சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| கொறித்துப்பார்த்தல் | நெல் குற்றுவதற்குப் பதமாக உள்ளதா என்று அறிய வாயிலிட்டுப் பதம் பார்த்தல் ; செருக்கால் வெறித்துப் பார்த்தல் . |
| கொறிதலை | நிலவேம்பு . |
| கொறு | கன்றின் வாய்ப்பூட்டு . |
| கொறுக்கச்சி | நாணல்வகை . |
| கொறுக்காய் | காண்க : கொடுக்காய்ப்புளி ; ஈழப்புளி . |
| கொறுக்காய்ப்புளி | காண்க : கொடுக்காய்ப்புளி ; ஈழப்புளி . |
| கொறுக்கு | ஆண்குறி நோய்வகை . |
| கொறுக்கை | நாணல் ; கடல் ; ஆண்குறி நோய்வகை . |
| கொறுக்கோல் | காண்க : கொறு . |
| கொறுகொறுத்தல் | சினங்கொள்ளல் ; குறட்டை விடுதல் . |
| கொறுகொறுவெனல் | ஓர் ஒலிக்குறிப்பு ; சினக் குறிப்பு . |
| கொறுடு | கன்னம் . |
| கொன் | பயனின்மை ; அச்சம் ; காலம் ; விடியற்காலம் ; பெருமை ; வலிமை . |
| கொன்றை | மரவகை ; சரக்கொன்றை ; செங்கொன்றை ; மஞ்சட்கொன்றை . |
| கொன்றைசூடி | கொன்றைமாலை சூடிய சிவன் . |
| கொன்றைப்பழக்குழல் | கொன்றைப்பழத்தைத் துளைத்துச் செய்யப்பட்ட ஊதுகுழல் . |
| கொன்றைவேந்தன் | சிவபெருமான் ; ஔவையார் இயற்றிய ஒரு நீதிநூல் . |
| கொன்றைவேய்ந்தன் | சிவபெருமான் ; ஔவையார் இயற்றிய ஒரு நீதிநூல் . |
| கொன்னாளன் | பயனற்றவன் ; பாவி . |
| கொன்னித்தல் | பேச நாத் திரும்பாதிருத்தல் . |
| கொன்னுதல் | திக்கிப் பேசுதல் , குழறுதல் . |
| கொன்னேச்சன் | மாட்டிற் பற்றும் ஈவகை . |
| கொன்னை | திருத்தமற்ற பேச்சு ; திக்கிப் பேசுகை , குழறுகை ; தொன்னை ; இகழ்ச்சி . |
| கொனை | நுனி . |
| கொற்றப்பெருங்கணி | அரசாங்கச் சோதிடன் . |
| கொற்றம் | வெற்றி ; வீரம் ; வலிமை ; வன்மை ; அரசியல் . |
| கொற்றம்வைத்தல் | அரசாட்சியை ஒருவரிடம் ஒப்புவித்தல் . |
| கொற்றமுரசு | அரசாங்கத்திற்குரிய வெற்றி முரசு . |
| கொற்றவஞ்சி | பகைவரை வாளோச்சி அழித்த அரசனது புகழைப் பெருக உரைக்கும் புறத்துறை . |
| கொற்றவள்ளை | பகைவர் நாடு அழிவதற்கு வருந்துவதைக் கூறும்முகத்தான் அரசன் புகழைச் சொல்லும் புறத்துறை ; நாடழிகை ; தோற்ற வேந்தன் கொடுக்கும் திறை . |
| கொற்றவன் | அரசன் ; வெற்றியுடையோன் ; முடக்கொற்றான் . |
| கொற்றவாயில் | அரசவாயில் ; ஆசாரவாயில் . |
| கொற்றவி | அரசி . |
| கொற்றவுழிஞை | பகைவர் நகரைக் கைக்கொள்ளுதற் பொருட்டு அரசன் படையெடுத்துச் செல்லுவதைக் கூறும் புறத்துறை . |
| கொற்றவை | வெற்றிக்குரியவள் , துர்க்கை . |
| கொற்றவைநிலை | துர்க்கைக்குப் பலியிட்டுப் பரவும் புறத்துறை . |
| கொற்றன் | காண்க : கொத்தன் . |
| கொற்றாள் | கல் மண்களில் வேலைசெய்பவர் . |
| கொற்றான் | இலையற்ற கொடிவகை . |
| கொற்றி | துர்க்கை ; ஒரு வரிக்கூத்துவகை ; பசுவின் இளங்கன்று . |
| கொற்றியார் | துளசிமாலை முதலிய சின்னங்களை அணிந்து திருமால் அடியராய்த் திரியும் பெண் துறவியர் ; கலம்பக உறுப்புகளுள் ஒன்று ; பிள்ளைப்பேற்றிற்குரிய தேவதை . |
| கொற்று | கொற்றுத்தொழில் ; கொற்றர் ; ஒரு கொத்தன் செய்யும் வேலையளவு ; உணவு ; தானியமாகப் பெறும் கூலி . |
| கொற்றுதல் | கொற்றல் . |
| கொற்றுறை | கொல்லன்பட்டரை . |
| கொற்றை | இழிவானது , கேவலமானது . |
| கொற்கொறனல் | தொண்டையின் கரகரப்புக் குறிப்பு . |
| கொறடா | குதிரைச் சவுக்கு ; ஏவுநர் . |
| கொறி | ஆடு ; மேடராசி ; பல் , அலகு முதலியவற்றால் தானியத்தைப் பிரித்துத் தின்னுதல் ; சிறிதுசிறிதாகப் பொறுக்கி உண்ணுதல் ; விட்டு விட்டு ஒலித்தல் ; அலப்புதல் . |
|
|