கொல்லைவெளி முதல் - கொள்கலம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கொழு கொழுப்பு ; உலோகக்கோல் ; ஏர்க்காறு , கலப்பையிற் பதிக்கும் இரும்பு ; துளையிடும் பெரிய ஊசி .
கொழுக்கட்டை வெல்லம் முதலியன சேர்த்து அரிசி மாவால் செய்யும் சிற்றுண்டிவகை .
கொழுக்கொடுத்தல் இளக்காரங் கொடுத்தல் ; பெருமையுண்டாக்குதல் .
கொழுகொம்பு கொடிகள் ஏறிப் படர்தற்கு நடும் கொம்பு ; பற்றுக்கோடு ; மரத்தின் நடு கொம்பு .
கொழுங்கிரி மல்லிகைச்செடி .
கொழுச்சிராய் கலப்பையிற் கொழுவை இணைக்கும் மரத்துண்டு .
கொழுத்தட்டுதல் கலப்பைக்காற்றைக் கூர்மையாக்குதல் .
கொழுத்தல் செழித்தல் ; உடற்கொழுப்பு மிகுதல் ; வளம்மிகுத்தல் ; குழம்பாயிருத்தல் ; திமிர்கொள்ளுதல் ; பூமி மதர்த்தல் .
கொழுத்தாடை கரும்பின் நுனிப் பகுதி .
கொழுந்தாடை கரும்பின் நுனிப் பகுதி .
கொழுதுதல் கோதுதல் , குடைதல் ; பறித்தல் ; கிழித்தல் .
கொழுந்தன் கணவனுடன் பிறந்தான் ; அளியன் ; மைத்துனன் ; கணவன் .
கொழுந்தன்பு இளகிய அன்பு .
கொழுந்தி மனைவியின் தங்கை ; தம்பியின் மனைவி .
கொழுந்து இளந்தளிர் ; இளமையானது ; மென்மை ; மருக்கொழுந்து ; வெற்றிலைக் கொடி ; சுடர் ; படையின் முன்னணி ; சாமரை முதலியவற்றின் நுனி .
கொழுந்துக்கால் வெற்றிலைக்கொடிக்கு நடும் கொழுகொம்பு .
கொழுந்துதல் சுடர்விட்டு எரிதல் ; காய்ச்சப்படுதல் ; வெயிலிற் கருகுதல் .
கொழுந்துவிடுதல் சுடர்விடுதல் ; தளிர்விடுதல் .
கொழுந்தோடுதல் தளிர்விடுதல் .
கொழுநன் கணவன் ; இறைவன் .
கொழுநனை மலரும் பருவத்து அரும்பு .
கொழுநீர் பெருகிய நீர் ; மிகப் புளித்த கள் ; வியர்வை .
கொழுப்பிறக்குதல் செருக்கடக்குதல் .
கொழுப்பு செழிப்பு ; நிணம் ; செழுமை ; குழம்பாயிருக்கை ; செருக்கு ; நிலத்தின் மதர்ப்பு , நிலவளம் .
கொழுப்புக்கல் சிவப்புக்கல்வகை .
கொழுப்புக்குடல் ஆட்டின் சிறுகுடல் .
கொழும்புகை நறும்புகை .
கொழுமிச்சை கிச்சிலி ; நாரத்தை .
கொழுமீதி அரசாங்கத் தீர்வைபோக நிலக்கிழார் அடையும் நிலவருமானம் .
கொழுமுதல் மரத்தின் பருத்த அடிப்பகுதி .
கொழுமுறி இளந்தளிர் .
கொழுமை செழுமை ; இளமை ; அழகு ; நிறம் ; குளிர்ச்சி .
கொழுலாபம் வேளாண்மையிற் கிடைக்கும் ஊதியம் .
கொழுவுகதவு கீற்கதவு .
கொழுவுகோல் காண்க : கொழுகொம்பு .
கொள் காணம் ; குடைவேல் ; சிறு நிறையளவு .
கொள்கலம் பண்டமிடுங் கலம் ; அணி ; ஆடை ; சாந்து , சந்துமாலை முதலியன பெய்கலம் ; பனையோலை , மூங்கில் இவற்றால் ஆகிய கூடை .
கொல்லைவெளி வயல்வெளி .
கொலு அரசசபை ; அரச முன்னிலை ; திருவோலக்கம் , உல்லாச வீற்றிருப்பு ; நவராத்திரிப் பண்டிகையில் பொம்மை முதலியவற்றை அலங்காரமாக அமைக்கை .
கொலுக்கூடம் கொலுமண்டபம் ; அரசவை .
கொலுகொலுத்தல் கலகலத்தல் ; மட்கிப் போதல் ; வாதத்தில் தோற்றல் ; ஓயாமல் பேசுதல் .
கொலுகொலுப்பு பகட்டு , ஆடம்பரம் ; கொலு கொலுத்தல் ; ஓயாமல் பேசுதல் .
கொலுசு காலணியுள் ஒன்று , சங்கிலி .
கொலுமண்டபம் திருவோலக்க மண்டபம் .
கொலுவிடுத்தல் வீற்றிருத்தல் .
கொலை உயிர்வதை , உயிரை உடம்பினின்று நீக்கல் .
கொலைக்கடம்பூட்டுதல் கொலைத்தண்டனை நிறைவேற்றுதல் .
கொலைக்களம் கொல்லப்படும் இடம் .
கொலைக்குற்றம் உயிர்வதை செய்தலாகிய குற்றம் .
கொலைகாரன் கொலை செய்வோன் ; பழிபாவங்களுக்கு அஞ்சாதவன் .
கொலைச்சிறை சிறைச்சாலையில் கொலைத் தண்டனைக்குரிய குற்றவாளிகளை வைக்கும் அறை .
கொலைசெய்தல் கொல்லுதல் .
கொலைஞன் கொலைகாரன் ; வேடன் ; சண்டாளன் .
கொலைநவிலுதல் கொலைசெய்தல் .
கொலைநன் கொலைகாரன் .
கொலைப்பழி கொல்லுதலாகிய பெரும் பாவம் ; பெருந் தீச்செயல் ,
கொலைப்பாதகம் கொல்லுதலாகிய பெரும் பாவம் ; பெருந் தீச்செயல் ,
கொலைப்பாதகன் கொலைசெய்பவன் .
கொலைமகள் கொற்றவை ; துர்க்கை .
கொலைமலை கொலைசெய்யும் மலையாகிய யானை .
கொலையாளன் காண்க : கொலைகாரன் .
கொலையாளி காண்க : கொலைகாரன் .
கொலையுண்ணுதல் கொலைசெய்யப்படுதல் .
கொலைவன் கொலைகாரன் ; வேடன் ; சிவன் .
கொவ்வை கொவ்வைக்கொடி .
கொவ்வைக்காய்ப்பதம் கொவ்வைக்காய் போன்ற பசுமையாய் நெற்பயிரில் தோன்றும் இளம்பதம் .
கொவிந்தம் செம்முள்ளிச்செடி .
கொவிள் ஒருமரவகை .
கொழிஞ்சி கிச்சிலி ; ஒருவகை நாரத்தை மரம் ; கொள்ளுக்காய்வேளை ; பூவாது காய்க்கும் மரம் .
கொழுஞ்சி கிச்சிலி ; ஒருவகை நாரத்தை மரம் ; கொள்ளுக்காய்வேளை ; பூவாது காய்க்கும் மரம் .
கொழித்தல் தெள்ளுதல் ; ஒதுக்குதல் ; வாருதல் ; பொழிதல் ; கொப்புளித்தல் ; குற்றங்கூறுதல் ; ஆராய்தல் ; பாராட்டிச் சொல்லுதல் ; தொனித்தல் ; செழிப்புறுதல் ; மேலே கிளம்புதல் .
கொழிப்பு கொழிக்கை ; செழிப்பு ; குற்றம் .
கொழிப்பூண்டு குப்பைமேனிப்பூடு .
கொழியல் கொழிப்பு ; தவிடெடுபடாத அரிசி .
கொழியலரிசி நன்றாகக் குற்றித் தீட்டப்படாத அரிசி .