சொல்
|
அருஞ்சொற்பொருள் |
கொடுக்கல்வாங்கல் | கொடுப்பதுவும் வாங்குவதும் , இலேவாதேவி . |
கொடுக்கறுத்தல் | குறும்புத்தனததை அடக்குதல் . |
கொடுக்காய்ப்புளி | வளைந்த காயையுடைய ஒரு மரவகை . |
கொடுக்கி | ஆபரணப்பூட்டு ; தேட்கொடுக்கிப் பூடு ; கதவையடைத்து இடும் இருப்புப்பட்டை . |
கொடுக்கு | தேள் முதலியவற்றின் கொட்டும் உறுப்பு ; நண்டு முதலயவற்றின் இடுக்கிக்கால் ; தீயவன் ; ஆடைத்தொங்கல் ; மகன் ; மூலத்தாறு . |
கொடுகுதல் | குளிரால் ஒடுங்குதல் ; பற்கூசுதல் ; கொடுமையாதல் . |
கொடுகொட்டி | பதினோராடல்களுள் முப்புரம் எரித்த காலையில் சிவபெருமான் ஆடிய கூத்து ; ஒரு பறைவகை . |
கொடுகொடுத்தல் | குளிரால் நடுங்குதல் ; விரைவுபடுதல் . |
கொடுங்கண் | தீமை விளைவிக்கும் பார்வை . |
கொடுங்கரி | பொய்ச்சாட்சி . |
கொடுங்காய் | வெள்ளரிக்காய் . |
கொடுங்குழை | வளைந்த காதணி . |
கொடுங்கை | மடித்த கை ; வளைந்த கை ; நீண்டு வளைந்த வீட்டு உறுப்பு ; கொடுமை . |
கொடுங்கோபிச்சிலை | ஒருவகை மஞசள் நிறக்கல் . |
கொடுங்கோல் | நீதிநெறி தவறிய அரசாட்சி . |
கொடுங்கோன்மை | நீதிநெறி தவறிய அரசாட்சி . |
கொடுசூரி | காண்க : கொடுஞ்சூரி . |
கொடுஞ்சி | காண்க : கொடிஞ்சி . |
கொடுஞ்சூரி | கொடியவள் . |
கொடுத்தல் | ஈதல் ; பெற்றெடுத்தல் ; பங்காடுதல் ; விற்றல் ; உடன்படுதல் ; சாகக்கொடுத்தல் ; திட்டுதல் ; அடித்தல் ; ஒரு துணைவினை . |
கொடுத்துவைத்தல் | ஒருவரிடம் பொருளை நம்பி வைத்தல் ; நல்வினை பெறறிருத்தல் . |
கொடுதி | மர ஆணி . |
கொடுந்தமிழ் | செந்தமிழ்நாட்டைச் சூழ்ந்து வழங்கிவரும் தமிழ்மொழி . |
கொடித்தண்டு | காண்க : கொடிக்கம்பம் . |
கொடித்தம்பம் | காண்க : கொடிக்கம்பம் . |
கொடித்தரம் | சூரியன் தோன்றும்போது உச்சியில் தோன்றும் எட்டாம் நாள் சந்திரன் . |
கொடித்தாலி | சரட்டுத் தாலி . |
கொடித்தீ | கொடிவேலி . |
கொடிது | காண்க : கொடியது . |
கொடி நரம்பு | வெளியே தெரியும்படி ஒடியுள்ள உடல் நரம்பு . |
கொடிநிலை | மும்மூர்த்திகளின் கொடிகளுள் ஒன்றனோடு அரசன் கொடியை உவமித்துப் புகழும் புறத்துறை ,கீழ்த்திசையில் நிலையாக உதிக்கும் சூரியன் . |
கொடிப்படை | படையின் முன்னணி . |
கொடிப்பந்தர் | கொடிகள் படர்ந்த பந்தல் . |
கொடிப்பயறு | பயறுவகை . |
கொடிப்பவழம் | பவழம் . |
கொடிப்பாதை | காண்க : கொடித்தடம் . |
கொடிப்பாலை | பாலைவகை ; பாலை யாழ்த்திறவகை . |
கொடிப்பிணை | வங்கமணல் . |
கொடிப்பிள்ளை | காக்கைக்குஞ்சு ; பள்ளையாடு . |
கொடிப்புல் | அறுகம்புல் . |
கொடிப்பூ | கொடிகளிற் பூக்கும் பூ . |
கொடிமரம் | கோயில்களின் முன்னால் கொடியேற்றுவதற்காக நடும் மரம் ; கொடி கட்டும் நீண்ட தடி . |
கொடிமல்லிகை | மல்லிகை ; சாதிமல்லிகை . |
கொடிமாசிகள் | நிலையற்றோடும் மேகங்கள் . |
கொடிமாதுளை | ஒருவகை மாதுளைமரம் . |
கொடிமின்னல் | கொடிபோல வீசி ஒளிரும் மின்னல் . |
கொடிமுந்திரி | திராட்சை . |
கொடிமுந்திரிகை | திராட்சை . |
கொடிமூக்கு | நீண்ட மூக்கு . |
கொடியடுப்பு | அடுப்புவகை ; பக்க அடுப்பு . |
கொடியது | கொடுமையானது . |
கொடியரசு | அவரைக்கொடி ; அரசரமரவகை . |
கொடியராகு | கோமேதகம் . |
கொடியன் | தீயன் ; கேது . |
கொடியாடு | ஆண்டுக்கொருமுறை ஒரு குட்டி போடும் நீண்ட காலுள்ள ஆடு . |
கொடியார்கூந்தல் | அம்மையார் கூந்தல் என்னும் சவரிக்கொடி . |
கொடியாள் | கொடிபோன்ற பெண் ; கொடுமையானவள் . |
கொடியாள்கூந்தல் | காண்க : கொடியார்கூந்தல் . |
கொடியான் | கொடுமையானவன் . |
கொடியிறக்குதல் | ஏற்றின கொடியைத் தாழத்துதல் ; திருவிழா முடிவில் கொடியைக் கீழிறக்கி விடுதல் ; காற்றாடியை இறக்குதல் . |
கொடியீச்சு | சவ்வரிசி . |
கொடியெடுத்தல் | அறைகூவுகை ; வெற்றியின் அறிகுறியாகக் கொடிபிடித்தல் . |
கொடியேற்றம் | கோயிலில் திருவிழாத் தொடக்கத்தில் கொடி மரத்தில் கொடியை உயர்த்துதல் . |
கொடியேற்று | கோயிலில் திருவிழாத் தொடக்கத்தில் கொடி மரத்தில் கொடியை உயர்த்துதல் . |
கொடியேற்றுதல் | கோயிலில் திருவிழாத் தொடக்கத்தில் கொடி மரத்தில் கொடியை உயர்த்துதல் . |
கொடியோடுதல் | கொடியுண்டாகிப் படர்தல் ; இரேகை நீளுதல் ; இறக்குந்தருவாயில் மூச்சு இழைதல் . |
கொடியோன் | தீயவன் ; கற்றாழை . |
கொடிவழி | ஒற்றையடிப் பாதை ; மரபுவழி . |
கொடிவழித்தீர்த்தம் | திருப்பதி மலையிலுள்ள ஒரு புண்ணிய தீர்த்தம் . |
கொடிவாகனன் | காக்கையை ஊர்தியாகவுடைய சனி . |
கொடிவிடுதல் | மிகுதியாதல் ; கொடியோடுதல் . |
கொடிவீடு | படர்கொடிகளால் அமைந்த வீடு . |
கொடிவேலி | சித்திரமூலம் என்னுங் கொடி . |
கொடிற்றுக்கோல் | கள்வர் பயன்படுத்தும் கருவி , கன்னக்கோல் . |
கொடிறு | கதுப்பு ; யானை மதச்சுவடு ; குறடு ; பூசநாள் . |
![]() |
![]() |
![]() |