சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| கோப்பாளி | வரிக்கூத்துவகை ; தேர்ந்த போக்கிரி . |
| கோப்பிடுதல் | ஏற்பாடுசெய்தல் . |
| கோப்பியம் | இரகசியம் ; அடக்கம் . |
| கோப்பு | கோக்கை ; ஒழுங்கு ; அமைப்பழகு ; சீர் ; அலங்காரம் ; கவிவு ; பகட்டு ; பகடி ; உபாயம் ; தூக்கும் சுமை ; காய்கறிகள் ; அலுவலக ஆவணத் தொகுப்பு . |
| கோப்புமுறை | பொருந்தும்முறை . |
| கோப்பெண்டு | அரசமாதேவி . |
| கோப்பெருங்கணக்கர் | அரசாங்கத்துத் தலைமைக் கணக்கர் . |
| கோப்பெருங்கிழவோள் | பட்டத்தரசி . |
| கோப்பெருந்தேவி | பட்டத்தரசி . |
| கோப்பெருமுதியர் | அரசாங்கத்தில் அனுபவம் முதிர்ந்த விருத்தர் . |
| கோப்பெருந்தேவன் | மன்னர்மன்னன் , அரசர்க்கெல்லாம் அரசன் , பேரரசன் , சக்கரவர்த்தி . |
| கோபக்காரன் | சினம் மிகுதியுள்ளவன் . |
| கோபகுண்டம் | எட்டிமரம் . |
| கோபங்காய்ந்தோர் | கோபத்தை அடக்கியவரான முனிவர் . |
| கோபங்கொள்ளுதல் | சினம்கொள்ளுதல் ; புண் முதலியவை கடுமையாதல் . |
| கோபஞ்செலுத்துதல் | சினத்தை வெளிப்படுத்துதல் . |
| கோபத்திரம் | தாமரைத் தண்டிலுள்ள நூல் . |
| கோபத் தீ | உயிர்த் தீக்களுள் ஒன்றான சினம் . |
| கோபதாபம் | பெருஞ்சினம் . |
| கோபதி | எருது ; இந்திரன் ; சிவன் ; சூரியன் . |
| கோபம் | சினம் ; வெறுப்பு ; தம்பலப்பூச்சி ; ஒரு துகில்வகை . |
| கோபவல்லி | பெருங்குரும்பைச்கொடி . |
| கோபன் | சிவன் ; இடையன் ; ஆநிரை காப்போன் . |
| கோபனம் | மறைவு ; இரகசியம் . |
| கோபனை | கவண் . |
| கோபாலகன் | கோக்களைக் காப்பவன் , இடையன் ; கண்ணபிரான் . |
| கோபாலன் | கோக்களைக் காப்பவன் , இடையன் ; கண்ணபிரான் . |
| கோபாலிகை | காண்க : கோபிகை . |
| கோபி | சினமுள்ளோன்(ள்) ; இடைச்சி ; நன்னாரி ; கோபிசந்தனம் ; கோபிசந்தனத்தால் அணியும் நெற்றிக்குறி ; கருநொச்சி . |
| கோபிகை | இடைச்சி . |
| கோபிசந்தனம் | ஒருசார் திருமால் அடியார்கள் அணியும் ஒருவகை மஞ்சள் திருமண் . |
| கோபித்தல் | சினத்தல் ; புண் முதலிய சினத்தல் ; கடிதல் . |
| கோபிதம் | கோபம் . |
| கோபிதாரம் | குராமரம் . |
| கோபிநாதன் | இடைச்சியர் நாயகனான கண்ணபிரான் , திருமால் . |
| கோதடி | கப்பற்கயிற்றை உரைசாமற் காக்குந் தடி . |
| கோதண்டபாணி | கோதண்டத்தைக் கையில் கொண்டவனான இராமன் . |
| கோதண்டம் | வில் ; இராமனது வில் ; புருவநடு ; பண்டைக்காலத்தில் பள்ளிச் சிறாரைத் தண்டிக்கும் தொங்குகயிறு . |
| கோதந்தி | கன்னம் ; தாடை . |
| கோதம் | பொல்லாங்கு ; சினம் ; கோத்திரம் , குலம் . |
| கோதமநதி | கோதாவரி . |
| கோதல் | கேடடைந்த பொருள் . |
| கோதனம் | பசுவின் கன்று ; பசுச்செல்வம் . |
| கோதா | உடும்பு ; மற்கட்டுங் களம் . |
| கோதாட்டம் | வருந்துகை ; வஞ்சிக்கை ; குறும்பு விளையாட்டு . |
| கோதட்டு | வருந்துகை ; வஞ்சிக்கை ; குறும்பு விளையாட்டு . |
| கோதாட்டுதல் | சீராட்டுதல் ; குற்றங்களைப் போக்குதல் . |
| கோதாணி | பெருங்குரும்பை . |
| கோதாரி | கக்கல்கழிச்சல்நோய் , வாந்திபேதி ; கொள்ளைநோய் . |
| கோதாவரி | கோதாவரி ஆறு . |
| கோதாவிரி | கோதாவரி ஆறு . |
| கோதாளை | கப்பற்குழாயின் வாய் . |
| கோதானம் | ஒன்பது கொடைவகையுள் ஒன்றாகிய பசுக்கொடை . |
| கோதி | கோதுமை . |
| கோதிகை | உடும்பு ; முதலை . |
| கோது | சக்கை ; பழம் முதலியவற்றின்தோல் ; பூ முதலியவற்றின் நரம்பு ; குற்றம் ; பயனின்மை ; நெறிதவறுகை ; உள்ளக்களிப்பு . |
| கோதுகம் | உள்ளக்களிப்பு . |
| கோதுகலம் | உள்ளக்களிப்பு . |
| கோதுகுலம் | உள்ளக்களிப்பு . |
| கோதுதல் | மூக்கால் இறகைக் குடைதல் ; மயிர்ச்சிக்கெடுத்தல் ; சிதறச் செய்தல் ; தோண்டுதல் ; துளைத்தல் . |
| கோதும்பை | ஒரு கூலவகை . |
| கோதும | ஒரு கூலவகை . |
| கோதுமை | ஒரு கூலவகை . |
| கோதூளி | மாலைநேரம் . |
| கோதை | பெண்கள் தலைமயிர் ; ஆண்டாள் ; பூமாலை ; முத்தாரம் ; ஒழுங்கு ; பெண் ; சேரன் ; காற்று ; பூதம் ; உடும்பு ; வில்லாளர் கையில் பூணும் தோலுறை ; மரக்காற் பறை ; கௌதமி . |
| கோதையன் | பயனில்லாப் பொருளைக் கூறுவோன் . |
| கோந்தச்சார் | சிறுமையன் , அற்பன் . |
| கோளந்தளங்காய் | கடல்வழியாகக் கொண்டுவரப்படும ஒருவகை மருந்துப் பழம் . |
| கோந்தி | குரங்கு . |
| கோந்து | பிசின் . |
| கோந்துரு | பாட்டனக்குப் பாட்டன் ; ஏளனம் . |
| கோநகர் | தலைநகர் ; கோயில் . |
| கோநாய் | ஓநாய் . |
| கோப்பழித்தல் | சீரழித்தல் . |
| கோப்பன் | கெட்டிக்காரன் ; தேர்ந்த போக்கிரி . |
|
|
|