சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சகசண்டி | பெருமுருடன் , நாணமற்றோன் . |
சகசநிட்டை | ஒருவனுக்கு இயற்கையாய் அமைந்த தியான உணர்வு . |
சகசம் | இயற்கையானது , உண்மை ; கூடப்பிறந்தது ; வட்டில் . |
சகசமலம் | உயிர்கட்கு இயல்பாயுள்ளதாகிய ஆணவமலம் . |
சகசரம் | சிறுகுறிஞ்சாக்கொடி . |
சகசரி | பொனன்னிறங் கலந்த கரும்பூவுள்ள மருதோன்றிமரம் ; வாடாக்குறிஞ்சிமரம் ; தோழி ; மனைவி . |
சகசரிதம் | உடன்நிகழ்வது . |
சகசன் | உடன்பிறந்தான் . |
சகசா | காண்க : சகசரம் . |
சகசாட்சி | உலக முழுவதையும் காண்பவனான சூரியன் . |
சகசாலம் | மாயவித்தை . |
சகசிரம் | ஆயிரம் . |
சகசை | உடன்பிறந்தாள் . |
சகசோதி | பேரொளி ; உலகிற்கு ஒளியாயிருப்பவனாகிய கடவுள் . |
சகட்டடி | மொத்தம் ; சராசரி . |
சகட்டுமேனி | மொத்தம் ; சராசரி . |
சகடக்கால் | வண்டிச்சக்கரம் . |
சகடப்பொறி | சக்கரவடிவான ஓர் எந்திரம் . |
சகடபலம் | நீர்க்கோழி . |
சகடம் | வண்டி ; தேர் ; வட்டவியூகம் ; உரோகிணி ; சக்கரம் ; ஊர்க்குருவி ; துந்துபி ; வட்டில் ; தமரத்தைமரம் . |
சகடயூகம் | சகடவடிவாக அமைக்கப்பெறும் படைவகுப்புவகை . |
சகடயோகம் | குருவுக்கு ஆறு , எட்டு , பன்னிரண்டிற் சந்திரன் இருத்தலால் உண்டாகும் பலன் . |
சகடான்னம் | கெட்ட உணவு . |
சகடி | வண்டி . |
சகடிகை | கைவண்டி . |
சகடு | வண்டி ; தேரைக் குறிக்கும் சதுரங்கக் காய் ; உரோகிணிநாள் . |
சகடை | வண்டி ; துந்துபி என்னும் முரசு ; சாவுச் சடங்கில் ஊதும் ஒரு வாத்தியம் . |
சகடைகொட்டி | முரசடிப்போன் . |
சகடோல் | அம்பாரி , யானைமேற்பீடம் . |
சகண்டை | துந்துபி என்னும் முரசு ; வாச்சியப்பொது . |
சகணம் | சாணம் . |
சகணவர்த்தமரோகம் | கண்ணோய்வகை . |
சகத்குரு | உலககுரு ; பரமகுரு . |
சகத்தன் | நடுநிலையாளன் . |
சகத்திரதாரம் | ஆயிரம் மனைகளை உடைய திருமாலின் சக்கரப்படை . |
சகத்திரதாரை | பல கண்களுள்ள அபிடேகத் தட்டு . |
சகத்திரநாமன் | ஆயிரம் பெயருடையவன் ; கடவுள் ; திருமால் . |
சகத்திரபேதி | பெருங்காயம் ; உலோகமண்வகை . |
சகத்திரவேதி | பெருங்காயம் ; உலோகமண்வகை . |
சகத்திரம் | ஆயிரம் ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று . |
சகத்திரவீரியம் | அறுகம்புல் . |
சகத்து | உலகம் . |
சகதண்டம் | உலகவுருண்டை . |
சகதலப்புரட்டன் | உலகத்தையே புரட்டக் கூடியவன் ; பெருமோசக்காரன் . |
சகதாந்திரி | உலகத்திற்குத் தாயான துர்க்கை . |
சகதாமத்தி | தகரைச்செடி ; கையாந்தகரை . |
சகதி | சேறு ; பொல்லாநிலம் ; பூமி . |
சக்கிரிவதம் | கழுதை . |
சக்கிலி | தோல்வினைஞன் ; சக்கிலியச்சாதி . |
சக்கிலிக்குருவி | மீன்கொத்திப்பறவை . |
சக்கிலிச்சி | சக்கிலிச்சாதிப் பெண் ; சத்திசாரம் என்னும் மருந்து . |
சக்கிலியன் | தோல்வேலை செய்பவன் , செம்மான் . |
சக்கு | கண் ; பூஞ்சணம் . |
சக்குக்கட்டுதல் | பூஞ்சணம் கட்டுதல் . |
சக்குச்சக்கெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
சக்குபு | கரிசாலைப்பூடு . |
சக்குவரி | ஒற்றொழித்து அடியொன்றுக்குப் பதினான்கு எழுத்துகள்கொண்ட நாலடிச் சந்தவிருத்தம் . |
சக்கை | கோது ; பட்டை ; சிராய் ; சிறு மரத்தக்கை ; துப்பாக்கித் தக்கை ; பலா ; காட்டுப் பலா . |
சக்கைப்போடுபோடுதல் | திறமையாகச் செய்தல் . |
சக்கையன் | உடல்வலிமை இல்லாது படுத்திருப்பவன் . |
சக்கையாய்ப் பிழிதல் | கடுமையாக வேலை வாங்குதல் . |
சக்கைவாங்குவாங்குதல் | சக்கையாய்ப் பிழிதல் ; மிகக் கடிந்து பேசுதல் . |
சக்கோலி | ஒரு பூடுவகை . |
சக்தி | சத்தி , சிவனது அருள் ; வல்லமை ; பார்வதி ; ஆற்றல் . |
சக்திபூசை | சத்தியை வழிபடுதல் . |
சக்திமான் | ஆற்றலுள்ளவன் . |
சக்திமுகம் | அரசனது ஆணைப்பத்திரம் . |
சக்தியானுசாரம் | ஆற்றலுக்கு ஏற்ப . |
சக | கூட என்னும் பொருள் தரும் ஒரு முன்னொட்டு |
சககமனம் | இறந்த கணவனுடன் மனைவி உடன்கட்டை யேறுதல் . |
சககாரம் | காண்க : சக்காரம் . |
சககாரி | துணைக்காரணம் . |
சகச்சிரம் | ஆயிரம் ; சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று . |
சகச்சை | பொன்னாங்காணிக்கீரை . |
சகசட்சு | உலகிற்குக் கண்ணான சூரியன் . |
![]() |
![]() |
![]() |