |
| கேட்டொறும் | கேட்கும்பொழுதெல்லாம் . |
| கேட்பு | கேள்வி . |
| கேட்போர் | அவைக்களத்துத் தலைமையேற்று அரங்கேறும் நூலைக் கேட்டவர் ; நூல் கேட்டற்குரிய மாணாக்கர் ; இன்னார் கூற இன்னார் அதனைக் கேட்டாரென்னும் அகப்பாட்டுறுப்பு . |
| கேடகம் | பரிசை ; மலைகள் அடுத்துள்ள ஊர் ; பாசறை ; கேடயம் ; புறாமுட்டிச் செடி . |
| கேடம் | மலைகள் ; அடுத்துள்ள ஊர் ; கிளி ; ஆறு . |
| கேடயம் | கேடகம் ; தெய்வத் திருமேனியை எழுந்தருளப்பண்ணும்போது உதவும் தோளுக்கினியான் என்னும் வாகனம் . |
| கேடன் | கெட்டவன் , கேடுடையவன் ; அழிப்பவன் . |
| கேடிலி | அழவில்லாதவன்(ள்) . |
| கேடு | அழிவு ; இழப்பு ; வறுமை ; தீமை ; கெடுதல் ; வேறுபாடு ; அழகின்மை . |
| கேடுகாலம் | அழிவுறுங்காலம் . |
| கேடுகெட்டவன் | நிலைமையழிந்தவன் . |
| கேடுபாடு | அழிவு ; வறுமைநிலை . |
| கேண்மை | நட்பு ; உறவு ; கண்ணோட்டம் ; வழக்கு . |
| கேணம் | செழிப்பு . |
| கேணி | கிணறு ; சிறுகுளம் ; அகழி ; தொட்டில் . |
| கேத்திரக்கியன் | ஆன்மா . |
| கேத்திரகணிதம் | கோட்டுக்கணிதம் , இரேகை கணிதம் . |
| கேத்திரபாலன் | வயிரவன் , கோயிலைக்காக்கும் தேவதை . |
| கேத்திரம் | புண்ணியத்தலம் ; விளைநிலம் . |
| கேத்திரி | திருமால் . |
| கேதகாரியம் | சாவுச்சடங்கு . |
| கேதகி | தாழை . |
| கேதகை | தாழை . |
| கேதம் | துக்கம் ; இளைப்பு . |
| கேதல் | அழைத்தல் . |
| கேதன் | காமன் . |
| கேதனம் | கொடி . |
| கேதாரகவுளம் | ஒரு பண்வகை . |
| கேதாரம் | இமயமலையில் உள்ள ஒரு சிவதலம் ; விளைநிலம் ; ஒரு பண்வகை ; மயில் . |
| கேதாரயோகம் | ஏழு கோள்கள் இடையீடின்றி நான்கு இராசிகளில் நிற்க வரும் யோகம் . |
| கேதாரி | குதிரைப் பிடரி ; குதிரைச் சுழிவகை . |
| கேதாளி | குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று . |
| கேது | ஒன்பது கோள்களுள் ஒன்று ; அடையாளம் ; சுடர் ; ஒளி ; மயில் . |
| கேதுக்கல் | வயலின் எல்லைக்கல் . |
| கேதுதல் | கதறியழைத்தல் . |
| கேதுமால் | ஒன்பது கண்டங்களுள் ஒன்று . |
| கேதுமால் வருடம் | ஒன்பது கண்டங்களுள் ஒன்று . |
| கேதுமாலம் | ஒன்பது கண்டங்களுள் ஒன்று . |
| கேதுரத்தினம் | வைடூரியம் . |
| கேந்திரம் | வட்டத்தின் நடு ; பிறந்த இலக்கினத்திற்கு ஒன்று , நான்கு , ஏழு அல்லது பத்தாம் இடம் . |
| கேந்திரித்தல் | கிரகம் கேந்திரம் பெற்று நிற்றல் . |
| கேந்துமுறியம் | நாய்வேளைப்பூடு . |
| கேப்பை | காண்க : கேழ்வரகு . |
| கேமாச்சி | வெள்ளைக் காக்கணங்கொடி . |
| கேயம் | இசைத்தற்குரியது ; இசைப்பாட்டு . |
| கேயிகம் | காவிக்கல் . |
| கே | ஓர் உயிர்மெய்யெழுத்து (க் + ஏ) . |
| கேகம் | வீடு . |
| கேகயப்புள் | அசுணமா . |
| கேகயம் | மயில் ; ஒரு நாடு ; பண்வகை ; அசுணப் பறவை ; கவுரிபாடாணம் ; வில் . |
| கேகலன் | கூத்தாடி . |
| கேகி | மயில் . |
| கேகை | மயிற்குரல் . |
| கேசகன் | நாவிதன் . |
| கேசகீடம் | பேன் . |
| கேசதம் | கரிசலாங்கண்ணிப் பூண்டு . |
| கேசம் | மக்கள் தலைமயிர் ; விலங்கின் மயிர் . |
| கேசமுட்டி | வேம்பு . |
| கேசரஞ்சனம் | பொற்றலைக் கையாந்தகரை ; தலைமயிர் வளர்க்குந் தைலவகை . |
| கேசரம் | பூந்தாது ; மகிழமரம் ; குங்கும்ப்பூ ; வண்டு ; பெருங்காயம் ; பிடரிமயிர் . |
| கேசரர் | வித்தியாதரர் . |
| கேசரி | அரிமா , சிங்கம் ; அரியணை ; கொம்மட்டி மாதுளை ; ஒருவகைச் சிற்றுண்டி . |
| கேசரிகம் | நாயுருவிச்செடி . |
| கேசரியாசனம் | கணைக்கால்கள் பிட்டத்தைத் தொடவும் விரித்த கைவிரல்கள் துடையிற்படவும் வாய் மலர்ந்தும் பார்வை மூக்குநுனியை நோக்கியும் இருக்கும் யோகாசன வகை . |
| கேசவம் | பெண்வண்டு . |
| கேசவன் | கண்ணபிரான் ; சோழன் . |
| கேசாதிபாதம் | முடிமுதல் அடிவரை ; கலிவெண்பாவால் ஒருவரை வருணித்துக் கூறும் ஒரு பிரபந்தம் . |
| கேசாரி | குதிரைக் கழுத்தின் மயிர் . |
| கேசி | அழகிய மயிர்முடி உடையவள் . |
| கேசினி | சங்கங்குப்பிச்செடி . |
|
|