கைச்சுரிகை முதல் - கைதொடுமானம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கைதொடல் உண்ணுதல் ; உணவு ; கலியாணம் .
கைதொடன் உதவிசெய்வோன் ; புத்தி பூர்வமாக ஒன்றைச் செய்வோன் .
கைதொடுத்தல் திருமணஞ் செய்துவைத்தல் .
கைதொடுதல் பரிசித்தல் ; சூளுரைத்தல் ; உண்ணுதல் ; தொடங்குதல் ; மணஞ்செய்தல் .
கைதொடுமானம் உதவி .
கைதைச்சுரிகையன் தாழையை வாளாக உடைய மன்மதன் .
கைத்தல் அலங்கரித்தல் ; அலைத்தல் ; கசத்தல் ; நைந்து வருந்துதல் ; சினத்தல் ; செலுத்துதல் ; ஊட்டுதல் .
கைத்தலம் கை ; உள்ளங்கை .
கைத்தளம் ஒருவகைக் கேடயம் .
கைத்தாங்கல் கையால் தாங்கிநிற்கை .
கைத்தாய் வளர்ப்புத்தாய் .
கைத்தாராளம் எதிர்நோக்காது உதவிசெய்தல் .
கைத்தாள் திறவுகோல் ; கையாலிடுந் தாழ்ப்பாள் ; கோயில் விளக்குளை ஏற்றப் பயன்படும் நீண்ட கைவிளக்கு .
கைத்தாளம் தாளக்கருவி ; சிறுதாளம் ; கையால்போடுந் தாளம் .
கைத்திட்டம் கைமதிப்பு ; முடிவான கையிருப்புத் தொகை .
கைத்திரி இடக்கையென்னுந் தோற்கருவி .
கைத்தீட்டு ஆவணம் , பத்திரம் .
கைத்தீபம் கைவிளக்கு , கையிற் பிடிக்குந்தீவட்டி , சிறு தீவட்டி .
கைத்தீவட்டி கைவிளக்கு , கையிற் பிடிக்குந்தீவட்டி , சிறு தீவட்டி .
கைத்தீவர்த்தி கைவிளக்கு , கையிற் பிடிக்குந்தீவட்டி , சிறு தீவட்டி .
கைத்து கையிலுள்ள பொருள் ; பொன் ; செல்வம் ; வெறுப்பு .
கைத்துடுக்கு கையால் அடித்தல் முதலியன செய்யுந் தீய இயல்பு .
கைத்துடுப்பு கூழ் முதலியன துழாவுங் கருவி ; படகு தள்ளும் சிறிய தண்டு .
கைத்துப்பாக்கி சிறு துப்பாக்கி .
கைத்தூக்கு கையினால் எடுக்கக்கூடிய ஒரு தூக்களவு ; கைகொடுத்து உதவல் .
கைத்தூண் பிறர் கையால் உண்கை ; சிறு தூண் .
கைத்தொண்டு கோயிற்பணிவிடை ; குற்றேவற்பணி .
கைத்தொழில் கைவேலை ; எழுதுதல் முதலியனவாகக் கைத்திறங்காட்டுந் தொழில் .
கைதகம் தாழம்பூ .
கைதட்டிப்பண்டாரம் வாய் திறவாது கைதட்டிப் பிச்சை வாங்கும் சைவ பண்டாரம் .
கைதட்டுதல் நகைப்பு , வெறுப்பு , வியப்பு முதலியவற்றின் குறியாகக் கைகொட்டுதல் ; கையடித்தல் ; கைதப்புதல் ; பூப்பெய்துதல் .
கைதப்புதல் கைதவறிப்போதல் ; இலக்குத் தவறுதல் .
கைதரல் உதவிசெய்தல் ; உறுதிசெய்தல் ; மணம்புரிதல் ; மிகுதல் ; கைகூடுதல் .
கைதருதல் உதவிசெய்தல் ; உறுதிசெய்தல் ; மணம்புரிதல் ; மிகுதல் ; கைகூடுதல் .
கைதல் தாழை .
கைதலைவைத்தல் பெருந்துன்பமடைதல் .
கைதவம் கபடம் ; துன்பம் ; பொய் .
கைதவறுதல் கைப்பிழையாதல் ; தொலைந்துபோதல் ; கைதப்புதல் ; இறத்தல் .
கைதவன் பாண்டியன் ; வஞ்சகன் .
கைதழுவுதல் கைகோத்தல் .
கைதளர்தல் சோர்தல் ; வறுமையுறுதல் .
கைதாங்குதல் உடல்வலியற்றவருக்குக் கைகொடுத்து உதவுதல் ; அழிவெய்தாமற் காத்தல் .
கைதி சிறைப்பட்ட குற்றவாளி .
கைதிட்டம் திருந்திய அலங்காரம் ; கைமதிப்பு ; அறுதியிட்ட கையிருப்புத் தொகை .
கைது சிறைக்காவல் .
கைதுசெய்தல் சிறைப்படுத்துதல் .
கைதுடைத்தல் விட்டொழிதல் .
கைதூக்கிவிடுதல் வறுமையால் வருந்துவோர் , நீரில் அழுந்துவோர் முதலியோரைக் காத்தல் ; கூட்ட நடுவில் கையைப் பிடித்து வெளியே இழுத்துவிடுதல் .
கைதூக்குதல் வறுமையால் வருந்துவோர் , நீரில் அழுந்துவோர் முதலியோரைக் காத்தல் ; உடன்பட்டதற்குக் குறியாகக் கையை உயர்த்துதல் .
கைதூவல் கையொழிதல் .
கைதூவாமை கையொழியாமை .
கைதூவு செயலற்றிருக்கை .
கைதூவுதல் கைவேலை நீங்குதல் ; செயலற்றிருத்தல் .
கைதேர்தல் திறமையடைதல் .
கைதை தாழை .
கைச்சுரிகை உடைவாள் .
கைச்சுருள் மணமக்களுக்குக் கொடுக்கும் வெற்றிலைச் சுருள் ; மணமக்களுக்குத் தாம்பூலத்துடன் கொடுக்கும் பணம் .
கைச்சுழிப்படுதல் சரியாக விதையாமையால் பயிர் ஒரிடத்துக் குவிந்து வளர்தல் .
கைச்சூடு கையைத் தேய்த்தல் முதலியவற்றால் உண்டாகுஞ் சூடு ; பொறுக்கக்கூடிய சூடு .
கைச்செட்டு சிக்கனம் ; சில்லறை வணிகம் .
கைச்செலவு சொந்தச் செலவு ; சில்லறைச் செலவு .
கைச்சேட்டை கையால் செய்யும் குறும்புச் செயல் .
கைசருவுதல் கைகலத்தல் ; எதிர்த்தல் ; திருடுதல் ; பெண்களிடம் குறும்பு செய்தல் .
கைசலித்தல் கைதளர்தல் ; வறுமையுறுதல் .
கைசளைத்தல் கைதளர்தல் ; வறுமையுறுதல் .
கைசிகம் ஒரு பண்வகை .
கைசிகவிருத்தி காமம் பொருளாகக் காமுகராகிய மக்கள் தலைவராக வரும் நாடகநடை .
கைசு காண்க : கஃசு .
கைசெய்தல் தொழிற்செய்தல் ; அலங்கரித்தல் ; உதவிசெய்தல் ; நடத்துதல் ; அறுவைச்சிகிச்சை செய்தல் .
கைசோர்தல் காண்க : கைசலி(ளை)த்தல் .
கைசோர்ந்துபோதல் கைவிட்டுப்போதல் ; வறுமை நிலையை அடைதல் .
கைஞ்ஞானம் சிற்றறிவு .
கைடவை கொற்றவை , துர்க்கை .
கைத்தடி ஊன்றுகோல் ; சிறுதடி ; பாகபத்திரம் ; தற்குறிக் கீற்று .
கைத்தண்டம் கையிழப்பு ; ஊன்றுகோல் .