கைவாள் முதல் - கைனி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கைவாள் சிறுவாள் , கைரம்பம் .
கைவாளம் அடைப்பை .
கைவாளை அடைப்பை .
கைவாறு கைத்தாங்கல் ; தக்க சமயம் .
கைவிசேடம் கைராசி ; பரிசு .
கைவிஞ்சுதல் அளவுகடத்தல் .
கைவிட்டம் வீட்டின் குறுக்குவிட்டம் .
கைவிடுதல் கைவிட்டுவிடுதல் , விட்டொழிதல் .
கைவிடுபடை அம்பு .
கைவிதிர்த்தல் மறுப்பு , அச்சம் , புகழ்ச்சி ஆகியவற்றின் குறியாகக் கையை அசைத்தல் .
கைவிதை வெந்தயம் ; நாற்றைப் பெயர்த்து நடாது விதைத்தபடியே பயிர்செய்கை .
கைவிதைப்பு புழுதிவிதைப்பு .
கைவிரித்தல் இரத்தற்காகக் கையை நீட்டுதல் ; தன்னால் இயலாமை குறிப்பித்தல் , மறுத்தல் .
கைவிரைவு கையினால் விரைந்து தொழில் செய்யும் தன்மை .
கைவிலங்கு கைக்கிடும் விலங்கு .
கைவிலை ரொக்கவிலை ; நடப்பு விலை .
கைவிளக்கு சிறு விளக்கு .
கைவிளி கையால் உதட்டை மடித்து ஊதியெழுப்பும் சீழ்க்கை ஒலி .
கைவினை கைத்தொழில் ; கைவேலை .
கைவினைஞன் தொழிலாளி .
கைவீச்சு கைவீசுகை ; கையிருப்புத் தொகை ; கைத்திறம் .
கைவேகம் கைவிரைவு .
கைவேல் கைவிடாவேல் ; கப்பணம் .
கைவேலை கையால் செய்தது ; கைத்தொழில் திறம் ; கைத்தொழில் .
கைவைத்தல் புகுதல் ; திருடுதல் ; கைவைத்துக் குரு புனிதமாக்குதல் ; அடித்தல் ; கற்பழித்தல் .
கைனி அத்தநாள் ; கைம்பெண் .